கூட்டுறவு வங்கிகளில் வீட்டுக்கடன் | Co-operative Bank Home Loan Details.

தமிழ்நாட்டில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தனியார் வங்கிகள் பல வங்கிகள்  வீட்டுக்கடன் வழங்கி வருகின்றன. இருந்தாலும் கூட்டுறவு வங்கிகளில் கிடைக்கும் சலுகைகள் வேறு எந்த வங்கிகளிலும் கிடைப்பதில்லை. தமிழ்நாட்டில் 23 மாவட்ட கூட்டுறவு வங்கிகள் உள்ளது. அதில் சென்னை, மதுரை,கோவை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி போன்றவை சிறந்த உதாரணங்கள் ஆகும். 

கூட்டுறவு வங்கிளில் உள்ள வீட்டுக்கடன் வட்டி விகிதங்களை விட தனியார் வங்கிகளில் வட்டி விகிதங்கள் குறைவானதாக இருக்கும் ஆனால் கூட்டுறவு வங்கிகள் தனிவட்டி முறையில் கடன்களை வழங்குகின்றன. ஆதலால் நீண்டகால கடன்களுக்கு கூட்டுறவு வங்கிகள் சிறந்தது மற்றும் லாபகரமான ஒன்றாகும்.

 ஒருவருக்கு வீட்டுக்கடன் என்பது, அவர் வாங்கும் சம்பளம் அல்லது அவரது வருமானத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. சம்பளதாரர்களாக இல்லாமல் தொழில் செய்பவர்களாக இருந்தால் அவர்களது ஆண்டு வருமானத்தை வைத்து கணக்கிட்டு வீட்டுக்கடன் வழங்கப்படுகிறது.

வங்கியை அணுகி கிடைக்கக்கூடிய கடன் அளவைத் தெரிந்துகொள்ள வேண்டும். தெரிந்துவிட்டால் அதற்கு ஏற்ப நாம் கட்ட ஆசைப்படும் வீட்டை கட்ட எவ்வளவு செலவு செய்வது என்பதை முடிவு செய்ய எளிமையாக இருக்கும்.

வீட்டுக்கடன் வாங்க தகுதிகள்:

மாத தவணை செலுத்தும் அளவுக்கு நிலையான வருமானம் உள்ளவர்கள்- குறிப்பாக மாத சம்பளம் வாங்கும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் வருமான வரி செலுத்தும் சுய தொழில் செய்பவர்கள்.

co-operative-bank-home-loan

கூட்டுறவு வங்கிகளில் வீட்டுக்கடன் பெறுவதால் உள்ள நன்மைகள்:

• மிக குறைவான வட்டி விகிதம்

• அடமானமாக வைக்கப்படும் சொத்துக்களுக்கு அதிக பாதுகாப்பு 

• தினசரி குறையும் கடன்-நிலுவைத்தொகைக்கேற்ப வட்டி (Interest on daily reducing Balance)

• கடன் முடியும்வரை குறைந்த ப்ரீமியத்தில் ஆயுள் காப்பீடு ( "கடன் தவணை செலுத்தும் காலத்தில் விண்ணப்பதாரர் உயிரிழக்க நேரிட்டால், மீதமுள்ள தவணைத்தொகை முழுவதுமாக காப்பீட்டு நிறுவனத்தால் செலுத்தப்பட்டு கடன் முடிக்கப்பட்டு வாரிசுதாரரிடம் சொத்து ஆவணங்கள் ஒப்படைக்கப்படும்".)

• மாதத் தவனைக்கு மேற்கொண்டு நீங்கள் செலுத்தும் கூடுதல் தொகை (Advance Repayment) உங்கள் அசல் நிலுவையில் வரவு வைக்கப்பட்டு மறுநாளில் இருந்து மீதமுள்ள அசல் தொகைக்கு வட்டி கணக்கிடப்படும். இவ்வாறு அவ்வபோது கூடுதல் தொகை செலுத்தி விரைவில் கடன் கணக்கை முடித்துக்கொள்ளலாம். இவ்வாறு கூடுதலாக செலுத்தப்படும் தொகைக்கு கூடுதல் கட்டணம் "No Precloser Fees"எதுவும் வசூலிக்கப்படுவது இல்லை.

வீட்டுக்கடன் தொகை எவ்வளவு பெறமுடியும்: 

உங்கள் வயது, வருமானம், மற்றும் ப்ராஜக்ட் காஸ்ட் (வீடு கட்ட தேவையான மொத்த தொகை அல்லது வாங்கபோகும் வீட்டின் மொத்த மதிப்பு), இவை மூன்றையும் வைத்து தான் நிர்னயிக்கப்படுகிறது.

வயது - பொதுவாக ஒருவர் 55  வயது(Salaried)  வரை கடன் பெற்றுக்கொள்ள முடியும்..

வருமானம் - பொதுவாக ஒருவர் தனது மாத வருமானத்தில் இருந்து 70% வரை மாத தவணை செலுத்த முடியும். (Including all existing and proposed EMIs)

வட்டி விகிதம்:

மிக குறைந்த வட்டி விகிதமாக  வீட்டுக்கடன் வழங்கப்படுகிறது. (கூட்டுறவு வங்கிகளில் தனிவட்டி முறையில் கடன்‌ வழங்கபடுகிறது.)

தேவையான ஆவணங்கள்:

பொதுவாக கட்டுறவு வங்கிகளில் விண்ணப்பிக்கும்போது நம்முடைய ஆவணங்கள் அனைத்தையும் பரிசீலித்துத் தயார் நிலையில் வைத்திருப்பது நல்லது.

• பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம். விண்ணப்பதாரரின் புகைப்படம்

• மனைப் பத்திரம் (சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தது)

• தாய்ப்பத்திரம்

• வில்லங்கச் சான்றிதழ்

• விற்பனைப் பத்திரத்தின் நகல்

• வீட்டிற்கு உண்டான வரைபடம், அங்கீகாரம் நகல், பொறியாளர் சான்றிதல்.

• வீட்டின் மதிப்பீடு, கட்டுமான செலவு ஆகியவற்றின் பொறியாளர் அறிக்கை

• வருமானச் சான்றிதழ்