எல்ஐசி-யின் ஜீவன் சாந்தி திட்டம் | LIC Jeevan Shanti Pension Plan Details In Tamil.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான, எல்ஐசி பல்வேறு காப்பீட்டு திட்டங்கள் மற்றும் ஒய்வூதிய திட்டங்களை வழங்கி வருகின்றது. அதில் ஒன்று தான் LIC-யின் புதிய ஜீவன் சாந்தி திட்டம். இது நிரந்தர வருமானம் தரக் கூடிய ஒரு நல்ல திட்டமாகும்.

பாலிசி எடுப்பது எவ்வாறு:

LIC-யின் இந்த சூப்பரான ஓய்வூதிய திட்டத்தினை ஆஃப்லைனிலும் ஆன்லைனிலும் எடுத்துக் கொள்ளலாம். LIC-யின் ஜீவன் சாந்தி ஒரு விரிவான வருடாந்திர திட்டமாகும். இதில் பாலிசி எடுக்கும் நபர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் பல நன்மைகள் உண்டு. அதிலும் ஓய்வுக்காலத்திற்கு பின்பு, நல்ல பலன்கள் உண்டு. 

வயது தகுதி என்ன:

LIC-ன் இந்த புதிய பென்ஷன் திட்டத்தை குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 79 வயது வரை உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளலாம். இந்த பாலிசியில் குறைந்தபட்சம் 1,50,000 ரூபாய் வரை பிரீமியமாக செலுத்திக் கொள்ளலாம். அதிகபட்சம் என்று எதுவும் வரையரை நிர்ணயிக்கப்படவில்லை இல்லை. ஆக உங்களின் தேவையறிந்து அதற்கேற்ப செலுத்திக் கொள்ளலாம். எல்ஐசி-யின் இந்த திட்டங்கள் பல தனிச் சிறப்புகளைக் கொண்டுள்ளது. 

உடனடி ஆண்டுத் தொகை 
நீங்கள் இந்த திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடான 1,50,000 ரூபாய் திட்டத்தில் இணைகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்கு மாதத்திற்கு 1000 ரூபாயும், இதே காலாண்டுக்கு 3,000 ரூபாயும், இதே அரையாண்டுக்கு 6,000 ரூபாயும், இதே ஆண்டுக்கு 12,000 ரூபாயும் கிடைக்கும். ஆக நீங்கள் எவ்வளவு அதிகம் தொகையை ஆரம்பத்தில் செலுத்துகிறீர்களோ, அந்தளவுக்கு உங்களுக்கு வருவாய் கிடைக்கும்.

முதிர்வு தொகை எல்லை எப்படி:

நீங்கள் முதிர்வு தொகையை உடனடி ஆண்டுத் தொகையாகவோ அல்லது காலம் தாழ்த்திய நிலையில் கொடுக்கப்படும் முறைகளாகவே எடுத்துக் கொள்ளலாம். உடனடியான ஆண்டுத் தொகையினை நீங்கள் தேர்வு செய்தால், பிரீமியம் செலுத்திய உடனே வருவாய் கிடைக்க தொடங்குகிறது. இதே காலம் தாழ்த்தி ஆண்டுத் தொகை பெறும் திட்டத்தினை தேர்வு செய்திருந்தால், குறைந்தபட்ச கால அளவானது 1 வருடத்தில் ஆரம்பமாகிறது. அதிகபட்ச கால அளவானது 20 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடன் வசதி உண்டா:

நீங்கள் உங்கள் பாலிசியை தொடங்கியதில் இருந்து 1 வருடம் முடிந்த பின்னர் கடன் கிடைக்கும். உடனடி ஆண்டுத் தொகை திட்டத்தில் இந்த வசதியானது F&J -வில் மட்டுமே கிடைக்கும். காலம் தாழ்த்திய ஆண்டுத் தொகை திட்டத்திலும் இந்த தேர்வானது கிடைக்கும். இந்த திட்டத்தில் பிரிவு 80சி மற்றும் 80டியின் படி வரி சலுகைகள் உண்டு. ஒரு முறை மட்டுமே செலுத்தப்படும் பிரீமியங்களுக்கு வரி செலுத்துவதிலிருந்து முழுவதுமான பாதுகாப்பு கிடைக்கும். 

உத்திரவாத வருவாய் திட்டம்:

இந்த திட்டத்தில் இன்சூரன்ஸ் எடுப்பவர் முதலீடு செய்யும் போது நிச்சயம், மாதம் மாதம் வருவாயினை பெறுவார்கள், ஆயுள் காலம் முழுக்க இந்த வருவாயானது கிடைக்கும். ஒரு வேலை இந்த பாலிசியினை எடுத்தவர் இடையில் இறந்துவிட்டாலும் கூட, வருவாய்க்கு உத்தரவாதம் உண்டு. ஆனால் இது முழுக்க முழுக்க நாம் தேர்தெடுக்கும் தனிப்பட்ட விருப்பத்தினை பொறுத்து இருக்கும் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். 

உத்திரவாதம் அளிக்கப்பட்ட வரவு திட்டம்:

காலம் தாழ்த்தி ஆண்டுத் தொகை பெறும் இந்த திட்டத்திலும், உறுதி செய்யப்பட்ட இந்த வருவாயானது கிடைக்கும். ஆனால் ஒவ்வொரு மாதமும் இந்த வருமானமானது, பாலிசியுடன் சேர்க்கப்படும். இந்த பாலிசி திட்ட காலத்திற்கு பிறகு சலுகை கிடைக்கும். அதோடு எல்ஐசியின் இந்த திட்டத்தில் இன்னும் பல சலுகைகள் உள்ளன. இது ஓய்வுகாலத்திற்கு ஏற்ற ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது