தமிழின் பெருமை திருக்குறள் | Tirukkural Details In Tamil

திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது. தமிழின் தலையார்ந்த நூல் திருக்குறள் அதை உலகப் பொதுமறை என்று அழைப்பதில் நாம் பெருமை கொள்வோம். குறள் காலத்தால் அழியாதது என்றும் வியந்து பாராட்டுகிறோம். அதை வாழ்க்கை நெறி என்றும் கூறி மகிழ்கின்றோம்.

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை.

பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் தற்சமயம் சிறப்பாகக் கருதப்படுவது திருக்குறள் முனுசாமியின் உரை. 

தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக் கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது திருக்குறளின் மொத்தமான நோக்கம். 

தமிழினத்தின் பழம்பெரும் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் பற்றி உலகம் வியக்கிறது என்றால் அதற்கு தமிழ் இலக்கியம் முக்கிய காரணங்களில் ஒன்றாகும் தமிழகத்தின் மைலாப்பூர் வாழ் நெசவாளர் குலத்தோன்றலான திருவள்ளுவர் மானுடத்தின் தலைசிறந்த புலமைப் பெரியோர்களில் ஒருவராகக் கணிப்பிடப'படுகிறார். ஒட்டுமொத்தம மனிதச் சிந்தனையின் சிறந்த பிழிவு என்று திருக்குறள் போற்றப்படுகிறது இருப்பினும் திருக்குறளின் அழியாப்புகழ் தமிழினத்திற்கும் தமிழ்மொழிக்கும் மட்டும் சொந்தம் என்றால் மிகையல்ல.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக ஆக்கம் பெற்ற திருக்குறள் தமிழினம் அப்போது அடைந்திருந்த  நாகரீக வளர்ச்சிக்கு உதாரணமாகத் திகழ்கிறது அப்படியானதொரு சமுதாயத்தில் வாழ்ந்த ஒருவரால்தான் திருக்குறள் போன்ற இலக்கியத்தை படைக்க முடியும். பொது மானுடத்திற்கும் பொருத்தமான முறையில் தமிழர் வாழ்வின் அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய விதத்தில் குறட்பாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தனது காலத்திற்குறிய இலக்கிய மரபுகளை திருவள்ளுவர் மீறியுள்ளதை எம்மால் வியப்புடன் பார்க்க முடிகிறது எந்தவொரு இடத்திலாவது ஒரு இனத்தையோ சாதியையோ, மதத்தையோ மதப்பிரிவையோ அரசையோ ஆளும் வர்க்கத்தையோ அவர் குறிப்பிடாமல் அல்லது உயர்த்தியோ தாழ்த்தியோ பேசாமல் விட்டுள்ளதை குறளின் மிகப்பெரிய சிறப்பம்சமாக கருதமுடியும் தமிழ் என்ற சொல்லைக்கூட குறள் நூலில் எங்காயினும் காணமுடியவில்லை. தலைமகன் இல்லாதா நீதி நூல் என்றும் குறளை வகைப்படுத்தமுடியும். 
தமிழ்ப் பாரம்பரியத்தின் படி ஒரு வாழ்க்கைத் தத்துவ நூல் அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கு பிரிவுகளை உள்ளடக்கி இருத்தல் வேண்டும் வள்ளுவர் வீடு பற்றிக்கூறாமல் விடுத்துள்ளார். அறம் பொருள் இன்பம் என்பன பற்றி கூறியவர் இந்த மூன்று கட்டங்களையும் தாண்டிச் செல்பவன் தானாகவே வீடு பேறு அடைவான் என்று அவர் கூறாமல் விளங்கவைத்துள்ளார்.

அறத்துப்பால்

 * பாயிரவியல்
 * இல்லறவியல்
 * துறவறவியல்
 * ஊழியல்

பொருட்பால்

 * அரசியல்
 * அமைச்சியல்
 * அரணியல்
 * கூழியல்
 * படையில்
 * நட்பியல்
 * குடியியல்

காமத்துப்பால்

 * களவியல்
 * கற்பியல்


திருக்குறளின் முதலாம் பாகம் இல்லறம் தொட்டு துறவறம் பற்றிய சிறப்பைக் கூறுகிறது. முதலாம் பாகத்தில் 38 அத்தியாயங்கள் இருக்கின்றன. அரச நெறி இராசதந்திரம் போர்த்தந்திரம் உள்ளடங்கலான உலக விவகாரங்கள் பற்றிக் குறளின் இரண்டாம் பாகம் கூறுகிறது. இதில் 70 அத்தியாயங்கள் உள்ளன குறளின் மூன்றாம் பாகத்தில் ஆண் பெண் இல்லற உறவுகள் பற்றிக் கூறும் 25 அத்தியாயங்கள் காணப்படுகின்றன மேற்கூறிய இராண்டாம் பாகக் குறள் பாக்கள் அரசர்களுக்கும் படைத்துறையினருக்கும் மாத்திரம் உரியதன்று உலகியல் வாழ்வில் ஈடுபடும் பொதுமக்கள் உள்ளடங்கலான அனைவருக்கும் பொருத்தமான கருத்துக்கள் அவற்றில் செறிந்துள்ளன. ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்போரும் வரலாற்று ஆசிரியர்களும் இரண்டாம் பாகக் குறள்பாக்களை இன்ரும் துரவி ஆய்ந்து வருகின்றனர்.

இத்தனை சிறப்புக்கள் வாய்ந்த குறள் நூலின் உண்மையான பெயரும் அதன் ஆசிரியர் திருவள்ளுவரின் உண்மையான பெயரும் இன்று வரை தெரியவரவில்லை. குறள் என்பது காரணப்பெயர் சிறியது. சுருக்கமானது குறுகலானது என்பது குறள் என்ற சொல்லின் பொருள் அதேபோல் வள்ளுவர் என்பதும் குலப்பெயர் என்று ஆய்வாளர்கள் கூறுவர். வள்ளுவரின் இயற்பெயர் என்னவென்பது அறியப்படாததாக இருக்கிறது குறளைவிட வேறு நூல் அல்லது நூல்களை வள்ளுவர் படைக்கவில்லை என்பது ஆய்வாளர் முடிவு.

தமிழ் இலக்கியப் பரப்பில் மிகக் கூடுதலான பிறமொழிகளுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட ஒரே ஒரு நூல் என்ற சிறப்பு திருக்குறளுக்கு உண்டு. அதை ஆங்கில மொழிக்கு மாற்றிய ஜீ யூ போப் என்ற தமிழில் பாண்டித்தியம் பெற்ற ஆங்கிலேயர் தனது குறள் மொழிபெயர்ப்பு நூலுக்குச் செய்த முகவுரையில் பின்வருமாறு கூறுகிறார். குறள் ஒரு தனித்துவமான நூல் அதை வடமொழியில் இருந்து தமிழுக்கு மாற்றப்பட்ட நூல் என்று கூறுவது மிகப் பெருந்தவறு. குறள் தூயதமிழில் ஆக்கப்பட்டுள்ளது. அதில் வடமொழிக் கலப்பு சிறிதளவும் இல்லை தமிழறிஞர் போய் தனது மொழிப் பெயர்ப்பை ஆங்கில கவிதை நடையில் பாய்த்துள்ளார் பின்பு வந்த பல அறிஞர்கள் ஆங்கில மொழிக்குத் திருக்குறளை மாற்றியுள்ளனர்.

தமிழ் உரை எழுதியவர்கள்: 

• திரு பரிமேலழகர்
• திரு மு.வரதராசனார்
• திரு மணக்குடவர்
• திரு மு.கருணாநிதி
• திரு சாலமன் பாப்பையா
• திரு வீ.முனிசாமி

ஆங்கில உரை எழுதியவர்கள்:

• Rev. Dr. G. U. Pope
• Rev W. H. Drew
• Rev. John Lazarus
• Mr F. W. Ellis

 ஜீ.யூ.போப் அவர்கள் திருக்குறளின் மூன்றாம் பாகமான காமத்துப்பாலை மொழியாக்கம் செய்யாமல் விடுத்துள்ளார். கஸ்தூரி சிறினிவாசன் மூன்று பாகங்களையும் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். ராஜாஜி என்றழைக்கப்படும் ராஜகோபாலச்சாரியார் குறளின் முதலாம் இரண்டாம் பாகங்களில் இருந்து தெரிந்தெடுக்கப்பட்ட பல குறட்பாக்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நூலாக்கியுள்ளார். 

மிக நீளமானதொரு முகவரையைப் போப் ஜயர் என்று மரியாதைகாரணமாக அழைக்கப்படும் ஜீ. யூ. போப் தனது குறள் மொழிபெயர்ப்புக்கு எழுதியுள்ளார் தமிழை வளப்படுத்திய பிற நாட்டு அறிஞர்களுள் வீரமா முனிவர் என்று தமிழிலும் தைரியநாத சுவாமி என்று வடமொழியிலும் இஸ்மதிசந்யாசி என்று உருதுவிலும் அழைக்கப்படும் கிறிஸ்தவ அருட்தந்தை கொன்ஸ்ரன்ரைன் பெஸ்சி என்பார்தான் முதன்மையானவர் என்று போப் குறிப்பிட்டுள்ளார் பெஸ்சி அவர்கள் தமிழ் இலக்கண இலக்கிய நூல்களையும் தமிழ் அகராதிகளையும் எழுதியதோடு தமிழ் எழுத்ததுச் சீர்திருத்தத்தையும் மேற்கொண்டார் திருக்குறளை இலத்தீன் மொழிக்கு மாற்றிய சிறப்பு பெஸ்சிக் உண்டு.

இத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டாலும் அதில் மாற்றங்களோ இடைச்செருகல்களோ அகற்றுதல்களோ செய்யப்படாமல் அன்று போல் இன்றும் இருக்கும் சிறப்புக் குறளுடையாதகும் திருக்குறளுக்குப் பரிலேழகர் செய்த உரைநூலில் குறளில் வரும் அச்சம் என்ற சொல்லிற்கு மக்கள் என்று பொருள் கூறியுள்ளார். தமிழ் ஆர்வலரான எலிஸ் என்ற ஆங்கிலேயர் அச்சம் என்ற சொல்லை அகற்றிவிட்டுக் குறளில் மக்கள் என்று திருத்தம் செய்யலாமே என்று கூறியதோடு அதற்கான முயற்றிகளையும் மேற்கொண்டார் மூல நூல் களில் திருத்தம் செய்யக்கூடாது என்ற அடிப்படையில் எலிஸ் அவர்களின் முயற்றிக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதால் அவர் அதைக் கைவிட நேர்ந்தது.

இனிமையும் கருத்தாழமும் இருந்தாலும் குறளின் சொற்களால் சுருங்கக்கூறி நயமாய் உரைக்கும் சிறப்பை நாலடியாரில் காணமுடியவில்லை. குறளின் தனித்துவம் சொற் சிக்கனம் ஒவ்வொறு குறளிலும் வேறுபட்ட கருத்துக்களைத் தூயதமிழில் கூறும் திறமை என்பனவற்றில் பெருமளவில் தங்கியுள்ளது. திருக்குறளைத் தன்னகத்தே மொழியாக்க வடிவில் கொண்டிராத உலக மொழியொன்றும் இல்லை என்று துணிந்து கூறலாம்.