டீமேட் கணக்கு என்றால் என்ன? How To Open Demat Account Details In Tamil.

 ஒரு வங்கியில் பணம் சேமிப்பதற்கு முன்பு ஒரு கணக்கு எவ்வாறு துவங்குகிறோமோ அதே போல தான்  பங்குச் சந்தையில் இறங்குவதற்கு இரண்டு கணக்குகளைத் தொடங்க வேண்டும். Demat Account மற்றும் Trading Account என்ற இரண்டுதான் அவை. பங்குகளை வாங்கி, விற்க இந்த இரண்டு வகையான அக்கவுன்ட்டுகளும் தேவை.  

முந்தைய காலங்களில் ஒரு கம்பெனியின் பங்கை நாம் வாங்கினால் அதற்கு அடையாளமாக Share Certificate கொடுப்பார்கள். இந்த Certificate கொடுப்பதில் பலவிதமான அசௌகரியங்கள் இருந்தன. அவை காகிதத்தில் அச்சிடப்பட்டவை என்பதால் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் கிழிந்துவிடும் அல்லது தொலைந்து போகவும் வாய்ப்புண்டு இதுபோன்ற பல அபாயங்கள் அதில் இருந்தன.

                      
Demat கணக்கை துவங்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை: 

மின்னணு வடிவில் பங்குகளை இருப்பு வைத்துக்கொள்ளும் கணக்கே Demat கணக்கு. இந்தியாவில் பங்குச்சந்தை மூலம் பங்குகளை வாங்கவோ விற்கவோ வேண்டுமென்றால் அதற்கு Demat கணக்கு கட்டாயமானது. மேலும், இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங்கில் (IPO ) பங்குகளுக்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டுமென்றால், Demat கணக்கு வழியாக மட்டுமே உங்களால் விண்ணப்பிக்க முடியும். SEBI-யின் வழிகாட்டுதல்களின் படி, Dematerialized வடிவத்தைத் தவிர வேறு எந்த ஒரு வடிவத்திலும் பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியாது. ஒரு Demat கணக்கை திறப்பதற்கு முன்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை. 

டீமாட் கணக்கு எதனால் அவசியமாகிறது: 

 SEBI வழிமுறைகளின்படி, பங்குகளை Dematerialized நிலையிலேயே பங்குகளை வாங்கவோ, விற்கவோ முடியும். அதனால், நீங்கள் பங்குச் சந்தை மூலமாக பங்குகளை வாங்கவோ, விற்கவோ விரும்பினால், உங்களுக்கு Demat கணக்கு கட்டாயத் தேவையாகிறது.
 Internet வந்தபிறகு இந்த காகித Certificate  ஒழித்துக் கட்டிவிட்டு, எலெக்ட்ரானிக் முறையில் அதை டிஜிட்டலாக மாற்றிவிட்டார்கள். நீங்கள் வாங்கும் பங்குகளை உங்களுக்கென இருக்கும் அக்கவுன்ட்டில் வைத்திருக்கத் தான் இந்த டீமேட் கணக்கு. நீங்கள் வங்கியில் வைத்திருக்கும் சேமிப்புக் கணக்கைப் போலவோ அல்லது Locker போலவோ இந்தக் கணக்கை நினைத்துக் கொள்ளலாம்.
சரி, Trading கணக்கு என்றால். அதுவும் சிம்பிளான விஷயம்தான். புரோக்கரிடம் நீங்கள் வைத்துள்ள டிரேடிங் கணக்கில் பணம் செலுத்தி பங்கை வாங்கவோ, விற்கவோ செய்வீர்கள். அவ்வாறு நீங்கள் வாங்கிய பங்குகள் உங்களது டீமேட் கணக்கில் வரவாகி விடும். அதேபோல் நீங்கள் பங்குகளை விற்கும் பொழுது உங்கள் டீமேட் கணக்கில் இருந்து விற்ற பங்குகளை கழித்துவிட்டு, அந்தப் பங்குகளை வாங்கியவர் கணக்கிற்கு மாற்றப்படும்.

இது எவ்வாறு செயல்படுகிறது: 

 நீங்கள் பங்குகள் வாங்கும்போது, தரகர் அப்பங்குகளை உங்கள் Demat கணக்கில் வரவு வைப்பார். இது பங்குகளின் விவர அறிக்கையிலும் பிரதிபலிக்கப்படுகிறது. நீங்கள் Online வழியாக பங்குகள் வாங்கினால், உங்கள் முதலீட்டுப் பங்குகளின் நிலவரத்தை, ஆன்லைனில் நேரடியாகவே பார்த்துக் கொள்ளலாம். பொதுவாக, தரகர் உங்கள் பங்குகளை வர்த்தகம் நடந்த நாளுக்கு இரண்டு நாட்களுக்குப் பின் உங்கள் கணக்கில் வரவு வைப்பார். நீங்கள் உங்கள் பங்குகளை விற்கும்போது, உங்கள் தரகரிடம், விற்கப்படும் பங்குகள் பற்றிய தகவல்கள் நிறைந்த ஒரு வழங்குமுறை குறிப்பை, தந்து வைக்க வேண்டும். இப்பங்குகள் உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட பின், உங்களுக்கு பங்குகள் விற்றதற்கான பணம் வழங்கப்படும். 

நீங்கள் இணையத்தின் வழியாக பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தால், விற்கப்பட்ட பங்குகள் மற்றும் பணப்பட்டுவாடா செய்யப்பட்ட தகவல்களை உங்கள் டீமாட் கணக்கு தானாகவே பிரதிபலிக்கும். இந்தியாவில், NSDL மற்றும் CDSL என்ற இரண்டு சேமிப்புக் களஞ்சியங்கள் உள்ளன. இவ்விரு களஞ்சியங்கள் மூலமாகவே பல பங்குதாரர்கள் தங்கள் பங்குகளை நிலைநிறுத்துகின்றனர். 

இந்த Demat கணக்குகளை யார் பராமரிக்கிறார்கள் என்றால் NSDL & CDSL என்ற இரு நிறுவனங்கள் தான் இந்தியாவில் உள்ள அனைத்து Demat கணக்குகளையும் வைத்துக் கொண்டு பராமரித்து வருகிறது. முதலீட்டாளர்களுக்கும், இந்த இரு நிறுவனங்களுக்கும் இடை யில்  DP  (Depository Participant) என்பவர் இருப்பார். இந்த DP பெரும்பாலும் உங்களது புரோக்கராகவே இருப்பார். இப்படி நாம் வாங்கும் பங்கு தொலைந்து போக வாய்ப்பு உண்டா என நீங்கள் கேட்கலாம். அதற்கு வாய்ப்பே இல்லை. ஒருவேளை நம் கணக்குக்கு வரவேண்டிய பங்குகள் வேறு ஒரு கணக்குக்கு தவறுதலாகப் போயிருந்தால், அதை எளிதாகக் கண்டுபிடித்து, திரும்பப் பெறமுடியும். எனவே, கவலை வேண்டாம்.

 Demat கணக்கை அடிப்படை சேவைகள்: 

உங்கள் டீமேட் கணக்கில் உள்ள பங்குகள், Mutual Fund-கள், கடன் பத்திரங்கள் போன்றவற்றின் மதிப்பு ரூ.2 லட்சத்திற்குக் குறைவாக இருந்தால் மட்டுமே உங்கள் தற்போதைய கணக்கை இந்தக் கணக்காக மாற்றிக் கொள்லாம். தங்களிடம் உள்ள டீமேட் கணக்கின் மொத்த மதிப்பு ரூ.0 - ரூ.50,000/- ஆக இருந்தால், உங்கள் கணக்கின் மீது எந்தவொரு கட்டணமும் வசூல் செய்யப்பட மாட்டாது. உங்களது டீமேட் கணக்கின் மொத்த மதிப்பு ரூ.50,001 - ரூ.2,00,000/- ஆக இருந்தால், உங்கள் கணக்கின் மீது ரூ.100 கட்டணமாக வசூல் செய்யப்படும். ரூ.2,00,000/- மேல் நீங்கள் பங்கு வர்த்தகம் செய்தால்  உங்களுடைய நிறுவனம் செல்லும் கட்டணத்தினை செலுத்த வேண்டும்.

Demat அக்கவுன்ட்டை யாரெல்லாம் திறக்கலாம்:

இந்திய குடிமக்கள் (மைனர் உட்பட), கம்பெனிகள், பார்ட்னர்ஷிப் நிறுவனங்கள், டிரஸ்ட்டுகள், இந்து கூட்டுக் குடும்பத்தினர் ( HUF ), இந்திய வம்சா வழியினர், வெளிநாடு வாழ் இந்தியர் மற்றும் FII என்று கூறப்படும் அந்நிய முதலீட்டாளர்கள் போன்ற அனைவரும் திறக்கலாம். இந்திய வம்சாவழியினர் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் விதமான கணக்குகளை திறக்கலாம்.

Account திறக்க என்னென்ன தேவை: 

1. விண்ணப்பம் ( இதில் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் நீங்கள் கையெழுத்துப் போட வேண்டும் )

2. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் + நாமினி புகைப்படம்.

3. Pan Card Photo

4. Address Proof

5. Bank Account

6. கணக்கு திறப்பதற்கான கட்டணம்.

மேற்சொன்னவை அனைத்தும் உங்களிடம் இருக்கிறதா? இல்லை என்றால் உடனடியாக அதைப் பெறுவதற்கான வேலைகளில் இறங்குங்கள். சரி, இந்த புரோக்கிங் அக்கவுன்ட்டை எந்த நிறுவனத்தில் திறக்கலாம், அல்லது எவ்வாறு புரோக்கிங் நிறுவனத்தைத் தேர்வு செய்வது என்கிற கேள்வி பலருக்கும் வரும்.


டீமாட் கணக்கு திறப்பதினால் கிடைக்கும் நன்மைகள்: 

பங்குகளை பொருள் வடிவில் வைத்திருக்க வேண்டிய தேவை இல்லாமை புதுமையான குலுக்கல் முறை இல்லாமை ஒரேயொரு பங்கைக் கூட வர்த்தகம் செய்யக்கூடிய வாய்ப்பு முத்திரை வரி இல்லாமை மாற்று ஒப்பாவணம் தேவையில்லாமை தேவைப்பட்டால், நீங்கள் என்எஸ்டிஎல் மற்றும் ஸிடிஎஸ்எல் ஆகியவற்றின் வளைத்தளங்களுக்கு https://nsdl.co.in/ மற்றும் http://www.cdslindia.com/ முறையே சென்று பார்க்கலாம். நீங்கள் பங்கு சந்தையில் சிறப்பாக செயல்படும் பங்குகளை வாங்க வேண்டுமா?

புரோக்கிங் நிறுவனத்தில் கணக்கு வைப்பதற்கு முன் அனைவரும் தவறாமல் கேட்கும் கேள்வி, ஒவ்வொரு முறை பங்கு வாங்கும் போதும் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்பதே! நாம் காசு விஷயத்தில் கறார் என்றாலும், இது கடைசியாக கேட்கப்பட வேண்டிய கேள்வி என்பதே என் கருத்து. புரோக்கரேஜ் கட்டணத்தைவிட, நீங்கள் தேர்வு செய்யப் போகும் புரோக்கர் எவ்வளவு காலமாக தொழிலில் உள்ளார், அவரைப் பற்றியோ அல்லது அவரது புரமோட்டர்களைப் பற்றியோ செபியில் பெரிய வழக்குகள் ஏதேனும் உள்ளதா, அந்த புரோக்கரிடம் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளருக்கு எவ்வளவு அனுபவம் இருக்கிறது, Online /Offline வசதிகள் எவ்வாறு உள்ளது, உங்களுக்கு பர்சனல் அட்வைஸ் தர அல்லது வழி நடத்திச் செல்ல அந்நிறுவனத்தில் ஆட்கள் உள்ளனரா, உங்களுடைய ரிலேஷன்ஷிப் மேனேஜருக்கு என்னென்ன தகுதி இருக்கிறது என்பது போன்ற பல விஷயங்களைத்தான் நீங்கள் முதலில் கேட்டு முடிவெடுக்க வேண்டும்.

இதற்காக புரோக்கரேஜ் கட்டணம் பற்றி தெரிந்து கொள்ளத் தேவையில்லை என்று சொல்லவில்லை. NSE மற்றும் BSE விதிமுறைகளின்படி, வாடிக் கையாளரிடமிருந்து 2% மேல் புரோக்கரேஜ் வாங்கக்கூடாது. ஆனால், வாடிக்கையாளருக்குக் கொடுக்கும் சேவையைப் பொறுத்து, டெலிவரி புரோக்கரேஜ் ஆக 0.50% முதல் 1% வரை புரோக்கர்கள் கட்டணம் வசூலிக்கிறார்கள். தினசரி வர்த்தகத்திற்கு (அன்றே வாங்கி அன்றே விற்பதற்கு) இன்னும் குறைவாக (0.10% - 0.30%) கட்டணம் வசூலிக்கிறார்கள். 

வங்கிக் கணக்கில், எவ்வாறு உங்கள் வங்கி இருப்பு என்பது உங்கள் கையில் தொகையாக இல்லாமல், வங்கி கணக்கேட்டில் வரவாக, குறிக்க மட்டுமே படுகிறதோ, Demat கணக்கும் அது போலவே செயல்படக்கூடிய ஒன்றாகவே உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிக் கணக்கில் எவ்வாறு ஆவணங்கள் மற்றும் பற்று வரவு ஆகியன மின்னணு வடிவில் உள்ளதோ, அவ்வாறே Demat கணக்கிலும் இருக்கும்.