செல்வமகள் சேமிப்பு திட்டம். Selva Magal Semippu Thittam | சுகன்யா சம்ரிதி யோஜனா.

sukanya samruddhi yojana என்பது
மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்குக் கொண்டு வரப்பட்ட திட்டம். இத்திட்டம் தான் தமிழ் நாட்டில் செல்வ மகள் திட்டமாக செயல்பட்டு வருகிறது. 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்தக் கணக்கை அனைத்து அஞ்சலகங்களிலும் குறிப்பிட்ட வங்கிகளிலும் துவங்க முடியும்.

 இத்திட்டத்தின் கீழ் இது வரை 1 கோடிக்கும் அதிகமான கணக்குகள் துவங்கப்பட்டுள்ளது. தற்போது இந்தக் கணக்கின் பழைய விதி முறைகளில் இருந்து 2019-ல் புதிய சில விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

கணக்கைத் திறத்தல்: 

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் நீங்கள் உங்கள் குழந்தைளுக்கு கணக்கினை தொடங்க நினைத்தால் 
அருகில் உள்ள Post Office அல்லது நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சென்று இக்கணக்கினை தொடங்களாம். SBI, Axis bank, HDFC Bank, ICICI Bank ஆகிய தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் எளிதாக இக்கணக்கினை தொடங்கலாம். 

• ஒரு குடும்பத்தில் இருந்து இரண்டு பெண் குழந்தைகளுக்கு இந்தக் கணக்கை துவங்க இயலும். 

• 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளரால் கணக்கைத் திறக்க இயலும்.

• இத்திட்டத்தின் பதிவு காலம் முழுவதும் இந்தப் பெண்குழந்தை கண்டிப்பாக இந்திய குடியுரிமை பெற்றி இருத்தல் வேண்டும். 

• ஒருவேளை குடியுரிமை மாற்றப்பட்டால் வட்டி பெற இயலாது மற்றும் கணக்கை அத்துடன் உரியக் காலத்திற்கு முன்னரே மூடப்படும்.

காலம்: 

 கணக்கைத் திறப்பதில் இருந்து 15 ஆண்டுகள் வரை இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்ய இயலும். இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போது அதிகபட்ச முதலீடு 14 வருடங்களே இருந்தது குறிப்பிடத்தக்கது.

முதலீட்டு முறை: 

நேரடியாக பணம் செலுத்தும் முறை மட்டும் இல்லாமல் நீங்கள் கணக்கு துவங்கிய வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தில் Mobile banking அல்லது internet banking வாயிலாகவும் சந்தாவை செலுத்தலாம்.

வட்டி விகிதம்: 

 சிறு சேமிப்பு திட்டம் போல செல்வ மகள் திட்டத்தின் வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டும் மாறிக் கொண்டே வரும். 2018 ஜனவரி 1 முதல் 7.6% சதவித வட்டி விகிதம் லாபம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கணக்குகளை துவங்கு உள்ளவர்கள் எல்லா மாதமும் 10-ம் தேதிக்குள் தவணையை கணக்கில் முதலீடு செய்ய வேண்டும். ஒரு வேலை தவறினால் வட்டி குறைந்துவிடும்.

Sukanya-Samriddhi-Account-ssy


ஒரு நிதி ஆண்டில் குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சம் வருடத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய இயலும். 1.5 லட்சத்திற்கு அதிகப்படியான தொகையை டெபாசிட் செய்யும் போது அந்த தொகைக்கு வட்டி மற்றும் லாபம் ஏதும் கிடைக்காது. கூடுதலாக டெபாசிட் செய்த தொகையை எப்போது வேண்டும் என்றாலும் திரும்பப்பெறலாம்.

கணக்கைத் தொடராத போது என்ன ஆகும்? 

நீங்கள் ஒரு ஆண்டிற்கு குறைந்தபட்ச தொகையான 250 ரூபாயை சரியாகச் செலுத்தவில்லை என்றாலும் கணக்கினை பாதியில்  நிறுத்தி விட்டால் இதுவரை  கட்டிய பணமானது 15 வருடங்கள் கழித்து வரும் போது தபால் நிலையத்தின் இயல்பான வட்டியான வருடத்திற்கு 4 சதவீதமாக மட்டுமே பெற இயலும்.

இடை நிறுத்தப்பட்ட கணக்கை மீண்டும் துவங்குதல்: 

நீங்கள் கணக்கினை தொடங்கி சில ஆண்டுகளில்  கணக்கை இடை நிறுத்தப்பட்டு இருக்கும் போது மீணடும் இந்த திட்டத்தினை தொடர நினைத்தால் மீண்டும் கணக்கினை தொடங்கிய வங்கி அல்லது தபால் நிலையத்திற்கு சென்று 50 ரூபாயினை அபராதம் செலுத்தி விடுப்பட்ட கணக்கினை மீண்டும் துவங்கலாம்.

வருமான வரி விலக்கு:  

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் உங்கள் குழந்தைகள் பேரில் முதலீடு செய்யும் தொகைக்குப் பிரிவு 80C-இன் கீழ் வரிவிலக்கைப் பெறலாம். மொத்த முதலீட்டில் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரிவிலக்காக பெற முடியும்.

முதிர்வு: 

 இந்தக் கணக்கு 21 வயது ஆகும் போது அதன் முதிர்வு காலத்தை அடைந்துவிடும். அதற்குப் பிறகு வட்டி ஏதும் அளிக்கப்படாது. ஆனால் செல்வ மகள் சேமிப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போது கணக்கை மூடும் வரை வட்டி அளிக்கப்படும் என்று இருந்தது.

கணக்கை இடமாற்றுதல்: 

கணக்கை வேறு வங்கிகளுக்கோ, அல்லது வேறு தபால் நிலைய கிளைகளுக்கோ மாற்ற விரும்பினால் ரூ.100 கட்டணமாகச் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம். இதற்கு நீங்கள் வீடு மாற்றத்திற்கான விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். 

திரும்பப் பெறுதல்: 

முன்பு ஒருவர் 50 சதவீதம் வரை திரட்டப்பட்ட தொகையில் இருந்து 18 வயது நிரம்பியதற்கான சான்றிதழ் அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ்களை செலுத்தி செலவுக்காக பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இப்போது எவ்வளவு தொகை கட்டணமாகச் செலுத்த வேண்டுமோ அதை மட்டுமே பெற இயலும். மொத்தமாக எடுக்க வேண்டும் என்றால் ஐந்து தவணையாக எடுத்துக்கொல்லலாம். திருமணத்தின் ஒரு மாதம் முன்பு அல்லது திருமணத்திற்கு மூன்று மாதத்திற்குப் பிறகு மொத்த தொகையையும் எடுத்துக் கொள்ளலாம், ஆனால் இதற்கு 18 வயது அடைந்ததற்கான சான்றிதழ் சமர்ப்பித்தல் வேண்டும்.

முதிர்வு காலத்திற்கு முன்பே கணக்கை மூடுதல்: 

 குறைந்தது 5 ஆண்டுகளை நிறைவு செய்த பிறகே கணக்கை மூட இயலும். சில சமயங்களில் ஏதேனும் மருத்துவ உதவி, நோய், காப்பாளர் போன்ற சில காரணங்களின் போது முன்பாகவே பணத்தை எடுக்க அனுமதி வழங்கப்படும். இது போன்ற சூழ்நிலைகளில் தபால் நிலையங்களில் உள்ள சேமிப்பு கணக்குகளின் வட்டி கணக்கிடப்பட்டு வழங்கப்படும். 18 வயது நிரம்பி திருமணம் செய்தற்கான ஆவணங்களை சமர்ப்பித்தால் இந்த திட்டத்தின் வட்டி விகிதத்தின் கீழ் கணக்கை மூடிவிட்டு முதிர்வு தொகையினை பெற முடியும்.

• கணக்கை மூடும் நேரத்தில் அடையாள அட்டை, வீட்டு முகவரி சான்றிதழ், குடியுரிமை சான்றிதழ் போன்றவற்றை சமர்ப்பித்தல் வேண்டும்.