பிரதமர் வீடு கட்டும் திட்டம் | PMAY Scheme Details Tamil.

 பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (PM Awas Yojana) என்னும் ஏழைகளுக்கான வீடு  திட்டம், 25 ஜூன் 2015 அன்று நாட்டின் ஒவ்வொரு ஏழைக்கும் வீடு வழங்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், வீடு கட்ட பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளில் இதுவரை 3.04 கோடிக்கும் அதிகமான உறுதியான வீடுகள் கிராமப்புற பகுதிகளில் கட்டப்பட்டுள்ளன. 

வருமானத்திற்கு ஏற்ப மானியத்தின் அளவு மாறுபடலாம். இது மட்டுமின்றி கடனை திருப்பி செலுத்த 20 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் வட்டி விகிதம் மிகவும் குறைவு. இத்திட்டம் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவைப் பயன்படுத்த, பல நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும். 

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் சிறப்பு அம்சங்கள்: 

மத்திய அரசால் செயல்படுத்தப்படும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா மூலம் வீடு வாங்க மானியம் வழங்கப்படுகிறது. இதில் வருமானம் மற்றும் நபரின் வகை அடிப்படையில் அரசாங்கம் மானியம் வழங்குகிறது. இதன் பலனை பெற, வீட்டில் இருந்தபடியே மத்திய அரசு வழங்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவுக்கு விண்ணப்பிக்கலாம்.  ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறைவாக உள்ள அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின் கீழ் முதல் தவணையாக ரூ.50 ஆயிரமும், இரண்டாவது தவணையாக ரூ.1.5 லட்சமும், கடைசியாக அதாவது மூன்றாவது தவணையாக ரூ.50 ஆயிரமும் பெறப்படுகிறது. மேலும், சாதாரண வங்கிகளில் இருந்து கிடைக்கும் வீட்டுக் கடனை விட, கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் குறைவு.

pmay scheme details

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவில் பயன்பெற தகுதிகள்: 

விண்ணப்பதாரரின் குடும்பத்துக்கு வேறெங்கும் சொந்த வீடு இருக்கக் கூடாது. விண்ணப்பதாரரின் குடும்பத்துக்குச் சொந்த வீடு தொடர்பாக இந்திய அரசின் வேறெந்த திட்டத்தின் பயனும் கிடைத்திருக்கக் கூடாது. திருமணமானவர்கள், தனியாகவோ அல்லது கணவன் மனைவி இணைந்தோ விண்ணப்பிக்கலாம். அவர்களில் ஒருவருக்கு மட்டுமே மானியம் கிடைக்கும்.

1. 18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். 

2. அதிகபட்சம் 55 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

3. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான (EWS) ஆண்டு வருமானம் குறைந்த பட்சம் 3 லட்சமாக இருக்க வேண்டும்.

4. குறைந்த வருவாய் பிரிவினருக்கு (LIG) ஆண்டு வருமானம் ரூபாய் 3 லட்சத்திலிருந்து 6 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

5. நடுத்தர வருவாய் பிரிவினருக்கு ( MIG I) ஆண்டு வருமானம் 6 லட்சம் முதல் 12 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். நடுத்தர வருவாய் பிரிவினருக்கு ( MIG II)ஆண்டு வருமானம் 12 லட்சம் முதல் 18 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவிற்கு தேவையான ஆவணங்கள்:

• ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை

• சாதி சான்றிதழ்

• வருமான சான்றிதழ்

• நிரந்தர முகவரி விவரங்கள்

• கடந்த ஆறு மாதங்களின் வங்கி அறிக்கை

• படிவம் 16A வருமான வரி மதிப்பீட்டு ஆணை

• கட்டுமான ஒப்பந்த விவரங்கள்.

EWS & LIG பிரிவினருக்கு கடன் விபரம்:

• EWS பிரிவினருக்கு ஆண்டு வருமானம் 3 லட்சம் வரை இருக்கவேண்டும். LIG பிரிவினராக இருந்தால் ஆண்டு வருமானம் 3லட்சம் முதல் 6 லட்சம் வரை இருக்கலாம். இந்த இரண்டு பிரிவினருக்கும் 6.5 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.

• இந்த இரண்டு பிரிவினருக்கும் அதிகப்படியாக 6 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

• அதாவது அவர் ஆறு லட்சம் ரூபாய்க்கு வீடு கட்டுகிறார் என்றால் அதில் 6.5% மானியம் என்று வைத்துக் கொண்டால்  2,67,280/- வரை மானியம் வழங்கப்படுகிறது.

• இவர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை மாதம் ரூபாய் 2,250/- என்று 20 ஆண்டுகள் ( EMI ) வரை செலுத்தலாம்.

• EWS பிரிவினர் 30 சதுர அடி வரை வீடு கட்டிக் கொள்ளலாம்

• LIG பிரிவினர் 60 சதுர அடி வரை வீடு கட்டிக் கொள்ளலாம்.


MIG I பிரிவினருக்கு கடன் விபரம்:

இந்தப் பிரிவினருக்கு ஆண்டு வருமானம் 6 லட்சம் முதல் 12 லட்சம் வரை இருக்க வேண்டும் அவர்களுக்கு மானியத் தொகையாக 4% சதவீதம் வழங்கப்படும். மேலும் இவர்களுக்கு கடன் ஆனது 9 லட்சம் வரை வழங்கப்படும்.

அவர்கள் வாங்கிய 9 லட்சத்திற்கு 4% சதவீதம் மானியம் என்று வைத்துக்கொண்டால் அவர்களால் 2,35,068/-  வரை மானியம் வழங்கப்படும். இவர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை மாதம் ரூபாய் 2,250/-  என்று 20 ஆண்டுகள் (EMI) வரை செலுத்தலாம். MIG I பிரிவினர் 160 சதுர அடி வரை வீடு கட்டிக் கொள்ளலாம்.

MIG II பிரிவினருக்கான கடன் விபரம்:

இந்தப் பிரிவினருக்கு ஆண்டு வருமானம் 12 லட்சம் முதல் 18 லட்சம் வரை இருக்க வேண்டும் அவர்களுக்கு மானியத் தொகையாக 3% சதவீதம் வழங்கப்படும். மேலும் இவர்களுக்கு கடன் ஆனது 12 லட்சம் வரை வழங்கப்படும்.

அவர்கள் வாங்கிய 12 லட்சத்திற்கு 3% சதவீதம் மானியம் என்று வைத்துக்கொண்டால் அவர்களால்  2,30,156/– வரை மானியம் வழங்கப்படும். இவர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை மாதம் ரூபாய் 2,200/-  என்று 20 ஆண்டுகள் (EMI) வரை செலுத்தலாம். MIG II பிரிவினர் 200 சதுர அடி வரை வீடு கட்டிக் கொள்ளலாம்.

இந்ததிட்டத்தில் எங்கு வீடு கட்டலாம்: 

மாநகரம், நகரம், பேரூராட்சி, டவுன் பஞ்சாயத்து என இந்தியா முழுவதும் வீடு கட்டுபவர்களுக்கு/ புதிய வீடு வாங்குபவர்களுக்கு இந்த வட்டி மானியம் வழங்கப்படுகிறது. வீட்டுக்கான உரிமையில் குடும்பத்தலைவிக்கு முக்கியத்துவம் இருக்கவேண்டுமென்பதை உறுதிப்படுத்தும்விதமாக இந்தத் திட்டத்தின் விதிமுறைகள் இருக்கின்றன. வீட்டுக்கு உரிமையாளராகவோ அல்லது இணை உரிமையாளராகவோ குடும்பத்தலைவி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. குடும்பத்தலைவரின் பெயரில் அந்த வீடு இருக்கும்பட்சத்தில், குடும்பத்தலைவியை துணை விண்ணப்பதாரராகவோ அல்லது உத்தரவாதம் அளிப்பவராகவோ காட்ட வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.

PMAY திட்டத்தின் கீழ் வீட்டுக் கடன்கள் வழங்கும் வங்கிகள்: 

• எஸ்பிஐ

• பஞ்சாப் நேஷனல் வங்கி

• பேங்க் ஆஃப் பரோடா

• ஹெச்டிஎஃப்சி பேங்க்

• ஆக்சிஸ் பேங்க்

• ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க்

• பந்தன் பேங்க்

• பேங்க் ஆஃப் இந்தியா

• ஐடிபிஐ பேங்க்

• கனரா வங்கி

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி: 

• நீங்கள் ஆவாஸ் யோஜனா திட்டத்துக்குத் தகுதி பெற்றிருந்தால் இத்திட்டத்தின் http://pmaymis.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் செல்லவும்.

• மெயின் மெனுவின் கீழ் உள்ள 'Citizen Assessment' என்பதைக் கிளிக் செய்து விண்ணப்பதாரர் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.

• அதன் பின்னர் வரும் திரையில் உங்களது ஆதார் விவரங்களைப் பதிவிட வேண்டும்.

• உங்களது தனிப்பட்ட விவரங்கள், வருமானம், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் தற்போதைய குடியிருப்பு முகவரியுடன் ஆன்லைன் PMAY விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும்.

• CAPTCHA குறியீட்டை உள்ளிட்டு விவரங்களைச் சரிபார்த்துச் சமர்ப்பிக்கவும்.

• உங்களது விண்ணப்ப நிலவரத்தை Track your Assessment Status என்ற வசதியில் சென்று நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.