கிரெடிட் கார்டு என்றால் என்ன? What Is Credit Card & Full Details In Tamil.

கிரெடிட் கார்டு என்பது ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனத்தினால் அதனுடைய வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் ஒரு கடன் அட்டை ஆகும். அந்தக் Credit Card-ய பயன்படுத்தி ஒரு வாடிக்கையாளர் எந்த ஒரு பொருளோ அல்லது சேவையையோ விலைக்கு வாங்க இயலும். அதன் பின்னர் ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் அந்த வாடிக்கையாளர் தான் வாங்கிய பொருள் அல்லது பெற்ற சேவைக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். 

கடன் அட்டை என்று சொல்லப்படுகின்ற Credit Card-களில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் பயன் தரக் கூடிய வகையில் உள்ளன. உதாரணமாக: ஆன்லைனில் பொருள்களை வாங்குவதில் அதிகம் விருப்பம் கொண்டவர்கள், Shopping Credit Card  பயன்படுத்துவது சிறந்தது. அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்பவர்கள், Travel Credit Card பயன்படுத்துவது நல்லது. இப்படி எத்தனை வகையான கிரெடிட் கார்டுகள் உள்ளன ஒவ்வொன்றும் எவ்வகையில் பயன் தரக் கூடியன என்பதைப் புரிந்து கொண்டால் பல நன்மைகள் கிடைக்கும்.

                      
கிரெடிட் கார்டின் வகைகள்: 

கிரெடிட் கார்டுகள் பல்வேறு வகைகளில் வருகின்றன. ஒவ்வொரு வகையான கிரெடிட் கார்டும் பயனருக்கு குறிப்பிட்ட நன்மைகள் மற்றும் சலுகைகளை அனுபவிக்க அனுமதிக்கிறது, எனவே உங்கள் தேவைகளுக்கு ஏற்ற சிறந்த ஒன்றை தேர்வு செய்யுங்கள்.

  Travel Credit Card: 

டிராவல் கிரெடிட் கார்டுகள் அனைத்து ஏர்லைன் டிக்கெட் முன்பதிவுகள், பேருந்து மற்றும் இரயில் டிக்கெட் முன்பதிவுகள், கேப் புக்கிங்குகள் மற்றும் பலவற்றில் தள்ளுபடிகளை அனுபவிக்க உதவும். ஒவ்வொரு கொள்முதல் மீதும் ரிவார்டு பாயிண்ட்கள் பெறப்படும். எதிர்கால முன்பதிவுகளில் தள்ளுபடிகளை பெறுவதற்கு பயன்படுத்தக்கூடிய ஏர் மைல்களை சம்பாதிக்க ரிவார்டு பாயிண்ட்களை ரெடீம் செய்யவும். VIP விமான நிலைய லவுஞ்சுகளுக்கு இலவச அணுகலை அனுபவியுங்கள், தள்ளுபடி விகிதங்களில் டிக்கெட்களை புக் செய்யுங்கள், மற்றும் டிராவல் கிரெடிட் கார்டுகளுடன் இன்னும் பல அனுபவியுங்கள்.

Fuel Credit Card's: 

எரிபொருள் கூடுதல் கட்டண தள்ளுபடிகளை பெறுவதன் மூலம் எரிபொருள் கிரெடிட் கார்டு உடன் உங்கள் மொத்த போக்குவரத்து செலவுகளை குறைக்கவும். இத்தகைய கிரெடிட் கார்டுகளுடன் செய்யப்பட்ட எரிபொருள் வாங்குதல்கள் கூடுதல் ரிவார்டு பாயிண்ட்களை பெறுவதற்கு உதவும். எரிபொருள் செலவுகளில் அனைத்து ஆண்டும் கணிசமான சேமிப்புகளை செய்யுங்கள்.

Rewards Credit Card's:

இந்த வகையான கிரெடிட் கார்டுகள் குறிப்பிட்ட கொள்முதல்கள் மற்றும் பரிவர்த்தனைகள் மீது ரிவார்டு பாயிண்ட்களுடன் வருகிறது. பெறப்பட்ட Bonus Point எதிர்கால கொள்முதல் மீதான தள்ளுபடிக்கு அல்லது உங்கள் மாதாந்திர கிரெடிட் கார்டு பில்களை குறைப்பதற்கு ரெடீம் செய்யலாம்.

Shopping Credit Cards: 

ஷாப்பிங் கிரெடிட் கார்டுகளுடன் கொள்முதல்கள் அல்லது பரிவர்த்தனைகள் மீது தள்ளுபடிகளை அனுபவிக்க பங்குதாரர் கடைகளில் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் ஷாப்பிங் செய்யுங்கள். கேஷ்பேக்குகள், தள்ளுபடி வவுச்சர்கள் மற்றும் பல ஆண்டு சுற்று அனுபவியுங்கள்.

பாதுகாக்கப்பட்ட கிரெடிட் கார்டு: 

கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை அனுபவிக்க நிலையான வைப்புத்தொகைகள் மீது ஒரு பாதுகாப்பான கிரெடிட் கார்டை பெறுங்கள். இந்த வகையான கிரெடிட் கார்டு பயனர்களின் Credit Scores  சரியான பயன்பாட்டுடன் அதிகரிக்க உதவுகிறது.

கிரெடிட் கார்டின் பயன்பாடு: 

பணத்தைப் பெறுவதற்கும் அதனைப் பயன்படுத்துவதற்கும் பல வழிமுறைகள் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் கிரெடிட் கார்டு முறை. காகிதப் பணத்திற்குப் பதிலாக வந்த பிளாஸ்டிக் பணம்தான் கிரெடிட் கார்டு. கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி, கடனாக, நமக்குத் தேவையான பொருட்களை வாங்கவும் சேவைகளைப் பெற்றுக் கொள்ளவும் முடியும். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் இந்தக் கடன் தொகையை வங்கிக்குத் திருப்பிச் செலுத்த வேண்டும். காலதாமதம் ஏற்பட்டால் வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும். இந்தியாவில் புழக்கத்தில் உள்ள கிரெடிட் கார்டுகளின் வகைகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்துத் தெரிந்து கொள்வோம்.

நினைவில் கொள்ள வேண்டியவை: 

நடைமுறையில் அதுவும் இந்தியாவில் மிகச் சிறந்த கிரெடிட் கார்டு என்று எதுவும் இல்லை. ஆனால் நீங்கள் நிச்சயமாகப் பின்வரும் காரணிகள் அடிப்படையில் சந்தையில் உள்ள கிரெடிட் கார்டுகளை ஒப்பிடுவதன் மூலம், நீங்களே உங்களுக்கு உகந்த ஒரு கிரெடிட் கார்டைத் தேர்வு செய்யலாம்.

How To You Live A Debt Free Life? கடன் இல்லாமல் எவ்வாறு வாழ்வது.


சலுகையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்: 

சலுகை காலம் என்பது 30 நாட்களுக்கான பில்லிங் காலத்தையும் மற்றும் கூடுதலாக அறிக்கை உருவாக்கம் மற்றும் பணம் செலுத்தல் தவணை தேதிக்கு இடையிலான 15 முதல் 20 நாட்களையும் கொண்டுள்ளது. எனவே, மொத்த வட்டி-இல்லா காலத்தை 50 நாட்கள் வரை நீட்டிக்க முடியும். பில்லிங் காலம் தொடங்கும் போது விலை உயர்ந்த பர்சேஸ் செய்வது முழு சலுகைக் காலத்தைப் பயன்படுத்த உங்களுக்கு உதவுகிறது.

சேர்க்கை கட்டணம்: 

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் வரலாறு எனக் கருதப்பட்ட நிகழ்வு மாறி நிகழ்வுக்கு வந்து விட்டது. அந்த நிகழ்வுகள் 2009க்கு பிறகு தெரிய ஆரம்பித்தது. சந்தையில் உள்ள பல அட்டைகளுக்குச் சேர்க்கை கட்டணம் என்று எதுவும் இல்லை. எனினும் நீங்கள் ஒரு கிரெடிட் கார்டு வாங்கும் முன்னர் அதை ஆராய்ந்து பார்த்து முடிவெடுங்கள். 

ஆண்டு கட்டணம்: 

கிரெடிட் கார்டுகளுக்கு நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டிற்கு உரியக் கட்டணத்தை செலுத்த வேண்டும். நீங்கள் இலவச கிரெடிட் கார்டு என்கிற சொல்லை எங்கேனும் கண்ணுற்றால் அது பொதுவாக இலவச சேர்க்கை கட்டணம் மற்றும் இலவச முதலாமாண்டு கட்டணத்தைக் குறிக்கும். நீங்கள் இரண்டாம் ஆண்டு முதல் ஆண்டு கட்டணத்தை செலுத்த வேண்டும். எனவே இதை நன்றாக நினைவில் நிறுத்திக் கொண்டால் பின்னாட்களில் வரும் குழப்பங்களில் இருந்து விடுபடலாம். 

வெகுமதி புள்ளிகளை உங்களுக்குப் பிடித்த கடை அல்லது சேவை வழங்குநரிடம் பணமாக மாற்றிக் கொள்ளும் வசதி

கிரெடிட் லிமிட் என்பது: 

கிரிடிட் கார்டு லிமிட் என்பது ஒவ்வொரு மாதமும் கிரிடிட் அட்டையை பயன்படுத்தி கூடுதல் வட்டி கட்டணங்கள் ஏதும் இல்லாமல், வங்கி எவ்வளவு பணத்தை எடுக்க அனுமதிக்கிறது என்பதுதான். 
 இந்த லிமிட் உங்களின் சம்பளம், பணியின் வகை, கடன் வரலாறு, திருப்பி செலுத்தும் திறன் ஆகிய காரணிகளை அடிப்படையாக கொண்டு வங்கியால் நிர்ணயிக்கப்படும். பொதுவாக அதிகச் சம்பளம் பெற்றால் அதிக கடன் வரம்பும், குறைந்த சம்பளம் பெற்றால் குறைந்த கடன் வரம்பும் இருக்கும். 

 நீங்கள் அடிக்கடி விமான பயணம் மேற்கொள்ளும் நபர் அல்லது அடிக்கடி ஒரு தொடர் சங்கிலி கடையில் பொருள் வாங்கும் நபர் எனில் உங்களுக்கு ஏற்ற ஒரு கோ-பிராண்ட் கிரெடிட் கார்டு தேர்ந்தெடுக்கலாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்களுக்கு நீங்கள் அடிக்கடி வாங்கும் கடையின் காரணமாக அதிகமான வெகுமதி புள்ளிகள் கிடைக்கும். அதோடு உங்களுடைய வழக்கமான பிற செலவுகளுக்குரிய வெகுமதி புள்ளிகளும் தடையின்றி கிடைக்கும். பணத்தினை எவ்வாறு சேமிப்பது மற்றும் அதற்கான வழிமுறைகள் பற்றி அறிய.

ரொக்க பணத்தின் மீதான வட்டி விகிதம்: 

 நீங்கள் சரியான காரணங்களுக்காகக் கிரெடிட் கார்டு வாங்குகின்றீர்களா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஏனெனில் கிரெடிட் கார்டுகள் மிகவும் குறுகிய கால கடன் சார்ந்த விற்பனைக்கு மட்டுமே உகந்தது. நீண்ட கால விற்பனை மற்றும் ரொக்க பணப் பரிமாற்றத்திற்கு இதில் மிகவும் அதிக வட்டி விதிக்கப்படும். 

கிரெடிட் கார்டுக்கான தகுதி: 

நீங்கள் முதன் முதலில் ஒரு கிரெடிட் கார்டுக்காக விண்ணப்பிக்கப் போகின்றீர்கள் எனில் உங்களின் தகுதிக்கு உரிய அட்டைக்கு மட்டுமே விண்ணப்பிக்க இயலும். இது ஒரு சில குறிப்பிட்ட அம்சங்களை உடையக் Credit card விண்ணப்பிப்பதை விட இது மிகவும் முக்கியமானது. கிரெடிட் கார்டு வழங்குபவர் அல்லது ஒரு அதிகாரியின் எந்த ஒரு வாக்குறுதியையும் நம்பாதீர்கள். அவர்கள் எழுத்து வடிவில் அல்லது மின்னஞ்சல் வடிவில் குறிப்பிட்டால் மட்டுமே அவர்களுடைய வாக்குறுதிக்கு உரிய மரியாதை கிடைக்கும்.

உங்களுக்கு எந்த ஒரு வாக்குறுதி அளிக்கப்பட்டால், அது கருப்பு வெள்ளை வடிவில் உங்களுக்குக் கிடைத்த பின்னர் மட்டுமே அதன் மீதான உங்களுடைய முடிவை எடுங்கள். வெற்று விண்ணப்பப் படிவங்கள் அல்லது ஆவணங்களில் கையெழுத்திட வேண்டாம். மேலும் உங்களுடைய எதிர்கால நலன் கருதி, நீங்கள் கிரெடிட் கார்டுக்குச் சமர்ப்பித்த எல்லா ஆவணங்களின் நகல்களையும் மிகவும் பாதுகாப்பாக வைத்திருங்கள். 

கிரெடிட் கார்டு மற்றும் சிபில்: 

உங்கள் கடன் அறிக்கையை பெற்றிடுங்கள். சிபில் வலைத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். அதில் குறிப்பிடப்பட்ட வழிமுறையைப் பின்பற்றவும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுடைய மற்றும் உங்களுக்கு ஜாமீன் அளித்தவரின் கடன் அறிக்கையை பெற்றிடலாம். உங்களுடைய கடன் அறிக்கையை நன்றாக ஆராய்ந்து பார்த்திடுங்கள். அதில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதைக் கண்டு பிடித்து சிபில் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி சரி செய்திடுங்கள். உங்களுடைய கடன் அறிக்கையில் உள்ள பிழைகள் உங்களுக்குக் Credit Card கிடைப்பதை தடை செய்து விடலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கிரெடிட் கார்டுகள் எப்படி வேலை செய்கின்றன: 

எந்தவொரு பரிவர்த்தனைக்கும் நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்தும்போது, உங்கள் சார்பாக, வணிகர் கட்டணமானது கார்டு வழங்கும் நிதி நிறுவனத்தால் செலுத்தப்படுகிறது. உங்களின் அங்கீகரிக்கப்பட்ட கடன் எல்லைக்குள் நீங்கள் விரும்பும் பல பண பரிமாற்றங்களை நீங்கள் செய்யலாம்.உங்கள் கார்டின் பரிவர்த்தனை விவரங்களை ஒவ்வொரு மாதமும் கணக்கு அறிக்கை மூலம் பெறலாம்.

• கிடைக்கக்கூடிய கடன் மற்றும் பண வரம்பு

• குறைந்தபட்ச செலுத்த வேண்டிய தொகை

• மொத்த கட்டணம் செலுத்தும் தேதி
விதிக்கப்படும் வட்டி மற்றும் கட்டணங்கள்

• பணம்செலுத்தும் முறைகள்
எனினும், உங்கள் வழங்குநருக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் உங்கள் கார்டில் இருந்து பயன்படுத்திய தொகையை மீண்டும் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும், பொதுவாக இது 20 நாட்கள் ஆகும். நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், நிலுவையில் இருக்கும் செலுத்த வேண்டிய தொகையை செலுத்தும் வரை உங்கள் வழங்குபவர் கூட்டிணைப்புடன் வைத்திருக்கும் ஒரு வட்டிக்கு வரி விதிக்கிறார்.


* Credit Card-யை பெறுவதற்கு முன்பு நீங்கள் பல்வேறு வகையான கிரெடிட் கார்டுகளின் நிறுவனங்கள் மற்றும் கட்டணங்களை பற்றி தெரிந்துகொள்ளவும். குறிப்பிட்ட நிதித் தேவைகளுக்கு பொருந்தக்கூடிய கிரெடிட் கார்டு வகைகளை தேர்வு செய்த பிறகு அதை பெறுவதற்கு வங்கிகளிடம் உறுதி செய்து கொள்ளவும். Credit Card பெற்ற பிறகு அதை பற்றிய தகவல் மற்றும் விளக்கம் பெற நேரடியாக வங்கி கிளைகளுக்கு செல்லவும். Phone மூலம் எந்த தகவல்களையும் பெறவும் வேண்டாம் எந்த தகவல்களையும் கொடுக்கவும் வேண்டாம்.