பங்குச்சந்தையை நோக்கி உங்களை ஈர்த்தது எது என்றால் நீங்கள் எதை கூறுவீர்கள் கண்டிப்பாக பணத்தை இருமடங்காக மும்மடங்காக மாற்ற வேண்டும் என்று தான் கூறுவீர்கள். புதிய வர்த்தகர்கள் பங்குச்சந்தை மூலம் பெரிய அளவில் பணம் சம்பாதிக்க முடியும் என்ற ஆசையினால் மட்டுமே ஈர்க்கப்படுகின்றனர். இந்த வகையான உற்சாகம் நிச்சயம் நல்ல உந்துதலாக இருக்கலாம்.
இந்த நடைமுறைகள் வெற்றிகரமான செயலாக முடியாது. சில சமயங்களில் சந்தையின் ஏற்றத்தினால் இலாபங்கள் கிடைக்க கூடும். இத்தகைய நிலைகளில் நாம் மகிழ்ச்சியின் விளிம்பில் நாம் மொத்த பணத்தினையும் அல்லது கடன் பெற்றாவது சந்தையில் முதலீடுகள் செய்வோம். இதுவே நமக்கு ஆபத்தானதாக கூட முடியலாம். ஏனெனில் சந்தையில் நிகழும் ஏற்ற இறக்கங்களால் முதலீட்டில் இலாபம் மட்டும் அல்ல நஷ்டத்தினை சந்திக்க வாய்ப்புகள் உள்ளது.
உண்மையில் புதிய வர்த்தகர்கள் பெரிய லாபத்தின் ஆற்றலால் திசை திருப்பபட்டு அதிஷ்டத்தின் அடிப்படையில் வர்த்தகத்தை தொடங்குகின்றனர். ஊகம் மற்றும் அதிஷ்டத்தின் அடிப்படையில் வர்த்தகத்தினை தொடர முடியாது. உண்மையில் வர்த்தகம் என்பது கணக்கீடுகள் ஆகும். நிறுவனங்களை பற்றிய முழுமையான தெளிவுகள் மற்றும் கணக்கீடுகள் ஆகியவற்றை அடக்கியதே வர்த்தகம்.
நீங்கள் கடினமான சம்பாதித்த பணத்தினை வைத்து சூதாடக்கூடாது. சூதாட்டத்தினால் இங்கு யாரும் பணக்காரர்கள் ஆனது கிடையாது.நிச்சயமாக ஒரு முறை இருமுறை வெற்றி அடைந்திருப்பீர்கள். அதை அதிஷ்டம் என நினைத்து அந்த தவறை நீண்டகாலம் தொடர்ந்து செய்வது சரியல்ல அது வெற்றியைத்தறாது.
பங்குச்சந்தையை சூதாட்டமாக எண்ணாமல் ஒரு சிலர் பங்கு பெரும் போட்டி அல்லது விளையாட்டாக எண்ணிப்பார்க்க வேண்டும். போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் கண்டிப்பாக பயிற்சி பெற வேண்டும். அதைப்போல பங்கு வர்த்தகத்தில் வெற்றிபெற கண்டிப்பாக பயிற்சி அவசியமானதாகும். சந்தை எவ்வாறு நகர்கிறது எந்த காரணங்களினால் ஏற்றம் அடைகிறது என்று அறிந்திருக்க வேண்டும். அப்பொழுது தான் சந்தையில் வெற்றியாளராக இருக்க முடியும்.
உண்மையில் நீங்கள் முதலீட்டினை துவங்கும் முன் ஒரு வழிகாட்டியின் ( Stock Broker ) உதவியை நாடலாம். ஒரு பங்குச்சந்தை வெற்றியாளரின் அறிவுறையை கேட்கலாம். அதில் எந்த தவறும் இல்லை அவரின் வெற்றியினை மட்டும் பார்க்காமல் அவரின் வெற்றி தோல்வியினையும் கற்க வேண்டும். எல்லோரிடம் இருந்தும் கற்றுக்கொள்ளுங்கள் அவர்களின் வெற்றி தோல்வியினையும் சேர்த்துத்தான். ஆனால் அவர்களின் முதலீடுகளை பின்பற்றாதீர்கள். நீங்கள் பங்கு வர்த்தகத்தில் தன்னிறைவு பெறும் வரை கற்றுக்கொள்ளுங்கள்.
இழப்புகளை ஒரு சிறிய சிவப்பு நிறமாக மாற்ற கற்றுக்கொள்ளுங்கள். அனைவரும் பங்கு வர்த்தகத்தில் Average என்ற ஒன்றை மட்டும் செய்ய வேண்டாம் என்பார்கள். உண்மையில் நீங்கள் ஒரு நல்ல பங்கை தேர்வு செய்திருந்து அது சந்தையின் போக்கால் நஷ்டத்தினை தரும் தருவாயில் இருந்தால் நீங்கள் Average செய்வது மிக முக்கியமாகும். அப்பொழுது தான் நம் இழப்புகள் சிறிய அளவாக இருக்கும். சந்தை மிகவும் பெரியது மற்றும் பரந்தது இதில் சரியான முறையில் முதலீடுகளை செய்தால் இலாபத்தினை குவிக்கலாம். இல்லையென்றால் உங்கள் வாழ்சேமிப்பு என்று சொல்வதற்கு எதுவும் இருக்காது.
புதிதாக வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் இத்தகைய திட்டத்தினை கடைபிடப்பது கிடையாது. முதலில் ஒரு வர்த்தகத்தை தொடங்கும் முன் ஒரு திட்டங்களை வகுப்பது புத்திசாலி தனமாகும். இந்த பங்கினை ஏன் வாங்குகிறோம். எந்த காரணத்தினால் இப்பங்கின் விலை எதிர்காலத்தில் உயரும் என கணித்த பின் ஒரு பங்கினை வாங்குவது வர்த்தகத்தினை தொடர்வது நல்லதாகும்.
வர்த்தகம் என்பது என்ன:

புதிதாக பங்குச்சந்தையில் நுழையும் பொழுது அவற்றினை பற்றிய முழுமையான புரிதல் மிக அவசியமானதாகும். அதுமட்டும் இல்லாமல் நாம் முதலீடு செய்யும் பணம் நம் வாழ்நாள் சேமிப்பு பணமாக இருக்க கூடாது. வாழ்நாள் சேமிப்பு பணம் இல்லாமல் உபரியாக இருக்கும் பணத்தினை மட்டுமே முதலீட்டில் ஈடுபட வேண்டும்.
பங்கு வர்த்தகம் சூதாட்டம் கிடையாது:
நீங்கள் கடினமான சம்பாதித்த பணத்தினை வைத்து சூதாடக்கூடாது. சூதாட்டத்தினால் இங்கு யாரும் பணக்காரர்கள் ஆனது கிடையாது.நிச்சயமாக ஒரு முறை இருமுறை வெற்றி அடைந்திருப்பீர்கள். அதை அதிஷ்டம் என நினைத்து அந்த தவறை நீண்டகாலம் தொடர்ந்து செய்வது சரியல்ல அது வெற்றியைத்தறாது.
பங்குச்சந்தையை சூதாட்டமாக எண்ணாமல் ஒரு சிலர் பங்கு பெரும் போட்டி அல்லது விளையாட்டாக எண்ணிப்பார்க்க வேண்டும். போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் கண்டிப்பாக பயிற்சி பெற வேண்டும். அதைப்போல பங்கு வர்த்தகத்தில் வெற்றிபெற கண்டிப்பாக பயிற்சி அவசியமானதாகும். சந்தை எவ்வாறு நகர்கிறது எந்த காரணங்களினால் ஏற்றம் அடைகிறது என்று அறிந்திருக்க வேண்டும். அப்பொழுது தான் சந்தையில் வெற்றியாளராக இருக்க முடியும்.
Money Management - பண மேலாண்மை:
நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய முக்கிய ஒன்று பண மேலாண்மை. ஏனென்றால் இது நமது மூலதனத்தினை பாதுகாக்கிறது. அனைத்து புதிய வர்த்தகர்களும் செய்யும் புதிய தவறு பணம் முழுவதையும் ஒரே வர்த்தகத்தில் வைப்பது தான் .இதனால் சிறு தவறுகள் நடந்தாலும் நமது மொத்த பணமும் பாதிக்கப்பட்டு விடும். பங்கு சந்தையில் முதலீடுகள் தொடங்க முதலில் செய்ய வேண்டியவை | Start Investing In Share Market.
ஒரு நிறுவன பங்கினை வாங்க நினைத்தால் உங்கள் மொத்த முதலீட்டு தொகையில் 10% மட்டுமே முதலீடுகள் செய்ய வேண்டும். நாம் என்னும் சாத்தியமான வருமானம் என்பது லாபமாகவும் இருக்கலாம் அல்லது நஷ்டமாகவும் இருக்கலாம். இது நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது. இழப்புகளை பற்றி நாம் மறக்க கூடாது. நீங்கள் வருமானத்தினை மட்டுமே கணவு காண்கிறீர்கள். நஷ்டத்தினை நினைப்பதே கிடையாது. நாணயத்தின் இருப்பக்கங்கள் எப்படி வேண்டுமானாலும் திரும்பலாம் என்பதை நினைக்க வேண்டும்.
கற்றல் மிக முக்கியம் ( Learning )
மக்கள் பொதுவாக உதவி குறிப்புகளை நம்பி முதலீடுகள் செய்வார்கள். உதவி குறிப்புகள் (Advice)மற்றும் பிறரின் சொல்லிற்காக ஒரு பங்கினை நாம் வாங்க கூடாது. நாம் வண்டி ஓட்ட பழகும் போது பிறரின் உதவியை கேட்கலாம். ஆனால் வாழ் நாள் முழுவதும் பிறரின் உதவியை கேட்பது முட்டாள்தனமான செயல் ஆகும். How To Buy A Good Stock Instruction For Beginners - சிறந்த பங்கை தேர்வு செய்வது எப்படி?
உண்மையில் நீங்கள் முதலீட்டினை துவங்கும் முன் ஒரு வழிகாட்டியின் ( Stock Broker ) உதவியை நாடலாம். ஒரு பங்குச்சந்தை வெற்றியாளரின் அறிவுறையை கேட்கலாம். அதில் எந்த தவறும் இல்லை அவரின் வெற்றியினை மட்டும் பார்க்காமல் அவரின் வெற்றி தோல்வியினையும் கற்க வேண்டும். எல்லோரிடம் இருந்தும் கற்றுக்கொள்ளுங்கள் அவர்களின் வெற்றி தோல்வியினையும் சேர்த்துத்தான். ஆனால் அவர்களின் முதலீடுகளை பின்பற்றாதீர்கள். நீங்கள் பங்கு வர்த்தகத்தில் தன்னிறைவு பெறும் வரை கற்றுக்கொள்ளுங்கள்.
பங்குகளின் இழப்புகளை குறைத்துக்கொள்ளுங்கள் (Averaging)
இழப்புகளை ஒரு சிறிய சிவப்பு நிறமாக மாற்ற கற்றுக்கொள்ளுங்கள். அனைவரும் பங்கு வர்த்தகத்தில் Average என்ற ஒன்றை மட்டும் செய்ய வேண்டாம் என்பார்கள். உண்மையில் நீங்கள் ஒரு நல்ல பங்கை தேர்வு செய்திருந்து அது சந்தையின் போக்கால் நஷ்டத்தினை தரும் தருவாயில் இருந்தால் நீங்கள் Average செய்வது மிக முக்கியமாகும். அப்பொழுது தான் நம் இழப்புகள் சிறிய அளவாக இருக்கும். சந்தை மிகவும் பெரியது மற்றும் பரந்தது இதில் சரியான முறையில் முதலீடுகளை செய்தால் இலாபத்தினை குவிக்கலாம். இல்லையென்றால் உங்கள் வாழ்சேமிப்பு என்று சொல்வதற்கு எதுவும் இருக்காது.
பழிவாங்கும் வர்த்தகம் :
பழிவாங்கும் வர்த்தகத்தை நீங்கள் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இது எல்லவற்றையும் விட ஒரு பெரிய கொலையாளி. நீங்கள் ஒரு பங்கினை வாங்கிய பின் அப்பங்கானது நல்லமுறையில் செயல்படவில்லை என்றால் நீங்கள் நட்டத்தினை குறைக்க அப்பங்கில் மொத்த முதலீட்டையும் செய்து நட்ட சதவீதத்தினை குறைக்க நினைத்தால் அது ஒரு முட்டால் தனமான செயலாகும். நீங்கள் உணர்வு பூர்வமாக முதலீடுகள் செய்கிறீர்கள். இதைச்செய்வதன் மூலம் பேரழிவை சந்திக்க நேரிடும்.
இழப்புகளை ஈடு செய்வதற்காக நீங்கள் முதலீடுகளை செய்யக்கூடாது. ஏனென்றால் அது ஆபத்தை தரக்கூடியது.நீங்கள் உணர்ச்சிவசப்படும் போது வர்த்தகம் செய்கிறீர்கள் என்றால் ஒரு முறைக்கு பல முறை யோசிந்து பார்க்க வேண்டும். முதலீட்டின் மீதான உங்கள் உணர்ச்சி அதிகமானதை உணர்ந்தால் நீங்கள் ஒருமுறைக்கு பல முறை யோசிக்க வேண்டும்.
Make A Plan - திட்டத்தை வகுக்கவும்
நல்ல அனுபவம் வாய்ந்த வர்த்தகர்கள் சிறந்த திட்டங்களின் அடிப்படையில் சந்தையில் முதலீடுகளை தொடங்குகின்றனர். அவர்கள் சந்தையின் சரியான காலத்தினை கணித்து பங்குகளை வாங்குகிறார்கள். அதேபோல் சரயான நேரத்தில் பங்கை விற்று விட்டு வெளியேறுகின்றனர்.