இந்தியாவில் குறு மற்றும் சிறு தொழில்களை (MSME) தொடங்குவதற்கும், அவற்றை லாபகரமாக வளர்ப்பதற்கும் நிதி உதவி மிகவும் அவசியமான ஒன்றாகும். புதிய உற்பத்தி ஆலைகளை அமைக்கவும், இயந்திரங்களை வாங்கவும், வணிகத்தை விரிவுபடுத்தவும் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படுகிற MSME கடன் திட்டம் தொழில் முனைவோருக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இத்திட்டத்தின் முக்கிய விதிகள், தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய விரிவான தகவல்களை இந்தப் பதிவில் காண்போம்.
1. கடனின் முக்கிய அம்சங்கள் மற்றும் அளவுகோல்:
தவணைக்காலம்:
இக்கடனைத் திருப்பிச் செலுத்த குறைந்தபட்சம் 36 மாதங்கள் முதல் அதிகபட்சம் 120 மாதங்கள் வரை (10 ஆண்டுகள் வரை) அவகாசம் வழங்கப்படுகிறது.
அதிகபட்ச தொகை:
திட்ட மதிப்பில் 75% வரை அல்லது அடமான சொத்து மதிப்பில் 50% வரை அதிகபட்சமாக ரூ. 20,00,000/- வரை கடன் பெறலாம்.
வட்டி விகிதம்:
மாநில பதிவாளர் மற்றும் வங்கியின் வட்டி நிர்வுக்குழுவால் அவ்வப்போது நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதம் பொருந்தும். தவணை தவறும் கடன்களுக்குக் கூடுதலாக 2% அபராத வட்டி வசூலிக்கப்படும்.
2. கடன் பெறத் தகுதியானவர்கள் மற்றும் தொழில்கள்:
தகுதி பெற்றவர்கள்:
தனிநபர்கள் மற்றும் சிறு தொழில் உரிமையாளர்கள் இக்கடனைப் பெறத் தகுதி உடையவர்கள் ஆவர்.
செய்யக்கூடிய காரியங்கள்:
1. உற்பத்தி சார்ந்த தொழில்கள்.
2. சேவை சார்ந்த தொழில்கள்.
3. தொழிற்கூடம் கட்டுதல்.
4. எந்திரங்கள் மற்றும் துணைக்கருவிகள் கொள்முதல் செய்தல்.
5. தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் தொடக்க காலச் செலவுகள்.
3. சமர்ப்பிக்க வேண்டிய தேவையான ஆவணங்கள்:
MSME கடன் பெற விண்ணப்பிக்கும்போது பல முக்கிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்:
பொது ஆவணங்கள்:
முறையான விண்ணப்பப் படிப்பு, விலைப்புள்ளி (புதிய இயந்திரங்கள் வாங்குவதற்கான சான்று), மற்றும் உதயம் சான்றிதழ் (Udyam Certificate)
திட்ட அறிக்கை (Project Report):
திட்டத்தின் மூலம் வருமானம் ஈட்டி, அதிலிருந்து கடனைத் திருப்பிச் செலுத்தும் வகையில் வலுவான திட்ட அறிக்கை இருக்க வேண்டும். மேலும், மஞ்துதாரரின் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமான வரி / நிரந்தர கணக்கு எண் (PAN) நகல் மற்றும் முந்தைய மூன்று ஆண்டுகளின் வருமான வரி தாக்கக்கல் செய்த விபரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
சொத்து மற்றும் இட ஆவணங்கள்:
மின் இணைப்பிற்கான மின்சார அலுவலக சான்று, தொழிற்கூடம் அமைந்துள்ள இடத்திற்கான பட்டா, பத்திரம், சிட்டா அடங்கல் 'அ' பதிவேடு நகல், வரைபட நகல் மற்றும் அடமான சொத்திற்கு 31 வருடங்களுக்குரிய வில்லங்கச் சான்று. அடமான சொத்து கட்டிடமாக இருந்தால் வங்கி பொறியாளரிடம் மதிப்புச் சான்றும், அரசு வழிகாட்டு மதிப்புச் சான்றும் அளிக்க வேண்டும்.
அனுமதிகள்:
மாவட்ட தொழில் மையத்திடம் உரிய அனுமதி பெற்று இணைக்க வேண்டும். மேலும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதிச் சான்று மற்றும் தொழிற்துறை அலுவலரின் சான்றும் இணைக்கப்பட வேண்டும்.
4. கடன் அனுமதி மற்றும் பகிர்வு முறை (Loan Disbursement) :
ஒருங்கிணைந்த கடன் (Integrated Loan):
தொழிற்கூடம் அமைக்க, இயந்திரம் வாங்க மற்றும் நடைமுறை மூலதனம் ஆகிய மூன்றும் சேர்த்து ஒரே விண்ணப்பத்தின் மூலம் கடன் அனுமதிக்கப்படும்.
பட்டுவாடா முறை:
முதன்மையாக தொழிற்கூடம் அமைக்கவும், இரண்டாவதாக இயந்திர சாதனங்கள் வாங்கவும், மூன்றாவதாக நடைமுறை மூலதனத்திற்கும் முறையே கட்டம் கட்டமாகத் தொகை பட்டுவாடா செய்யப்படும்.
இயந்திரம் நிறுவுதல்:
இயந்திர சாதனங்கள் வாங்குவதற்காக அனுமதிக்கப்பட்ட கடன் தொகை, அந்தந்த நிறுவனத்திற்கு வங்கி வரைவோலை (Demand Draft) மூலம் வழங்கப்படும். இந்தத் தொகை வழங்கப்பட்ட 2 மாத காலத்திற்குள் இயந்திரங்களை நிறுவி உற்பத்தியைத் தொடங்க வேண்டும்.
5. முக்கிய நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள்:
கணக்குகளைப் பராமரித்தல்:
கடன் பெறும் நபர் அல்லது நிறுவனம் தனது கணக்குகளைப் பதிவேடுகளில் முறையாகப் பதிந்து வரவேண்டும். மேலும், ஆண்டுதோறும் தணிக்கை செய்யப்பட்ட சொத்து பொறுப்புப் பட்டியலை வங்கிக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
கட்டுப்பாடுகள்:
கடன் முழுமையாகத் தீரும் வரை வங்கியின் அனுமதி இன்றி வேறு எந்த நிறுவனத்திற்கோ அல்லது பங்குத் தொகை வழங்கவோ, நிறுவனத்தை விரிவுபடுத்தவோ அல்லது மாற்றியமைக்கவோ கூடாது. மேலும், கடன் தீரும் வரை வேறு எந்த வங்கியிடமும் கடன் பெறவோ, அடமானச் சொத்துக்களில் வில்லங்கம் ஏற்படுத்தவோ கூடாது.
ஆய்வு அறிக்கை:
வழங்கப்பட்ட கடன் சரியான நோக்கத்திற்காகத் தான் பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக, கிளை மேலாளர்கள் மற்றும் கள மேலாளர்கள் ஒவ்வொரு காலாண்டிற்கும் நேரில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.
முடிவுரை:
குரு மற்றும் சிறு தொழில் முனைவோர்கள் தங்களது வணிகத்தை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தவும், புதிய தொழில்நுட்பங்களை உட்கொள்ளவும் இந்த MSME கடன் திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. முறையான ஆவணங்களைச் சமர்ப்பித்து, வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம் தொழில் துறையில் மகத்தான வெற்றியை அடைய முடியும்.