இந்தியாவில் முதலீடு செய்ய பாதுகாப்பான திட்டங்கள் | Top 7 Safe Investments in India.

 நமது மனநிலைக்கு எது ஏற்றதாக உள்ளதோ அதுவே உங்களுக்கு அதாவது உங்கள் மன நிலைக்கு ஏற்ற முதலீடு. அதுவே பாதுகாப்பானது. ஏனெனில் உங்களுக்கு ஏற்ற முதலீட்டையே உங்களால் திறம்பட கையாளமுடியும். 

1.) நிலங்கள் மற்றும் வீடுகள்: 

 பாரம்பரியமான அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற முதலீடு எங்கு வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கலாம். வாடகை வருமானம் மற்றும் மதிப்பு உயர்வு வருமுன் வரிக்கு ஆதாயம் நீதிமன்றத்தில் பதிவு செய்து வைத்தால் யாராலும் அபகரிக்க முடியாது. குறைகள் முதலீட்டிற்கு மற்ற முதலீடுகளை காட்டிலும் அதிக பணம் தேவை படுகிறது. உடனடியாக விற்று காசு பார்க்க முடியாது.

 2.) தங்கம் மற்றும் வெள்ளி:

தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடு  என்று அழைக்கப்படுகிறது. விலைவாசிய உயர்வு இதற்கு உரம் போன்றது. இரண்டும் ஒரு சேர அதிகரித்துக் கொண்டே செல்லும். எவ்வளவு குறைவான விலைக்கும் வாங்க முடியும் எந்த ஒரு இடர்பாட்டிற்கும் உடனடியாக விற்று பணமாக்கி விடலாம். குறைகள் திருட்டு பயம் இதன் மிக பெரிய குறை. பொருளாதார உயர்வு தங்க விலையை வீழ்ச்சி அடைய செய்கிறது. ஆபரண தங்கம் மூலமாக முதலீடு செய்வது ஒரு முட்டு கட்டை போன்று முதலீட்டின் முழு பலனை அறுவடை செய்ய முடியாமல் போகிறது. (வரிகள் , செய்கூலி , சேதாரம்)

 3.) பத்திரங்கள்:

 கடன் பத்திரங்கள் ஒன்று தான் இருப்பதிலேயே மிக பாதுகாப்பான முதலீடு என்று அழைக்கப்படுகிறது. நிலையான வருமானம் தருகிறது. தங்க பத்திரங்கள் ஆகச் சிறந்த முதலீடு குறைகள் முதிர்வு அடையும் முன்னரே விற்றால் முதலீடு லாபம் ஏறக்குறைய சேமிப்பு கணக்கு வட்டியை விட குறைந்து விடுகிறது. அரசோ நிறுவனமோ திவால் ஆகிவிட்டால் மொத்த பணமும் கிடைக்காது‌.

4.) பங்குகள்:

 அதிக துணிவு அதிக பணம் சரியான பங்கு முதலீடு குறுகிய காலத்தில் பல மடங்கு முதலீடு வளர்ச்சி. எவ்வளவு குறைந்த பணத்தையும் முதலீடு செய்யலாம். உடனடியாக பணமாக்கி விடலாம் யாரும் ஏமாற்ற முடியாது. குறைகள் அதிக துணிவு அதிக ஆபத்து தவறான பங்கு மொத்தமாக காலி செய்து விடும். அதிக படியான மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அனுபவமற்றவர்களின் நரகம் இது. 

5.) காப்பீடுகள்:

 தொடர்ச்சியான நிர்ணயிக்கப்பட்ட வருமானம் அதிக முதலீடு அதிக வருமானம் இறப்புக்கு பின் வருமானம் ஓய்வூதியம் மூலம் வருமானம் குறைகள் மிக குறைந்த லாபம் இடைநிற்றல் பயனற்று போவதோடு முதலீடும் சேர்ந்து கரைகிறது இறப்பு மற்றும் மருத்துவ காப்பீடை தவிர மற்ற அனைத்து காப்பீடுகளும் மிக பெரிய சுரண்டல். 

6.) பரஸ்பர நிதி முதலீடு:

 துறை சார்ந்த முதலீடு அதிக ஆதாயம் கிடைக்கிறது பங்கு முதலீட்டை காட்டிலும் சற்று பாதுகாப்பானது குறைகள் தரகு கட்டணம் அதிகம் அதிக ஆபத்து உடையது. இடைநிற்றல் மிக பெரிய நட்டத்தை கொடுக்கும் 

7.) வங்கி சார்ந்த முதலீடுகள்:

  முன்பு எல்லாம் வங்கி வட்டி வாங்கி வாழ்ந்து அதையே சேத்து வச்சு சொத்து வாங்குனவுங்க ரொம்ப பேரு. ஆனா இன்னைக்கி போட்ட பணமாவது கெடைக்குமானா அதுவே பெரிய அதிசயம்.