திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் திட்டங்கள்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 100 ஆண்டுகள் கடந்த பாரம்பரியமிக்க வங்கி. இவ்வங்கி திருச்சி கரூர் அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் தன் கிளைகளை கொண்டுள்ளது. இவ்வங்கியில் உள்ள சேமிப்பு மற்றும் கடன் திட்டங்களை காணலாம்.

நிலையான வைப்பு (Fixed Deposit)

              கூட்டுறவு வங்கிகளில் நிலையான வைப்பு தொகைக்கான காலத்தை நமது விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்துகொள்ளலாம். பாதுகாப்பு மற்றும் உடனடித் தேவைகளுக்கு ஏற்ப ரொக்கமாக மாற்றக்கூடிய வசதியைக் (liquidity) கொண்ட காரணத்தால் அனைவருக்கும், குறிப்பாக வயதானவர்களுக்கு வங்கி வைப்பு நிதி தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.  நிரந்தர  வைப்பு (Fixed Deposit) பற்றிய முழுமையான தகவல்.

Tdcc bank fixed deposit

தொடர் வைப்பு நிதி ( RD ):

                      ஓர் குறிப்பிட்ட தொகையை மாதம் தோறும் ஓர் குறிப்பிட்ட காலத்திற்க்கு தொடர்ந்து சேமித்து வருவதே தொடர் (RD) வைப்பு நிதியாகும். நாம் சேமிக்கும் பணத்திற்கு வட்டியும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் மக்கள் தொடர்ந்து சேமிக்கும் பழக்கத்தை கற்று கொள்ளலாம்.  திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தொடர் வைப்பு திட்டம் | TDCC bank Recurring Deposit.

cooperative bank Recurring Deposit

நகைக்கடன்( Gold Loan)

                       நகைக்கடன் என்பது ஒரு பாதுகாப்பான கடன் திட்டங்களில் ஒன்று. திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில்  உங்களது நகைகளை அடமானமாக வைத்து, அதற்கேற்ப உள்ள சந்தை மதிப்பை வைத்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம். நகைகளை மீட்பதற்கான காலக்கெடு ஓராண்டாக இருக்கும் நிலையில், அதற்குள்ளாக வட்டியுடன் பணத்தை செலுத்தி நகைகளை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். நகைக்கடன் (Gold Loan) பற்றிய முழுமையான தகவல்.

cooperative bank gold loan


வீட்டுக்கடன் (Home Loan)

           தமிழ்நாட்டில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தனியார் வங்கிகள் பல வங்கிகள்  வீட்டுக்கடன் வழங்கி வருகின்றன. இருந்தாலும் கூட்டுறவு வங்கிகளில் கிடைக்கும் சலுகைகள் வேறு எந்த வங்கிகளிலும் கிடைப்பதில்லை.  திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சிறந்த உதாரணம் ஆகும்.

கடன்‌ உச்ச வரம்பு - 30,00,000₹ 

வட்டி விகிதம் - 10.25%  வீட்டுக்கடன் (Home Loan) பற்றிய முழுமையான தகவல்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கடன் (MSME Loan) 

சிறு, குறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.10,00,000/- வரை சொத்து பிணையம் இல்லா வங்கி கடன் குறுந்தொழில் முனைவோருக்கு தங்களின் தொழிலை மேம்படுத்தவும், விரிவு படுத்தி கொள்ளவும் கடன்களை வழங்குகிறது. சிறு, குறு கடன் (MSME Loan) பற்றிய முழுமையான தகவல்.

MSME Loan In c-operative bank
சம்பளச்சான்று கடன்: 
                               திருமண செலவுகள், குடும்ப செலவுகள் அல்லது எதிர்பாராத மற்றும் உடனடி செலவுகள் உள்ளிட்ட தனிப்பட்ட செலவுகளை சமாளிக்க சம்பளச்சான்று கடனை ஒருவர் பயன்படுத்தி கொள்ளலாம். வாடிக்கையாளர்களின் வசதிக்காக உடனடி தனிநபர் கடன் பெறும் செயல்முறைகள் மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது.  அதிகபட்ச கடன் அளவு 15,00,000 ரூபாய்.

Co-operative bank salary loan- tdcc bank

பணிபுரியும் மகளிர் வளர்ச்சிக்கடன்: 

                   பெண்களின் வளர்ந்து வரும் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய திருச்சிராப்பள்ளி மாவட்டமத்திய கூட்டுறவு வங்கி பணிபுரியும் பெண்களுக்கு  கடன்களை வழங்கி வருகிறது. 

tdcc bank womens loan