Expense Ratio என்றால் என்ன? Mutual Fund Expense Ratio Details In Tamil.

Expense Ratio என்பது வருடாந்திர கட்டணம், அவை நிதி ஆலோசகரால் வசூலிக்கின்றன. செலவு விகிதம் ஆனது பங்குதாரர்களின் NAV சதவீதத்தில் வசூலிக்கப்படுகிறது. செலவின் முக்கிய கூறுகள் சட்ட செலவு, விளம்பர செலவு, நிர்வாக செலவு மற்றும் மேலாண்மை செலவு போன்றவை. இந்த கட்டணம் கமிஷன் அல்லது விற்பனை கட்டணம் மற்றும் போர்ட்ஃபோலியோ வாங்குதல் மற்றும் விற்பனை செய்வதற்கு ஏற்படும் செலவுகள் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது. நிதியின் சொத்துகளில் மிகச் சிறிய பகுதியைக் கழிப்பதன் மூலம் செலவு விகிதம் தினசரி வசூலிக்கப்படுகிறது. 

                         

மேலாண்மை கட்டணம்: 

 பரஸ்பர நிதி வீடுகள் பரஸ்பர நிதி திட்டங்களை நிர்வகிக்க நிதி மேலாளர்களை நியமித்தல். போர்ட்ஃபோலியோவின் மேலாளர்களுக்கு ஈடுசெய்ய நிர்வாக கட்டணம் அல்லது முதலீட்டு ஆலோசனைக் கட்டணம் பயன்படுத்தப்படுகிறது. சராசரியாக இந்த கட்டணம் ஆண்டுதோறும் 0.50 சதவீதம்– நிதிகளின் சொத்துகளில் 1.0 சதவீதம். 

நிர்வாக செலவுகள்: 

 நிதியை இயக்குவதற்கான செலவுகள். இதில் வாடிக்கையாளர் ஆதரவு, தகவல் மின்னஞ்சல்கள், தகவல் தொடர்புகள் போன்றவை அடங்கும்.

 விநியோக கட்டணம்: 

 விநியோக கட்டணம் என்பது பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களால் விளம்பரப்படுத்தப்படுவதற்கும், நிதியை மேம்படுத்துவதற்கும் சேகரிக்கப்படுகிறது. 

பரஸ்பர நிதியில் லாபம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது: 

பரஸ்பர நிதி பரவலான முதலீட்டிற்கு ஒரு அருமையான முகாந்திரமாக உள்ளது. உங்களது முதலீடானது , மற்றவர்களுடைய முதலீட்டுடன் சேர்ந்து, பல பங்குகள், கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது. அந்த பரஸ்பர நிதி திட்டத்தில், அலகுகளை வாங்குவதன் மூலமாக, நீங்கள் ஒரு பங்குதாரர் ஆகிறீர்கள். பரஸ்பர நிதி திட்டத்தின் லாபத்தில், உங்களுடைய அலகுகளுக்கு ஏற்ப லாபமானது கிடைக்கிறது.

உதாரணமாக:

பரஸ்பர நிதி திட்டத்தின் அலகின் விலை ரூபாய். 10.
உங்களிடம் உள்ள மொத்த அலகுகள் 10 என்றால், நீங்கள் முதலீடு செய்த பணம் = 10 x 10 = 100 ரூபாய்.
ஒரு வருடம் கழித்து, முதலீடுகளின் வளரச்சி காரணமாக, அலகின் விலை ரூபாய். 11 ஆகிறது என்று வைத்துக் கொள்வோம்.

முதலீட்டின் மதிப்பு = 10 x 11 = 110 ₹.
உங்களது முதலீட்டின் லாபம் = (110 - 100) /100 x 100 = 10% லாபம்.

பரஸ்பர நிதியின் செலவுகள் யாவை

பரஸ்பர நிதி முதலீடானது, சில செலவுகளை உள்ளடக்கியது. ஏனென்றால், நீங்கள் நேரடியாக முதலீடு செய்வதில்லை. ஒரு பரஸ்பர நிதி நிறுவனத்தின் திட்டம் வாயிலாக முதலீடு செய்கிறீர்கள். அந்த பரஸ்பர நிதி நிறுவனமானது, பல்வேறு காரணிகளின் அடிப்படையில், செலவு கணக்கிடுக்கிறது.

செலவு விகிதம் =
மொத்த பரஸ்பர நிதி திட்டத்தின் செலவுகள் /
மொத்த பரஸ்பர நிதி சொத்து மதிப்பு

உதாரணமாக:

உங்களது பரஸ்பர நிதி திட்டத்தில் மொத்தமாக ரூபாய். 10,00,000 சொத்து மதிப்பாக உள்ளது என்று கணக்கிடுவோம். மொத்த செலவானது ரூபாய். 1,00,000 என்று கணக்கிடப்படுகிறது என்றால்,

100000 / 1000000 = 0.1 என்பது செலவு விகிதம்

எனவே, உங்களுடைய லாபமான 10% இல், 0.1% செலவு விகிதத்தினைக் கழித்து, 9.9% உங்களுடைய லாபமாக கணக்கிடப்படும்.


பரஸ்பர நிதியின் செலவுகளின் அங்கங்கள் யாவை:

இந்த பரஸ்பர நிதி திட்ட செலவானது, பின்வரும் காரணங்களுக்காக இருக்கலாம்.

• Management Fees
• Legal charges
•  service tax

• Commission fees. 
• Regular schemes fees.
• Marketing and distribution expenses
• Investor education

•  Custodian charges
• Record keeping
• Auditing

• Operating expenses
• Trustee expenses

• Transfer agent expenses
• Previous year expense 
• Trading charges


பரஸ்பர நிதியின் செலவு விகிதத்தின் சில முக்கிய அம்சங்கள்:

நம்மால் தேர்ந்தெடுக்கக் கூடிய ஒன்று பரஸ்பர நிதி திட்டத்தில் முதலீடு செய்யும் போது, அந்த திட்டம் எவ்வாறு செயல்படும், பங்கு சந்தை எதிர்காலத்தில் எவ்வாறு இருக்கும், பணம் எவ்வாறு பெருகும் என்பதைப் போன்ற பல்வேறு விடயங்கள், நமது கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால், எந்த பரஸ்பர நிதி திட்டத்தின் செலவு விகிதம் சரியாக உள்ளது என்று பார்த்து முதலீடு செய்வது, நமது கையில் உள்ளது. எனவே, பரஸ்பர நிதி திட்டத்தின் செலவு விகிதம் குறைவாக உள்ளதா என்று பார்க்க வேண்டியது அவசியம். கொஞ்சம் அதிகமான செலவு விகிதம் இருந்து, ஆனால், அது நல்லதொரு திட்டமாக, ஆண்டாண்டு காலம் லாபத்தினை வழங்கியிருந்தால், கொஞ்சம் அதிகமான செலவு விகிதத்தினை குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை.

Direct Mutual Fund -இன் மேல் செலவு விகிதமானது நேரடி திட்டங்களில் குறைவு. எனவே, நேரடித் திட்டங்களில் முதலீடு செய்வது நலம். அவற்றில் மூன்றாம் நபர் சார்ந்த தரகுத் தொகை(commission) இல்லாத காரணத்தால், செலவு குறைவு.
குறியீடு சார்ந்த திட்டங்கள் மேல். செலவு விகிதமானது குறியீடு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில்(Index funds) குறைவு. ஏனென்றால், அங்கு பரஸ்பர நிதி மேலாளரின் ஈடுபாடு சார்ந்த பங்குகளை வாணிபம் செய்யும் தரகு செலவுகள் இல்லை. பரஸ்பர நிதி மேலாளருக்கு கொடுக்கும் அதிக சம்பளம் தேவையில்லை.

சிறிய செலவு விகித வித்தியாசம் நீண்ட காலத்தில், பெரிய வித்தியாசத்தினைத் தரும். சிறிய செலவு விகித வித்தியாசம் கூட நீண்ட காலத்தில், பெரிய பண பெருக்க வித்தியாசத்தினைக் கொடுக்கும்.