insurance என்பது ஒரு வகையான ஆயுள் காப்பீடாகும். பாலிசிதாரர் குறிப்பிட்ட காலத்திற்கு எடுக்கும் பாலிசி அடிப்படையில் பாதுகாப்பு அளிக்கிறது. சில வகையான திட்டத்தை தேர்ந்தெடுத்தால் பாலிசிதாரர் இறப்பிற்கு பிறகு தான் இதில் பலன்கள் உண்டு. சாதாரண ஆயுள் காப்பீடுகளுடன் ஒப்பிடும் போது இதில் செலுத்த வேண்டிய மாத தொகை மிக குறைவானது. ஆனால் இதில் நீங்கள் செலுத்திய தொகைக்கான மதிப்பு திருப்பி கிடைக்காது. எளிமையாக சொல்ல வேண்டுமானால் இறப்பிற்கு பிறகு மட்டுமே சில insurance-ன் பயன்கள் கிடைக்கும்.
காப்பீட்டு நிறுவனங்கள் தனி நபரின் உடல் நலம் வயது ஆயுட்காலம் ஆகியவற்றின் அடிப்படையில் premium தொகையினை நிர்ணயம் செய்கிறது. சில நிறுவனங்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு தான் சில வகையான பாலிசிகளை கொடுக்க முன்வருகின்றனர்.
premium தொகை நிர்ணயம் செய்யப்பட்டு பாலிசியானது நீங்கள் கட்டிக்கொண்டு இருக்கும் போது இறந்து விட்டால் நீங்கள் எடுத்த பாலிசியின் முக மதிப்பு Face Value அடிப்படையில் உங்கள் குடும்பத்திற்கு Insurance தொகை கிடைக்கும். பாலிசி காலம் முடிந்த பிறகு இறந்தால் எந்த தொகையும் கிடைக்காது. மாறாக நீங்கள் பாலிசி காலம் முடிந்த பிறகு பாலிசியினை புதிப்பித்து கொள்ளலாம். ஆனால் நீங்கள் கட்டி வரும் பழைய premium தொகையே கட்ட முடியாது. பதுப்பிக்கும் போது உங்கள் வயது ஆயுட்காலம் மற்றும் Medical Test அடிப்படையில் புதிய Premium தொகை கட்ட வேண்டி இருக்கும்.
Money back policy VS Term Insurance:
இந்த இரு வகையான பாலிசியில் நாம் எதை தேர்ந்தெடுப்பது என்று குழப்பத்தில் இருக்கலாம் ஆனால் நீங்கள் அதிகம் Money back policy தான் முதலில் தேர்வு செய்ய நினைப்பீர்கள். ஏனென்றால் பாலிசி காலம் முடிந்தபின் நீங்கள் இருந்தால் கட்டிய பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான்.
இருப்பினும் நீங்கள் நினைத்து பாருங்கள் உண்மையில் Money back policy ஆனது மாத primium தொகை மிக அதிகம். Term insurance -இல் 50ஆண்டுகளுக்கு மாதம் 700₹ க்கும் குறைவான தொகையை மட்டுமே கட்ட வேண்டும். 50ஆண்டுகள் என்பது மிக நீண்டகாலம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
50ஆண்டுகள் = 600 மாதம்
600×685 = 4,11,000 ₹
Money back policy அல்லது Endowment policy -யை 20,00,000₹ மதிப்பில் 20ஆண்டுகளுக்கு நீங்கள் எடுத்தால் மாதாந்திர தொகையாக குறைந்து 3,500₹ செலுத்த வேண்டும். பாலிசி காலத்திற்குள் இறந்தால் 20,00,000₹ கிடைக்கும். பாலிசிகாலத்திற்கு பிறகு உங்களுக்கு தொகை முழுவதும் கிடைக்கும். 20ஆண்டுகளுக்கே மாதம் 3500₹ செலுத்த வேண்டும் என்றால் 50ஆண்டுகளுக்கான premium தொகையினை சாமானிய மக்களால் கட்டுவது மிக கடினம்.
Money back policy-ல் கட்டிய பணம் திரும்ப கிடைத்தாலும் அதன் மாத primium தொகை அதிகம். Term insurance-ல் primium தொகை மிக குறைவு. நீங்கள் Term Insurance-யை தேர்ந்தெடுத்து மாதம் 700₹ பாலிசியை செலுத்திய பிறகு மாதம் 3000₹ ஆண்டுக்கு 8% வட்டி தரும் திட்டம் அல்லது Mutual fund ஆகியவற்றில் சேமித்தால் கூட 50ஆண்டுகளுக்கு பிறகு மிக அதிக தொகை கிடைக்கும். Term insurance-யை தேர்ந்தெடுப்பதன் மூலம் 50இலச்சத்திற்கான காப்பீடும் கிடைக்கும் அதற்கு ஈடான சேமிப்பு தொகையும் நமக்கு கிடைக்கும்.
எவ்வளவு தொகைக்கான காப்பீடு எடுக்க வேண்டும்:
உங்களுக்கு எவ்வளவு தொகைக்கான காப்பீடு எடுக்க வேண்டும் என்ற கேள்வி வரலாம் உண்மையில் இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். உங்களுக்கு திருமணம் நடந்து குழந்தைகள் அனைவரும் கல்லூரி படிப்பை முடிக்கவில்லை என்றால் நீங்கள் கண்டிப்பாக உங்கள் ஆண்டு வருமானத்தில் 10 மடங்கு அளவிற்கு காப்பீட்டு தொகையினை எடுக்க வேண்டும்.
உங்கள் ஆண்டு வருமானம் 5,00,000இலட்சம் எனில் 50இலட்சத்திற்கான காப்பீடு எடுக்க வேண்டும்.
Insurance நிறுவனத்தை தேர்வு செய்தல்:
நீங்கள் Term insurance எடுக்க தயாராகி விட்டால் அதற்கான நிறுவனத்தை பற்றி முதலில் தெரிந்திருக்க வேண்டும். இன்று 100 மேற்பட்ட insurance திட்டங்களும் நிறுவனங்களும் உள்ளன. அதன்படி ஒரு பாலிசியை எடுக்கும் முன் அந்த நிறுவனம் இதற்கு முன் எத்தனை பாலிசிகளுக்கு Refund கொடுத்து உள்ளது என அறிய வேண்டும்.அதுமட்டும் இல்லாமல் அந்த நிறுவனத்தின் CSR அளவுகளை காண வேண்டும். CSR ஒரு நிறுனத்தின் எத்தனை insurance உரிமை கோரப்பட்டுள்ளது அதில் எத்தனை பாலிசி தாரர்களுக்கு செட்டில் செய்யப்பட்டுள்ளது என்பதை குறிக்கும் அறிக்கையாகும். அந்த insurance நிறுவனத்தின் மீது எத்தனை complaints பதிந்துள்ளது என முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இவற்றின் அடிப்படையில் நீங்கள் ஒரு பாலிசியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
Term Insurance வாங்குவதற்கான காரணங்கள்:
• உங்களின் கடன்கள் அனைத்தும் நிலுவையில் இருந்தால் உங்களுக்கு பிறகு உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளால் கட்ட முடியாது எனில் நீங்கள் கண்டிப்பாக பாலிசியினை எடுக்க வேண்டும்.
• இது வரை உங்கள் ஒருவரின் சம்பளத்தில் மட்டுமே உங்கள் குடும்பம் நடந்து வந்தால் உங்களுக்கு பிறகு உங்கள் குடும்பம் பொருளாதார ரீதியில் நன்றாக இருக்க வேண்டும் என்றால் பாலிசியானது முக்கியமாகும்.
• உங்கள் குழந்தைகளின் கல்வி திருமணம் ஆகியவற்றின் உங்கள் கனவுகள் கண்டிப்பாக இந்த பாலிசிகளை எடுப்பதன் மூலம் நீங்கள் நிம்மதியாக இருக்கலாம்.
* insurance என்பது முதலீடு கிடையாது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் வரி சேமிப்பிற்காக ஒரு insurance பாலிசியை எடுப்பது என்பது தேவையற்றது. ஏனெனில் இதில் எந்த வித இலாபமும் கிடையாது. நீங்கள் காப்பீடு எடுப்பதற்காக ஒரு நல்ல பாலிசியை தேர்தெடுத்து கொள்ளுங்கள்.