Mutual Funds என்றால் என்ன? /How To Choose The Right Mutual Fund In Tamil

Mutual Fund என்பது பங்குசந்தை சார்ந்த முதலீட்டு திட்டமாகும். மியூச்சுவல் ஃபண்ட் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது என்று நாம் நிறைய விளம்பரங்களில் பார்த்திருப்போம். ஆனால் இதில் சரியான திட்டத்தில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்தால் லாபம் ஈட்டலாம். இதில் நிறைய வகையான ஃபண்டுகள் உள்ளன. அவற்றில் முக்கியமான சில ஃபண்டுகளை பற்றி இப்பதிவில் சுருக்கமாக காணலாம்.

                    


மியூச்சுவல் ஃபண்டில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்: 

• முதலீட்டாளர்களுக்கு பங்குச்சந்தையை பற்றி போதிய தெளிவின்மை மற்றும் நேரமின்மை போன்றவற்றின் காரணமாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய ஆவர்வம் காட்டுவார்கள்.

• பங்குச்சந்தையில் விற்கப்படும் விலை உயர்ந்த பங்குகளை கூட, மியூச்சுவல் ஃபண்ட் முலம் சிறிய யூனிட்டுகளாக வாங்கிக்கொள்ளலாம்.

• மியூச்சுவல் ஃபண்ட்-களில் ரிஸ்க் குறைவு.

• நாம் முதலீடு செய்யும் தொகை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், நிபுணர்களை கொண்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்வார்கள். இதனால் ரிஸ்க் குறைவதுடன் லாபமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

• பங்குச்சந்தையில் List‌ செய்யப்பட்ட கம்பனிகளின் மிக முக்கியமான தகவல்கள், பொதுவாக ஒரு முதலீட்டாளருக்கு கிடைக்காது. ஆனால், அத்தகைய தகவல்கள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு கிடைக்கும்.

Mutual Fund-யை எப்பொழுது வாங்கலாம்:
Mutual Fund யூனிட்களை நாம் எப்போது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம், மியூச்சுவல் பஃண்ட் நிறுவனங்கள் அதை முதன் முதலாக வெளியிடும் பொழுதோ அல்லது அதற்கு பிறகு கூடவோ வாங்கிக் கொள்ளலாம். யூனிட்கள் (units) முதன் முதலாக வெளியிடும் பொழுது முகப்பு விலைக்கு (Face value) கிடைக்கும். அந்த நிதியினைக் (funds) கொண்டு வாங்கிய பங்குகளின் விலை ஏற்ற இறங்கங்களை பொறுத்து யூனிட்களின் விலை மாறுபடும்.

மியூச்சுவல் ஃபண்ட்-யில் எப்படி முதலீடு செய்வது: 

முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களால் அங்கிகரிக்கப்பட்ட தரகர்கள் (Registered members) மூலமாகவோ, அல்லது நேரடியாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கோ சென்று முதலீடு செய்யலாம். இதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் Application form மற்றும் PAN Number, மற்றும் முதலீடு செய்வதற்கான தொகையை  check அல்லது Demand Draftஎடுத்து செல்ல வேண்டும். * இப்பொழுதெல்லாம் நீங்கள் Online மூலம் நீங்களே ஒரு நல்ல Mutual Fund-களை வாங்கிகொள்ளலாம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்குக் கவனிக்க வேண்டிய அம்சங்கள் | Mutual Fund Details.

முதலில் மியூச்சுவல் ஃபண்ட் பற்றி முலுவதுமாக அறிவோம்:
     
     1.) Direct Mutual Fund
     2.) Regular Mutal Fund

#Direct Mutual Fund - என்பது எந்தவிதமான தரகரும் இல்லாமல் நாமாக ஒரு மியூச்சுவல் ஃபண்டை தேர்ந்தெடுப்பதாகும். இதன் மூலம் ஆண்டிற்கு மொத்த முதலீட்டில் 1% முதல் 1.5% வரை நாம் சேமிக்க முடியும்.

#Regular Mutual Fund - என்பது தரகர் உதவியுடன் மியூச்சுவல் ஃபண்டை தேர்வு செய்யும் முறை. இதனால் நமக்கு லாபத்தில் குறிப்பிட்ட அளவு 1% முதல் 2% வரையிலான வருமானம் குறைவாக கிடைக்கும்.
   
#Expense Ratio - இது மியூச்சுவல் ஃபண்டை நிர்வகிக்கும் நிறுவனங்களின் ஆண்டு கட்டணமாகும். குறைவான Expense Ratio உள்ள ஃபண்டுகளே நீண்ட கால முதலீட்டுகளுக்கு நல்ல லாபத்தை தரும்.
Mutual Fund- களில் இரு வகைகளில் முதலீடுகள் செய்யலாம்.

 1.) SIP - Systematic Investment Plan

   இது வங்கியில் மாதம் மாதம் செலுத்தும் RD - யை போன்றதாகும். இவ்வகையில் காலாண்டு அரையாண்டு அல்லது ஆண்டுக்கு ஒரு முறை என்ற அடிப்படையிலும் முதலீடு செய்யலாம். இருந்தாலும் பொதுவாக அனைவராலும் மாதா மாதம் முதலீடு செய்யும் வகையில் பயன்படுகிறது. இது நீண்ட காலம் முதலீடு செய்ய நினைத்தால்  இம்முறை சிறந்ததாகும்.

சந்தை ஏற்ற இறக்கங்கள் மற்றும் சந்தையின் நேரம் போன்றவை குறித்த எந்தவொரு கவலையுமின்றி, ஒழுங்கான முறையில் முதலீடு செய்வதற்கு உதவுவதால், Mutual Fund முதலீட்டாளர்களின் மத்தியில் SIP பிரபலமடைந்து வருகிறது. மியூச்சுவல் ஃபண்ட்ஸால் வழங்கப்படும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்கள் நீண்டகால முதலீட்டு உலகத்தில் நுழைவதற்கு எளிதான சிறந்த வழியாகும். இதற்கு நீங்கள் நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்வது என்பது முக்கியமானது. அதாவது, முடிவில் அதிக ரிட்டர்ன்களைப் பெறுவதற்கு, ஆரம்பக் கட்டத்திலேயே முதலீடு செய்யத் தொடங்க வேண்டும். உங்கள் முதலீடுகளில் இருந்து சிறந்த ரிட்டர்ன்களை பெறுவதற்கு, ஆரம்பக் கட்டத்திலேயே முதலீட்டை தொடங்குதல் மற்றும் வழக்கமான முறையில் முதலீடு செய்தல் ஆகியவை உங்களின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.

2.) Lumpsum - இது மொத்தமாக வங்கி Fixed Deposit-யை போன்று முதலீடு செய்யும் முறையாகும்.இம்முறையில் நாம் சந்தை ஏற்றமாக இருக்கும் காலத்தில் மொத்தமாக முதலீடுகள் செய்வதால் சந்தை இறக்க காலத்தில் சிறிது குறைவான லாபம் மட்டுமே கிடைக்கும். ஆனால் நீண்டகாலத்திற்கு இம்முறையில் முதலீடுகள் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.

ஃபண்டுகளின் வகைகள்         

 * Index Fund - முக்கிய நிறுவனங்கள்
* Largecap Fund- பெரிய நிறுவனங்கள்

* Midcap Fund - நடுத்தர நிறுவனங்கள்
* Smallcap Fund - சிறிய நிறுவனங்கள் 

* Elss Fund - வரி சேமிப்பு ஃபண்டு
* Debt Fund - கடன் பத்திரங்கள்

* Money Market Fund - பணச்சந்தை 

#Index Fund - என்பது நம் நாட்டில் உள்ள முக்கியமான பெரிய நிறுவனங்களை உள்ளடக்கிய ஃபண்டுகளாகும். நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த திட்டத்தினை தேர்ந்தெடுப்பதே சிறப்பாகும்.

 பங்கு சந்தையில் ஃIndex என்பது நாட்டின் பொருளாதார மதிப்பும் ஆளும் அரசின் மரியாதையும் ஆகும். அதனால் பங்குசந்தை பாதிப்படைந்தாலும் அரசு இந்த ஃIndex யை மட்டும் நன்கு செயல்படும்  வகையில் பார்த்துக்கொள்ளும். இவ்வகை ஃபண்டுகளில் Risk என்பது மிக மிக குறைவாகும். ஃIndex Fund - ன் வருமானம் ஆண்டிற்கு 8% முதல் 12% வரை தரும் .பத்து ஆண்டுகளுக்கு மேல் முதலீடு செய்து வந்தால் கண்டிப்பாக ஆண்டு சராசரியாக 12% வரை கிடைக்கும்.

#Expense Ratio -இதில் மிக குறைவாகும் 0.10% முதல் 0.30% வரை மட்டுமே ஆண்டு கட்டணங்களாக வசூலிக்கப்படும்.

#Largecap Fund - என்பது பெரு நிறுவனங்களின் பங்குகளை மட்டும் வைத்திருக்கும் ஃபண்டு வகையாகும். இதில் பெரிய நிறுவனங்கள் மட்டும் இருப்பதால் Risk குறைவு மட்டும் லாபம் ஆண்டிற்கு 15% வரை கிடைக்க வாய்ப்புகள் உண்டு. பங்குச்சந்தையில் முதல் வகுப்பில் உள்ள பங்குகள் இப்பிரிவில் இருக்குக்கும். ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு 20,000 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் பெரு நிறுவனங்களே இந்த பிரிவில் இருக்கும். Ex: TCS, Wipro,Infosys.
மூன்று ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகள் முதலீடுகள் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.
Expense Ratio - 1% முதல் 2% வரை  ஆண்டு கட்டணங்களாக வசூலிக்கப்படும்.

#Midcap Fund - இது நடுத்தர நிறுவனங்களின் பங்குகளை உள்ளடக்கிய ஃபண்டு வகையாகும். இதில் Risk சிறிது அதிகமாகும். ஆனால் இது ஆண்டிற்கு 12% முதல் 18% வரை இலாபம் வர வாய்ப்புகள் உண்டு.சுமார் 5ஆயிரம் கோடி முதல் 20ஆயிரம் கோடி வரையிலான சொத்து மதிப்பு கொண்ட நிறுவனங்கள் இந்த பிரிவில் இருக்கும்.
Mutual Fund சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது என சொல்வதற்கு இவ்வகை ஃபண்டுகள் கூட காரணமாகும்.

Expense Ratio - இதில் 1% முதல் 2.5% வரை ஆண்டு கட்டணங்களாக வசூலிக்கப்படும். Expense Ratio என்றால் என்ன? Mutual Fund Expense Ratio Details In Tamil.

 #Smallcap Fund - சிறிய நிறுவனங்களின் ஃபண்டுகளை உள்ளடக்கியது. இலாபம் 15% முதல் 20% வரை கிடைக்க கூடும். இதில் Risk மிக மிக அதிகம்.இந்த நிறுவனங்கள் வளர்ச்சியின் ஆரம்பத்தில் இருக்கும்இதனால் வெற்றி பெரும் திறன் உண்டு. சில நிறுவனங்கள் தொழிலில் இருந்து வெளியே செல்லும் நிலையிலும் உள்ளன. நீங்கள் அதிகமான லாபத்தை பார்க்க விரும்பினால் அதிக Risk எடுக்க விரும்பினால் இத்தகைய ஃபண்டுகளில் முதலீடுகள் செய்யலாம். சில ஆண்டுகளில் 10% அளவு நஷ்டத்தினையும் கொடுத்துள்ளது.   
(உதாரணம் - 2017- 2019 ஆண்டு )

#ELSS Fund - இது வரி சேமிப்பு திட்டமாகும் . மூன்று ஆண்டுகள் Lock in period ஆகும். முதலீடு செய்த தொகையை மூன்று ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது. இதில் ஆண்டிற்கு  1.5 லட்சம் வரை Section 80C -ல் வரி சேமிக்க முடியும். இலாபம் 12% முதல் 15% வரை ஆண்டு கட்டணங்களாக வசூலிக்கப்படும். இந்த ELSS ஃபண்டில் முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் நிதியானது பங்குச் சந்தையில் முதலீடு செய்யப் படுவதால் வருமானம் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தைச் சார்ந்திருக்கும். அந்த வகையில், முதலீட்டின் மீது ரிஸ்க் எடுக்க கூடியவர்களுக்கு ஏற்றதாக இந்த ஃபண்ட்  இருக்கிறது. ஆனால், நீண்ட காலத்தில் இந்த ரிஸ்க் என்பது பரவலாக்கப்பட்டுவிடுகிறது. ELSS Mutal Fund என்றால் என்ன? ELSS Mutual Funds Detail In Tamil.

ELSS செய்யப்பட்ட முதலீட்டை அதன் Lock in Period மூன்றாண்டுகள் முடிந்ததும் பெரும்பாலோர்  எடுத்துவிடுகிறார்கள்.  அது தேவை இல்லை. பணத்தை எடுக்கும்போது முதலீடு எவ்வளவு வளர்ந்திருக்கிறது, எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதையறிந்து எடுப்பது அவசியம். நீங்கள் எடுக்க நினைக்கும்போது, முதலீட்டு மீதான வருமானம் குறைவாக இருந்தால் சந்தை ஏறும் வரை காத்திருந்து எடுப்பது லாபகரமாக இருக்கும். 

         
* 5 ஆண்டுகால வரி சேமிப்பிற்கு வங்கி FD - க்கு பதில் இவ்வகை ஃபண்டுகள் சிறந்ததாகும். ELSS Mutual Fund பற்றய முழு விவரங்கள் அறிய.

#Multicap Fund - என்பது அனைத்து வகை Fundகளிலும் செய்யும் முதலீட்டு திட்டம் ஆகும். இந்த பிரிவு மிகவும் குறைவான ஆபத்து உடைய ஃபண்டு வகையாகும். Large,Mid ,Small cap ஆகிய அனைத்து வகை நிறுவனங்களில் சிறந்த ஆபத்து இல்லாத நிறுவனங்களை தேர்வு செய்து முதலீடுகள் செய்யப்படுகின்றன. இவ்வகை ஃபண்டுகள் ஆபத்து எடுக்க விரும்பாத முதல் முறை முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு உகந்தது ஆகும்.

#Debt Fund - என்பது கடன் பத்திரங்கள் சார்ந்த ஃபண்டாகும். இந்த பிரிவில்  குறுகிய கால நடுத்தர மற்றும் நீண்டகால பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகின்றது. இதில் Risk கிடையாது. ஆண்டிற்கு இலாபம் 7% முதல் 10% வரை கிடைக்கும் . வங்கி FD யை விட சிறிது லாபம் அதிகம் வேண்டும் என்பவர்கள் இதில் முதலீடு செய்யலாம். Expense Ratio 0.75% முதல் 1.5% வரை ஆண்டு கட்டணங்களாக வசூலிக்கப்படும்.

#Money Market Fund - என்பது பணச்சந்தை நிதிகள் ஆகும். இதில் Risk குறைவு அல்லத இல்லை என்று கூட கூறலாம். பணத்தை 15நாட்களுக்கு பிறகு எப்பொழுது வேண்டுமானாலும் எடுக்கலாம். இதில் இலாபம் குறைவாக கிடைக்ககூடிய ஃபண்டுகளாகும். இவ்வகை ஃபண்டுகள் SEBI யின் கீழ் கட்டுப்படுத்தபடுகின்றது.