Value Investing - the complete guide to investing in tamil - வால்யூ இன்வெஷ்டிங் செயல்படும் முறை

 Value investing - என்பது ஒரு பொருளை ஒரு சொத்தை அல்லது ஒரு பங்கை அதன் சரியான மதிப்பை அறிந்து வாங்குவது அல்லது முதலீடு செய்வதையே வால்யூ இன்வெஷ்டிங் என்கிறோம்.

 உதாரணமாக ஒரு லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்க நகையை வங்கியில் நாம் அடகு வைத்தால் வங்கியானது அதிகபட்சம் 70 அல்லது 75 ஆயிரம் மட்டும் கடன் தரும். ஏன் என்றால் நாம் கடனை கட்ட தவறினால் அவர்கள் அதை விற்று லாபம் பார்பார்கள். இங்கு வங்கியானது கடனின் மூலம் முதலீடும் செய்துள்ளதை அறியலாம்.

  ஒரு பொருள் அல்லது பங்கின் விலையானது அதன் மதிப்பை அறிந்து முதலீடு செய்வதையே வால்யூ இன்வெஷ்டிங் என்கிறோம்.இந்த வால்யூ இன்வெஷ்டிங் முறையானது பெரும்பாலும் சாமானிய மக்கள் பயன்படுத்துவது கிடையாது. பங்குசந்தையில் முதலீடு செய்பவர்களே  ( வெற்றிகரமான முதலீட்டார்கள் ) இக்கொள்கையினை கொண்டுள்ளனர்.

பங்குசந்தையில் வால்யூ இன்வெஷ்டிங் 

முதன்முதலில் பங்குசந்தையில் வால்யூ இன்வெஷ்டிங் முறையை கையாண்டு வெற்றி கண்டவர் உலக பணக்காரர்களில் ஒருவரான வாரன் ஃபபெட் ஆவார். அவர் ஒரு பங்கின் அடக்க விலையை காட்டிலும் குறைவான விலைக்கு அப்பங்கை வாங்குவதில் தான் வால்யூ இன்வெஷ்டிங் அடங்கி உள்ளது என்று கூறியுள்ளார். 
உண்மையில் ஒருபங்கின் விலையானது தற்போதைய சந்தை விலையை கணக்கில் கொள்ள கூடாது. உதாரணமாக: ( சந்தை உயரும் போது பங்கின் விலையானது உயரும் சந்தை விழும் போது பங்கின் விலை குறைவதை நாம் கவனித்து இருப்போம். )
ஒரு நிறுவனத்தின் உண்மையான மதிப்பு மற்றும் அதன் பங்கின் மதிப்பை முழுமையான ஆய்வின் மூலமே அறிய முடியும்.


வால்யூ இன்வெஷ்டிங் நடைமுறைகள்
         
இம்முறையை நடைமுறைபடுத்தும் போது பலகட்ட பகுப்பாய்வுகள் கணக்கியல்கள் மற்றும் நடைமுறைகள் பின்பற்றபடுகின்றன. வால்யூ இன்வெஷ்டர்கள் ( முதலீட்டாளர்கள் ) இவர்கள் ஒரு பங்கை தேர்ந்தெடுப்பதில் சுலபான ஒன்றாக இருப்பது ஒன்று டிவிடன்ட்
 ( #Dividend ) அதிக மற்றும் தொடர்ந்து டிவிடனட் தரக்கூடிய பங்குகள் நல்ல பங்காக என்னி நீன்டகால முதலீட்டில் இவ்வகை பங்குகளை தேர்ந்தெடுப்பார்கள். பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி? How To Invest Share Market Details In Tamil.

 ஒரு பங்கின்  விலையானது சராசரிக்கும் குறைவாக வர்த்தமாகும் போது அப்பங்கை வாங்க விரும்புவார்கள்.

 பங்கை சரியான விலை தேர்தெடுத்தல் - வால்யூ இன்வெஷ்டர்கள் ஒரு பங்கை தேர்தெடுக்கும் போது அதன் Book Value மற்றும் PE Ratio, PB Ratio ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்வர்.
எளிமையான குறிப்பாக * ஒரு பங்கின் விலையானது 100ரூபாய் அதன் புத்தக மதிப்பானது ( Book Value) 75ரூ இருந்தால் அப்பங்கானது நல்ல பங்காக கருதப்படாது. பங்கின் விலையை விட #Book Value அதிகமான மதிப்பு இருந்தால் தான் நல்ல பங்காகும்.

PE Ratio = Price per share / Earning per share

#PE Ratio என்பது பங்கின் விலை மற்றும் ஒரு பங்கின் மூலம் வரும் வருமானாகும் இவற்றை கொண்டு பங்கின் சரியான விலையை கண்டறியலாம். பொதுவாக PE Ratio குறைவாக இருந்தால் பங்கு நன்றாக உள்ளது என்றும் கூறப்படும். ஆனால் அப்பங்கின் எதிர்கால செயல்பாடுகளை கருத்தில் கொண்டு குறைவாகவும் காட்டப்படும். உதாரணம்: PSU Bank ( அரசு வங்கிகள் ) இவற்றில் அதிக வராக்கடனை கணக்கில் கொண்டு இப்பங்குகளின் PE Ratio குறைந்து காணப்படுவதை கவனித்துக்கொள்ளவும்.

#EPS - Earning per share - இதன் மூலம் ஒரு நிறுவனத்தின் மொத்த பங்குகளில் ஒரு பங்கில் இருந்து கிடைக்கும்  வருமானத்தை அளவிட முடியும். EPS நல்ல நிலையில் இருந்தால் நிறுவனம் நல்ல முறையில் செயல்படுகிறது என கனிக்கலாம்.


நிறுவனத்தின் பணப்புழக்கம் - ஒரு நிறுவனத்தின் பணப்பழக்கம் மற்றும் அதன் சொத்தானது அதிகமாக இருக்கும் பங்குகளை வாங்குவது மிக சிறப்பான ஒன்றாகும். ஏனெனில் இந்த நிறுவனங்களில் கடன் குறைவாக இருக்கும் இல்லாமலும் இருப்பதால் இந்நிறுவனங்கள் சிறப்பாக செயல்படும் என்பதனால் வாங்குவார்கள்.

நிறுவனத்தின் மதிப்பு மற்றும் நிறுவன பங்கின் மதிப்புபானது  அதிகமாக இருந்து விலை குறைவாக இருந்தால் வால்யூ இன்வெஷ்டர்கள் தேடி தேடி வாங்குவார்கள். ஏனென்றால் நீண்டகால அடிப்படையில் இப்பங்குகள் நல்ல லாபத்தினை கொடுக்ககூடியதாகும்.



நீண்டகால ஆய்வு 
 
வால்யூ இன்வெஷ்டர்கள் நீண்ட கால ஆய்வு நீண்ட கால முதலீடு என்ற கொள்கை உடையவர்கள். அதனால் சந்தையானது விழும் பொழுதும் இறங்குமுகமாக இருக்கும் பொழுதும் குறைந்த விலைக்கு பங்குகளை வாங்கி வைத்திருப்பார்கள்.