அமேசான் செல்லர் மூலம் பொருட்களை விற்பது எப்படி| What Is Amazon Seller Account.

அமேசான் செல்லர் மூலம் பொருட்களை விற்பது எளிது! எவ்வாறு என பார்ப்போம்!

முதலில் கணக்கினை துவங்க என்ன தேவை என பார்ப்போம்!

• வங்கி கணக்கு
• பான் எண்
• ஜிஎஸ்டி எண் (GST)

எப்படி துவங்குவது: 

தேவையான ஆவணங்களை தயார் செய்தவுடன் இந்த அமேசான் செல்லர் கணக்கினை துவங்கும் பக்கத்திற்கு  செல்லவும்! திறன்பேசி எனில் முதலில் பிளே ஸ்டோர் (Play Store) ல் சென்று அமேசான் செல்லர் செயலியை  பதிவிறக்கம் செய்து கொள்ளவும்!

கணக்கினை துவங்குவதற்கு  உங்கள் பெயர் முகவரி மற்றும் வங்கி கணக்கு போன்ற தகவலை கொடுத்து உள்நுழைந்தப்பின் தொலைப்பேசி எண், உங்கள் கடை அல்லது செய்யும் தொழில் பற்றிய தகவல்கள், வரி (Tax) தகவல்கள் என எல்லா தேவையான தகவல்களையும் கொடுக்கவும்.

இறுதியாக உங்கள் டாஷ்போர்டு (Dashboard) வரும் அதில் உங்கள் பொருட்களின் தெளிவான படங்கள், விலை மற்றும் பொருள்கள் பற்றிய விவரங்களை கொடுக்கவும்.

கட்டண விவரம்:

அமேசான் மூன்று வகையான கட்டணங்களை பெறுகிறது.

• Referral Fee
• Closing Fee
• Shipping Fee

மேலும் 4வது கட்டணமாக GST  வசூலிக்கப்படும். இந்த கட்டணங்கள் அனைத்தும் பொருளுக்கு பொருள் மாறுபடும்!

என்ன என்ன பொருள்களை எல்லாம் விற்பனை செய்யலாம்: 

இங்கு அவர்கள் அனுமதிக்கும் அனைத்து பொருள்களையும் விற்பனை செய்யலாம். வழக்கம் போல் தடை செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்ய முடியாது, போலி மற்றும் தரம் குறைவான பொருள்களை விற்பனை செய்ய முடியது!

தவிர ஆடை, தானியங்கி, குழந்தை தயாரிப்புகள், பேட்டரிகள், அழகு சாதன பொருள்கள், புத்தகங்கள், நுகர்வோர் மின்னணுவியல் பொருள்கள் (கேமராக்கள் மற்றும் வீடியோ கேம்கள் - கன்சோல்கள் உட்பட), டிஜிட்டல் பாகங்கள் (மொபைல் பாகங்கள், மின்னணுவியல் பாகங்கள்), மளிகை பொருட்கள், நகைகள், சமையலறை, சாமான்கள் , மொபைல் தொலைபேசிகள், திரைப்படங்கள், இசைக்கருவிகள், அலுவலக உபயோகப்பொருட்கள், தனிநபர் பராமரிப்பு உபகரணங்கள், தனிநபர் கணினிகள், செல்லப்பிராணி உணவுப்பொருட்கள், மென்பொருள், காலணிகள் மற்றும் கைப்பைகள், கடிகாரங்கள்.

மேலே உள்ள சில பிரிவுகளிலிலும் தடைசெய்யப்பட்டுள்ள பொருள்கள் உள்ளன என்பதையும், நீங்கள் விற்பனையைத் தொடங்குவதற்கு முன் அமேசான் நிறுவனத்தின் ஒப்புதல் தேவை என்பதையும் நினைவில் கொள்க.


விற்பனை செய்த பணம் எப்பொழுது உங்களுக்கு கிடைக்கும்:

அமேசான் நிறுவனம் வாரத்திற்கு ஒரு முறை உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தும். ஆர்டர் அனுப்பப்பட்டதாக உறுதி செய்யப்பட்ட 7 நாட்களுக்குப் பிறகு நீங்கள் ஆர்டருக்கு பணம் பெற தகுதியுடையவராவர்.

Fulfilled by Amazon - என்றால் என்ன:

இதன் மூலம் பொருள்களை விரைவாக எளிதாக வாடிக்கையாளரிடம் கொண்டு செல்ல முடியும்!

உங்கள் பொருட்களை அமேசான் குடோனுக்கு அனுப்பி சேகரித்து வைத்துக்கொள்ளலாம்! ஒவ்வொரு முறை உங்கள் பொருள் ஒரு ஆர்டரை பெறும்போதும் விரைவாக அமேசானே பார்சல் செய்து அனுப்பும். சாதாரன முறையில் நீங்கள் ஒரு ஆர்டரை பெறும் போது அமேசான் உங்கள் அலுவலகத்தில் இருந்து பொருளைப்பெற்று வாடிக்கையாளரிடம் அனுப்பும்!

நீங்கள் அமேசான் மூலம் ஒரு ஆர்டரை பெறும் போது நீங்களே வாடிக்கையாளருக்கு அனுப்பும் வசதியும் உள்ளது.

அமேசானில் விற்பதன் பலன்: 

மிகப்பெரிய ஆன்லைன் சந்தை என்பதன் அடிப்படையில் அமேசான், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை எளிதாக சென்றடைய வழி செய்கிறது. அமேசானில் விற்பனை செய்வதன் வாயிலாக கீழ்கண்ட பலன்களை பெறலாம். அமேசானுக்கு மாதந்தோறும் 300 மில்லியனுக்கு மேல் தனி வாடிக்கையாளர்கள் வருகை தருகின்றனர். எனவே தயாரான வாடிக்கையாளர் பரப்பு இருக்கிறது. மேலும் அமேசான் போன்ற தளங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கும் தயாராக உள்ளனர். 

அமேசானில் பொருட்களை பட்டியலிவதன் மூலம், இந்தியா மற்றும் பிற நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களை உங்களால் சென்றடைய முடியும். சர்வதேச விரிவாக்கம் ஒரு விற்பனையாளராக, மற்ற நாடுகளில் உங்கள் தயாரிப்பை சோதித்து பார்க்க விரும்பினால், மற்ற நாடுகளில் விற்பனை செய்வதை அமேசான் எளிதாக்குக்கிறது. இதற்காக தனியே எதையும் செய்ய வேண்டாம், அமேசானில் பட்டியலிட்டாலே போதுமானது. கையிருப்பு வேண்டாம் உங்கள் பொருட்களை அமேசான் இருப்பு வைத்து கொண்டு, வாங்குபவர்களுக்கு அனுப்பி வைக்கும். 

உங்களுக்கான வேலை மிச்சம்: 

அமேசானின் ஷிப்பிங் சேவை, உங்கள் பொருள் வாடிக்கையாளர்களை சரியாக சென்றடைவதை உறுதி செய்யும்.   உங்கள் பொருளின் விற்பனை பூர்த்தி ஆகும் வரை அமேசான் எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. தனது விற்பனை கட்டணத்தை கழித்துக்கொண்டு, தொகையை நேரடியாக உங்கள் கணக்கில் சேர்த்து விடுகிறது. அனைத்து ஆன்லைன் பரிவர்த்தனையும், பாதுகாப்பான பேமெண்ட் கேட்வே வாயிலாக நிகழ்கிறது. வேர்ஹவுசிங் முதல், விளம்பரம், வாடிக்கையாளர் சேவை என எல்லாவற்றிலும், அமேசான் தொழில்முறை சேவை பங்குதாரர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

பொருட்கள் விற்பனை: 

பொருட்களை விற்பனை செய்ய நீங்கள் ஒரு விற்பனை நிலையம் அல்லது, வேர்ஹவுஸ் வசதியை அமைக்க வேண்டும். நீங்கள் அமேசான் இந்தியா தளம் மூலம் விற்பனை செய்ய தீர்மானித்தால், அதில் பதிவு செய்து கொண்டு, உங்கள் விற்பனை நிலையத்தைத் துவக்கி ஆர்டர்களுக்காக காத்திருக்கலாம். பொருட்களை பேக் செய்வது முதல், டெலிவரி செய்வது வரை எல்லாவற்றையும் அமேசான் பார்த்துக்கொள்கிறது.