How To Make A Home Budget And Step By Step Guide In Tamil.

ஒரு budget-டை உருவாக்குவது மட்டும் இல்லாமல் அதில் உறுதியாக இருக்க வேண்டும். இது உங்கள் செலவுகளை கண்கானிப்பதை விட ஒரு படி மேலானது.  உங்கள் பணத்தை செலவிடுகிறீர்கள் என்பதை பற்றி விமர்சன ரீதியாக சந்திக்க வேண்டும். ஒவ்வொரு வகையிலும் எவ்வளவு பணம் செலவு செய்கின்றீர்கள் என்பதை அறிய பட்ஜெட் மிக முக்கியமானதாகும்.

                        
பொருளாதார முன்னேற்றம் அடைய என்னுபவர்கள் அனைவரும் budget போட கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் இதன் மூலமே வரவு செலவுகளை அறிய முடியும். அதன் படி செலவுகளை கணக்கிட்டு அதை எந்த வழிகளில் சேமிக்க முடியும் என்று தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் மாதம் 10,000₹  சம்பாதிக்கும் நபராக இருந்தாலும் 1,00,000₹ சம்பாதிக்கும் நபராக இருந்தாலும் பட்ஜெட் என்பது முக்கியமானதாகும். 
நீங்கள் பட்ஜெட்  என்ற ஒன்றை செய்யாவிட்டால் சம்பள பணம் எங்கே செல்கிறது எப்படி செலவுகள் ஆகின்றன என்பதை அறிவது? உங்கள் பணம் எங்கே செல்கிறது என்று தெரியவில்லை என்றால் எவ்வாறு சேமிப்பது.சேமிப்பதற்கான இலக்குகளை அடைய விரும்பினால் நீங்கள் கண்டிப்பாக பட்ஜெட் ஒன்றை போட கற்றுக்கொள்ள வேண்டும்.

மாத வருமானத்தினை எழுதுங்கள்:

#budget-க்கான முதல் படி இதுதான் உங்கள் மாத தொடக்கத்தில் சம்பளம் பெற்ற முதல் நாள் நீங்கள் உங்கள் சம்பாதியத்தை குறிக்கவும். பல செலவுகளுக்கான கட்டணங்கள் மாத சம்பளத்தில் தான் நீங்கள் கட்டுகிறீர்கள் அதனால் உங்கள் செலவுகள் அனைத்தையும் குறிப்பதன் மூலம் செலவுகளை கண்காணிக்க முடியும்.

செலவுகளை பட்டிலிடுங்கள்:

வாடகை, அடமானம், கார் கட்டணம் கிரடிட் கார்ட் கடன் மற்றும் காப்பீடு போன்ற நிலையான பில்களுடன் தொடங்கவும். பின்னர் மற்ற மாத செலவுகள் எப்போதும் போல சாதாரண செலவுகளாக இருக்கும். இவை உங்கள் அத்தியாவசிய செலவீனங்களாக இருக்கும். நீங்கள் செலவழிக்கும் அனைத்து பொழுதுபோக்கு செலவுகள் உட்பட அனைத்து செலவீனங்களையும் குறித்து வைக்க வேண்டும்.

அத்தியாவசிய செலவுகளுக்கு நியாயமான முறையில் செலவிடுங்கள்:

வீட்டு சமையல் செலவுகள் எரிவாயு மற்றும் மின்சார கட்டணங்கள் அனைத்தும் குறித்து வைக்க வேண்டும். பொழுதுபோக்கு மற்றும் நீங்கள் செலவு செய்யும் அனைத்தையும் சேர்த்துதான். இவ்வகை செலவீனங்கள் பூஜ்ஜிய அடிப்படையிலான செலவீனங்கள் என்று அழைக்கிறோம். இவ்வகை செலவுகள் பூஜ்ஜியத்தில் இருந்து உங்கள் வருமானத்தை கழிப்பது போன்றதாகும். ஏனென்றால் இத்தகைய செலவுகளை கண்டிப்பாக வாழ்வில் அனைவரும் செய்தே ஆக வேண்டும்.

தேவையை நிர்ணயம் செய்யுங்கள்:

வாழ்க்கை மிக வேகமானது உணவின் விலை அதிகரிக்கிறது. எரிவாயு விலை அதிகரிக்கிறது. நீங்கள் எதிர்பார்கும் போது வாடகை கட்டணம் உயர்கிறது. ஒவ்வொரு முறையும் பணவீக்கம் உங்கள் செலவுகள் அதிகரிப்பதை நீங்கள் கவனியுங்கள். வேலையின்மை அதிகரிப்பு ஆட்குறைப்பு வேலை இழப்பு ஆகிய காரணங்களால் நிதி சம்பந்தமாக பின்னடைவுகளை நீங்கள் சந்திக்கும் போது அடிப்படை செலவுகளை நீங்கள் சரி செய்ய வேண்டும். நீங்கள் பணக்காரர் ஆவதற்கான குணங்கள் | Best Qualities That Make You Rich.

பூஜ்ஜியத்தை அடிப்படையாக கொண்ட பட்ஜெட் (Zero based budgeting): 

மாத ஆரம்பத்திலேயே உங்களுடைய ஒவ்வொரு ரூபாய்க்கும், வேலை கொடுத்து விட வேண்டும். 

உதாரணமாக, நீங்கள் மாதம் ரூபாய். 40,000 சம்பாதிப்பதாக கணக்கில் கொண்டால், பின்வரும் பூஜ்ஜயத்தை அடிப்படையாகக் கொண்ட பட்ஜெட்டை நீங்கள் உருவாக்கலாம்.

முதலீடு - ரூபாய். 15,000
மளிகை - ரூபாய். 4000
பால் - ரூபாய். 2500
வீட்டுக் கடன் தவணை - ரூ. 10,000
வெளியே சென்று சாப்பிட - ரூ. 1000
மாத சந்தா - ரூ. 500
இணையத் தொடர்பு - ரூ. 1000
மின்சார கட்டணம் - ரூ. 2000
கைபேசி கட்டணம் - ரூ. 500
நன்கொடை - ரூ. 1000
வருட இறுதிச் சுற்றுலா - ரூ. 2000
காப்பீட்டுத் தவணை - ரூ. 500
மொத்தம் - ரூ. 40,000
வந்தப் பணம் - ரூ. 40,000

பட்ஜெட் பணம் - ரூ. 40,000

மிச்சம் - ரூ. 0


ஒழுக்கமாக செலவு செய்யுங்கள்: 

உங்கள் budget-டை கண்காணிக்க ஒரு வாரம் ஆகும். ஆனால் இது நீண்ட காலத்திற்கு உங்கள் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும். உங்கள் பட்ஜெட்டை கட்டுக்குள் வைத்திருக்க மறக்காதீர்கள். நீங்கள் நீண்ட மற்றும் குறுகிய கால நிதி தேர்வுகளை செய்கிறீர்கள் என்றால் அது ஆறுதலான ஒன்றாகும்.

50/30/20 பட்ஜெட் முறை: 

மாத வருமானத்தில் 50% வீட்டு வாடகை வீட்டுக்கடனுக்கான வட்டி செலுத்துதல் போக்குவரத்து செலவுகள் ஆகியவற்றிற்கு செலவிடுதல். மீதம் 30% குடும்ப பொழுதுபோக்கு உணவு உடைகள் போன்றவற்றிற்கு செலவிடலாம்.
                          
20% இது தான் நம் இலக்குகளை அடைய பயன்பட உதவும் தொகையாகும். மாத வருமானத்தில் முதல் செலவு சேமிப்பாக இருப்பது தான் சிறந்த திட்டமிடலாகும்.

சேமிப்பு மற்றும் கடனுக்கு முக்கியதுவம் கொடுங்கள்: 

பணத்தை மிச்சப்படுத்துவதும் கடனை அடைப்பதும் ஒரு புதிய காரை வாங்குவது அல்லது உங்களுக்கு பிடித்த உணவகத்தில் சாப்பிடுவது போன்று உற்சாகமானது அல்ல. ஏனென்றால் பணத்தை மிச்சப்படுத்துவது என்பது எளிமையானது கிடையாது. ஒவ்வொருமுறை சேமிக்க வேண்டும் என்று நினக்கும் போதும் சில செலவுகள் நம்மை பின் தொடர்ந்து வரும். அதனால் உங்கள் வாழ்வில்  சேமிப்பு என்ற ஒன்றை மட்டும் கனவில் கூட மறந்துவிடாமல் தொடர்ந்து சேமிக்க தொடங்குங்கள். சேமிப்பு பழக்கத்தினை உருவாக்கும் வழிகள். How To Save Money Details In Tamil

மூன்று மாத திட்டம்: 

உங்கள் budget-டை அமைத்த பிறகு மறந்துவிட கூடாது. உங்கள் செலவுகள் அதிகரிக்கும் போதும் புதிய செலவுகள் உருவாகும் போதும் உங்கள் பட்ஜெட்டை மாற்றி அமைக்க வேண்டும். புதிய கடன்களை வாங்க வேண்டியிருக்கும் அல்லது சம்பள உயர்வு போன்ற காரணங்களால் கூடுதல் பணம் கிடைக்கலாம் அதனால் ஒவ்வொரு மூன்று மாத காலத்திற்கும் பட்ஜெட்டை மாற்றியமைக்க வேண்டும்.