NSE IFSC லிமிடெட் (NSE International Exchange). இது National Stock Exchange of India Limited -ன் துணை நிறுவனமாகும். சிறப்புப் பொருளாதார மண்டலமாக இருக்கும் GIFT - Gujarat International Finance Tech City நகரம், இந்தியாவின் முதல் IFSC ஆகும். GIFT IFSC-ல் இந்திய ரூபாயைத் தவிர வேறு எந்த நாணயத்திலும் பத்திரங்களில் வர்த்தகம் செய்யலாம். மேலும், இந்தியாவில் முதலீட்டாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க பங்குகளில் முதலீடு செய்ய அனுமதிக்கும் வழிகளை ஆராய்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் NSE IFSC 50 US-Stocks அடிப்படையிலான பங்குகளின் வர்த்தக ரசீதுகளுக்கு ஒப்புதல் பெற்றுள்ளது. ஆனால், 2022மார்ச் 3ந் தேதி முதல் 8 அமெரிக்க பங்குகளுக்கு மட்டுமே வர்த்தகம் தொடங்கும்.
NSE இன்டர்நேஷனல் எக்ஸ்சேஞ்ச் (NSE IFSC) முதற்கட்டமாக 8 அமெரிக்க இணைய நிறுவன பங்குகளில் இந்திய முதலீட்டாளர்களை நேரடியாக வர்த்தகம் செய்ய அனுமதி அளித்துள்ளது.
• Amazon
• Tesla
• Microsoft
• Netflix
• Walmart
• Apple
கூடுதலான நிறுவனங்கள்:
அடுத்துவரும் காலங்களில் மீதமுள்ள 42 பங்குகளையும் இந்த பிளாட்ஃபாரத்தின் மூலம் வர்த்தகம் செய்யும் நிலை உருவாக்கப்படும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. பெர்க்ஷையர் ஹாத்வே, மாஸ்டர் கார்டு, ஜே.பி.மார்கன் சேஸ், மார்கன் ஸ்டான்லி, நைக், பேபால், பெப்சிகோ, இன்டெல் போன்ற பங்குகள் அடுத்து சில மாதங்களில் முதலீட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் வர்த்தகமாகும் பங்குகளை முன்பு நேரடியாக வாங்க முடியாத நிலை இருந்தது. பின்னர், இதில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு, அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் வர்த்தகமாகும் சில பங்குகளை நம் நாட்டிலிருந்து நேரடியாக வாங்கக்கூடிய நிலை கொண்டுவரப்பட்டது. முக்கியமாக, Mutual Fund-திட்டங்கள் மூலம் அமெரிக்க நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாம் என்கிற முக்கியமான மாற்றம் வந்தது.
இந்தியாவில் இருந்து அமெரிக்கப் பங்குகளில் முதலீடு செய்யும் ஃபண்ட் திட்டங்களில் கடந்த மூன்றாண்டுக் காலத்தில் 12% முதல் 18% வரை லாபம் தந்துள்ளன. நம்மூரில் இருக்கும் முதலீட்டாளர்கள் இந்த பிளாட்பாரத்தில் வர்த்தகமாகும் அமெரிக்கப் பங்குகளை வாங்க நினைக்கும் அதிகபட்சமாக 2.5 லட்சம் அமெரிக்க டாலருக்கு முதலீடு செய்ய முடியும். இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.2.25 கோடி ஆகும்.
அமெரிக்கப் பங்குகளில் நேரடியாகவும் Mutual Fund மூலமாகவும் நம் மக்கள் முதலீடு செய்வதற்கு அதிக ஆர்வம் காட்டியதற்குக் காரணம், கூடுதல் லாபம் தான். கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனப் பங்கு விலை கடந்த ஒரு ஆண்டில் 33% லாபம் தந்திருக்கிறது. ஆப்பிள் நிறுவனப் பங்கு விலை 36% லாபம் தந்திருக்கிறது. வாரன் பஃபெட்டுக்குச் சொந்தமான பெர்க்ஷையர் ஹாத்வே பங்கும் 25% வரை லாபம் தந்திருக்கிறது.
அமெரிக்கப் பங்குகளை வாங்க நினைப்பவர்கள் இனி அந்த வாய்ப்பையும் கட்டாயம் பரிசீலிக்கலாம்.
GIFT City Demat கணக்கு:
முதலீட்டாளர்கள் GIFT City-ல் திறக்கப்பட்ட தங்கள் சொந்த Demat கணக்குகளில் டெபாசிட்டரி ரசீதுகளை வைத்திருக்க முடியும் மற்றும் அடிப்படை பங்கு தொடர்பான கார்ப்பரேட் நடவடிக்கை பலன்களைப் பெறுவதற்கான உரிமையைப் பெறுவார்கள்.
ரிசர்வ் வங்கியின் LRS அளவீடு:
இந்தப் பங்கு முதலீட்டுச் சந்தையில் முதல் முறையாக வெளிநாட்டுப் பங்குகளில் முதலீடு செய்யும் வாய்ப்பை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்திய சில்லறை முதலீட்டாளர்கள் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பரிந்துரைத்துள்ள தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்ட (LRS) வரம்புகள் மற்றும் அளவுகளின் கீழ் மட்டுமே NSE IFSC தளத்தில் பரிவர்த்தனை செய்ய முடியும்
fractional quantity-யில் முதலீடு:
NSE IFSC மூலம் வெளிநாட்டுப் பங்குகள் மீதான முதலீடுகள் எளிதாக்கப்படுகிறது. இதுமட்டும் அல்லாமல் மற்ற தளங்களைக் காட்டிலும் இந்திய ரீடைல் முதலீட்டாளர்களுக்குக் குறைந்த செலவில் இந்தப் பங்குகளில் முதலீடு செய்ய முடியும். அமெரிக்கப் பங்குகளின் விலையில் இந்தியாவில் முதலீடு செய்யக் கடினம் என்பதால் fractional quantity-யில் முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.

