பணத்தை சேமிக்க சிறந்த வழிகள் என்ன. Best Money Saving Ideas Details In Tamil.


ஒரு ரூபாய் சேமிப்பது என்பது ஒரு ரூபாய் சம்பாதிப்பதற்கு சமம். சம்பாதிப்பது கடினம். ஆனால், சம்பாதித்த பணத்தை சேமிப்பது என்பது எளிதான விஷயம்தான். அதனால் தான், சில சராசரியான சம்பளம் வாங்குபவர்கள் சிலர், சேமிப்பின் பழக்கத்தினாலும், முதலீட்டின் காரணமாகவும், அதிக சம்பளம் வாங்கி, சேமிக்காதவர்களை விட, நல்லதொரு தொகையை ஓய்வு காலத்திற்கு ஒதுக்கி, ஓய்வு காலத்தை நிம்மதியாக கழிக்கிறார்கள்.

நாம் அனைவரும் நிதி ரீதியாக பாதுகாப்பாக இருக்க விரும்புகிறோம், ஆனால் ஒரு சிலரே அவ்வாறு இருக்கிறார்கள். பணத்தை சேமிப்பது என்பது ஒவ்வொரு நபரும் பழக்கமாக இருக்க வேண்டிய ஒன்று! ஆனாலும், பலர் குறைவாக சேமிக்கவும் அதிக செலவு செய்யவும் முனைகிறார்கள். 

                        
 பணத்தைச் சேமிக்கும் உதவிக்குறிப்புகள்: 

உங்கள் செலவை பதிவு செய்யுங்கள் உங்கள் செலவைப் பதிவு செய்வது பணத்தைச் சேமிக்க நீங்கள் செய்ய வேண்டிய முதல் அடிப்படை படியாகும். ஒரு மாதத்திற்கு, நீங்கள் சரிபார்த்து, நீங்கள் செய்த அனைத்து வகையான செலவுகளையும் பதிவு செய்யுங்கள். இதைச் செய்வதன் மூலம், நீங்கள் எவ்வளவு செலவு செய்கிறீர்கள், அதில் உங்கள் செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது பற்றிய ஒரு யோசனை உங்களுக்கு இருக்கும். முதல் படியைப் பின்பற்றுவது உங்களை இரண்டாவது படிக்கு அழைத்துச் செல்லும்.

பட்ஜெட்டை உருவாக்குங்கள்: 

உங்கள் செலவுகளுக்கு ஏற்ப உங்கள் மாதாந்திர பட்ஜெட்டை உருவாக்கத் தொடங்குங்கள். பட்ஜெட்டை உருவாக்குவதற்கான முக்கிய காரணம் உங்கள் செலவினங்களைக்  கட்டுப்படுத்துவதும் ஆகும். பணத்தை மிச்சப்படுத்துவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, சம்பளத் தொகையை தெளிவான செலவுத் தலைகளாகப் பிரிப்பது.  சாதாரணமாக வீட்டில் குடும்ப பட்ஜெட் எவ்வாறு உருவாக்கலாம் என் அறிய.

ஒருவர் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பது முக்கியம்தான். ஆனால், அதனை விட, சம்பாதித்த பணத்தில் எவ்வளவு சேமிக்கிறார் என்பது முக்கியம். அதனை விட, சேமித்த பணத்தில் எவ்வளவு முதலீடு செய்கிறார் என்பது முக்கியம்.
எளிதாக பணத்தை சேமிக்க பல வழி உள்ளன. அவற்றைப் பார்ப்போம்;
வெளியில் உணவகத்தில் சாப்பிடுவதற்கு பதிலாக, வீட்டிலேயே உணவு தயாரித்து உண்ணுங்கள். 

உணவகத்தில் ஒரு பொருளுக்கு கொடுக்கும் விலை மிக அதிகம்.
உதாரணமாக, 1 கிலோ கிராம் கோதுமை மாவின் விலை ரூ. 37. அதில் உங்களால் தோராயமாக 30 சப்பாத்தி செய்ய முடியும். ஒரு சப்பாத்திக்கு நீங்கள் கொடுக்கும் விலை. 30/37 = 81 பைசா. ஒரு சப்பாத்தி வீட்டினருகில் இருக்கும் சாதாரண உணவகத்தில் கூட, குறைந்தபட்சம் ரூபாய். 10. எனவே, நீங்கள் வீட்டிலேயே சப்பாத்தி தயாரிப்பதனால், ஒரு சாப்பாத்திக்கு 9 ரூபாய் 19 காசு சேமிக்கிறீர்கள்.

இருக்கும் துணிகளை கொஞ்சம் கிழிந்தால், தைத்து மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்துங்கள். புதிய துணிகளுக்கு கொடுக்கும் விலை அதிகம். உதாரணமாக, நீங்கள் 500 ரூபாய் செலவழித்து ஒரு சட்டை தைத்துக் கொள்கிறீர்கள். அதில் ஒரு சிறிய இடத்தில் தையல் விட்டுப் போய் விட்டது. அதனை சரி செய்ய நீங்கள் 30 ரூபாய் செலவு செய்ய வேண்டும். ஆனால், புது சட்டை வாங்க மறுபடியும் ரூபாய். 500 செலவாகும். 30 ரூபாய் தையல் கூலியின் மூலம், நீங்கள் ரூ. 470 மிச்சம் செய்கிறீர்கள். இது துணிக்கு மட்டுமல்ல. வீட்டின் எந்த ஒரு உபகரணத்திற்கும் பொருந்தும். 

புது உபகரணம் வாங்கும் முன், இருக்கும் உபகரணத்தை பழுது பார்த்து மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்த, புதிய உபகரணத்திற்கான செலவு குறையும். செலவில்லாத பொழுதுபோக்குகளை கைகொள்ளுங்கள். சினிமா, உணவகம் சென்றால்தான் பொழுதுபோக்கு அல்ல. கடற்கரை, கோயில், வீட்டின் தொலைகாட்சியின் சினிமா, நூலகம் என்று செலவில்லாத பொழுது போக்கிற்கான வழிகளை தேர்ந்தெடுங்கள்.

Latte Effect கண்டறிந்து, அதனை வெல்லுங்கள்:

 Latte Effect என்பது தினசரி ஒருவர் காபி கடைக்கு சென்று அருந்துகிறார். அவர் வீட்டிலேயே தினமும் காபி அருந்தினால், அதிகம் சேமிக்க முடியும். உதாரணமாக, வெளியே செல்லும் போது, தினமும் காலை மாலை காபி அருந்த, அவர் ரூபாய். 20 x 2 = ரூபாய். 40 செலவிடுகிறார். அதனை வீட்டில் அருந்தும் போது, அவருக்கு ரூபாய். 10 ஆகிறது என்று கணக்கில் கொண்டால், அவர் தினமும் மிச்சம் பிடிக்கும் பணம் ரூபாய். 30. ஒரு மாதத்தில் சேமிக்கும் பணம். ரூபாய். 30 x 30 = ரூபாய். 900. ஒரு வருடத்தில் சேமிக்கும் பணம் ரூபாய். 900 x 12 = ரூபாய். 18000. இது காபி மட்டுமல்ல, சிகரெட், பாக்கு என்று எந்த ஒரு பழக்கமாகவும் இருக்கலாம். சிறிய பணமானது தொடர்ந்து செலவாகும் போது, மிகவும் பெரியதாக மாறுகிறது. சிகரெட் போன்ற சில பழக்கங்கள் பணம் மட்டுமன்றி, உடல் நலத்திற்கும் பங்கம் விளைவிக்கும்.

 சேமிக்க பழகுங்கள்: 

மின்சார சேமிப்பு, மின்சார கட்டண சேமிப்பு மட்டுமல்ல. நாட்டின் மின்சாரப் பற்றாக்குறையினையும் சீர் செய்ய, உங்களால் முடிந்த ஒரு பங்கினை ஆற்ற முடியும். மளிகைப் பொருட்களை வாங்குவதில் எவ்வாறெல்லாம் மிச்சம் பிடிக்க முடியுமோ பாருங்கள். எந்தக் கடையில் தரமான, விலைக் குறைவான பொருட்கள் கிடைக்கின்றன என்று கண்டு, சில்லரையாக வாங்குவதை விட, மொத்தமாக வாங்கி சேமிக்கப் பாருங்கள்.  சிறந்த சேமிப்பு சேமிப்பு திட்டமிடல் பற்றி அறிந்து கொள்ளவும்.

தரமான பொருட்களை வாங்குங்கள்:

தரமற்றப் பொருட்கள் அடிக்கடி பழுது பார்க்க அல்லது புதிதாக மாற்ற நேர்ந்து, அதிக பணத்தை இழக்க நேரிடும். உபகரணங்களை நன்றாக பராமரியுங்கள். நன்றாக பராமரிக்கப்பட்ட உபகரணங்கள், பழுதாவதற்கு வாய்ப்பு குறைவு. பழுது சரிபார்க்க, செலவிடும் தொகை மிச்சமாகும். தேவையற்ற சந்தாக்களிலிருந்து வெளியே வாருங்கள். உதாரணமாக, நீங்கள் ஏதேனும் ஒரு மாத, வார பத்திரிகை சந்தா வைத்திருக்கலாம். அதனை நீங்கள் படிக்க நேரமில்லாத பட்சத்தில் அதனை ரத்து செய்யுங்கள்.

தினசரி பத்திரிக்கைகள்  படிப்பதற்கு பதிலாக, இணையத்தில் நீங்கள் செய்திகளைப் படிக்கலாம்.
புதிதாக பொருள் வாங்குவதற்கு பதிலாக, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பொருளை வாங்குவதன் மூலம், பணம் சேமிக்கலாம். olx, quikr போன்ற தளங்களில் பொருளை வாங்கலாம். பணத்தை மட்டுமல்ல, ஒரு பொருளின் மறு சுழற்சியின் மூலம், நீங்கள் சுற்றுப்புறத்தினையும் காக்கிறீர்கள்.

எந்த ஒரு பெரிய பொருள் செலவையும் இணையத்தில் அலசி, ஆராய்ந்து, விழாக்காலத் தள்ளுபடி அல்லது சலுகை சார்ந்த குறைந்த பணத்தில் வாங்கப் பாருங்கள். எடுத்தேன் , கவிழ்த்தேன் என்று வாங்காதீர்கள். இவ்வாறு அலசி ஆராய்ந்து, தள்ளுபடி விலையில் வாங்கும் போது, பணம் சேமிக்க முடியும்.

உணர்ச்சிவயப்பட்ட வாங்குதலைத் தவிருங்கள்: 

புதிதாக ஒரு கைபேசி வருகிறது. எல்லாரும் அதனை சிலாக்த்துப் பேசுகிறார்கள் என்று உணர்ச்சிவயப்பட்டு வாங்காதீர்கள். உங்களது தேவை சார்ந்து வாங்குங்கள்.
யாருக்காவது நீங்கள் கொடுக்கும் பரிசுப் பொருளினை, பரிசு அட்டையினை, நீங்களே தயாரித்துக் கொடுக்க முடியுமா என்று பாருங்கள். நீங்களே தயாரிக்கும் போது, அதில் பணம் சேமிப்பது மட்டுமன்றி, உங்களது தனிப்பட்ட அக்கறை வெளிப்படுகிறது.

விழா சார்ந்த பொருட்களை, விழா முடிந்தப் பின்பு வாங்கப் பாருங்கள். உதாரணமாக, பட்டாசு மொத்தமாக முன்கூட்டியே வாங்காமல், தீபாவளி அன்று, அதற்கு அடுத்த நாளில் விலைக் குறைவில் வாங்க முடியும்.
விதிவிலக்கு சமயங்களைத் தவிர, யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். கடன் கொடுத்தப் பணம் பெரும்பாலும் திரும்புவதில்லை. மேலும், அன்பை முறிக்கிறது.
தொலைக்காட்சியில் நீங்கள் பார்க்காத கட்டணம் சார்ந்த சேனல்களை நீக்கி விடுங்கள்.
நடந்து செல்லக் கூடிய இடங்களுக்கு நடந்து செல்லுங்கள். முடிந்த அளவு பொது போக்குவரத்தினை பயன்படுத்துங்கள். தனிப்பட்ட போக்குவரத்திற்கு, அதிகம் பணம் செலவாகும். ஒரு இடத்திற்கு செல்ல, பேருந்து, ரயில், மகிழ்வுந்து போன்றவற்றில் எதில் சென்றால் பணம் சேமிக்க முடியும் என்று திட்டமிட்டு பிராயணம் செய்யுங்கள்.

சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் போது, அதன் பிரத்யேக சீசனில் செல்லாமல், அதற்கு கொஞ்சம் முன்போ, கொஞ்சம் பிந்தியோ செல்லுங்கள். லாட்ஜ் தங்கும் செலவு குறையும். உதாரணமாக, ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு கோடைக்கு கொஞ்சம் முன்போ அல்லது கோடை முடிந்து, இலையுதிர்காலத்திலோ செல்ல தங்கும் செலவு குறையும்.

கடன்களை சீக்கிரம் கட்டி முடியுங்கள்: 

கடனிற்கு வட்டிக்கு செலுத்தும் தொகையினை சேமிக்க முடியும்.
எந்த ஒரு பொருளினையும் வீணாக்காதீர்கள். வீணாகப்பட்ட பொருள் பணத்திற்கு சமம். உதாரணமாக, நீங்கள் உணவினை வீணாக்கினால், அது பணத்தை வீணாக்கியதற்கு சமம்.
எந்த ஒரு கெட்டுப் போகும் பொருளினையும் கெட்டு விடுதற்கு முன்பே உபயோகப்படுத்துங்கள்.
நகரின் மையத்தில், பணக்காரப் பகுதிகளில் குடியிருக்காமல், புறநகர் பகுதிகளில் குடியிருங்கள். புறநகர் பகுதிகளில் வாடகை, பொருட்களின் விலைகள் குறைவு. உதாரணமாக, நகரின் மையத்தில், பணக்கார பகுதிகளில் ஒரு கிலோ கொய்யா பழத்தின் விலை ரூபாய். 50 என்றால், புறநகர் பகுதிகளில் ரூபாய். 30 என்று இருக்கும்.

வீட்டிலேயே தோட்டம் அமைத்து காய்கறிகள் வளர்ப்பதன் மூலம், காய்கறிகளுக்கான செலவினை சேமிக்கலாம். பிராயணங்களின் போது, உணவினை வீட்டிலேயே தயாரித்துக் கொண்டு செல்வதன் மூலம், பணத்தினை மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்தையும் சேமிக்கலாம்.
பழைய புத்தக கடை, நூலகங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். மிகவும் பிடித்த, அடிக்கடி படிக்க நினைக்கும் புத்தகங்களை மட்டும் வாங்குவதன் மூலம், புத்தகங்களுக்கான பணத்தினை சேமிக்கலாம்.

புத்தகங்களில் ஆங்கில பதிப்பை விட, தமிழ் மொழியாக்கம் செய்யப்பட்ட பதிப்பு விலை குறைவு. தமிழில் புத்தகத்தை கொண்டு வந்த பதிப்பகத்தை ஊக்குவித்த மாதிரியும் இருக்கும். உங்களது செலவுகளில் வீடு, வாகனம் இரண்டும் மிக அதிக செலவுகள். உங்களது தேவை சார்ந்த வீட்டினை, வாகனத்தினை வாங்குங்கள். இவை இரண்டிலும் எவ்வளவு பணத்தை சேமிக்க முடியுமோ, சேமிக்கப் பாருங்கள்.
கைபேசி, தொலைக்காட்சி போன்ற சந்தாக்களை மொத்தமாக கட்டுவதன் மூலம் பணத்தை சேமிக்க முடியும். மாத சந்தாவை விட, ஆண்டு சந்தா பணம் குறைவு.

• அதிக கட்டணம் வாங்கும் பள்ளிக் கூடங்களை விடவும், அதிக பணம் வசூலிக்காமல், சேவை மனப்பான்மை உள்ள கல்வி நிறுவனங்களில் குழந்தைகளை படிக்க வையுங்கள்.

• பேடிஎம், ஃபோன் பே போன்ற ஒருங்கிணைக்கப்பட்ட பண பரிமாற்றுத் தளங்களில்(UPI) உள்ள சலுகைகளை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.

• காப்பீட்டுத் திட்டங்களில், தனித்தனியாக குடும்ப நபர்களுக்கு Individual Plan எடுப்பதற்கு பதிலாக, குடும்பம் சார்ந்த குறைவான காப்பீட்டுத்திட்டங்களுக்கு Floating Plan மாறி, பணம் சேமியுங்கள்.

• ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை Life Insurance விட, காலவரை சார்ந்த காப்பீட்டுத் திட்டங்களை Term Insurance பயன்படுத்தி, பணம் சேமியுங்கள்.
Term Insurance- ன் நன்மைகள் பற்றிய முழு விவரங்கள்.

• பங்கு சந்தை, பரஸ்பர நிதி முதலீடுகளில் அதிக தரகர் கட்டணம் வாங்கும் நிறுவனங்களைத் தவிர்த்து பணம் சேமியுங்கள்.

• உங்களால் செய்ய முடிந்த வேலையை வெளியில் செய்யாமல், பணத்தை சேமியுங்கள். 
உதாரணமாக, உங்கள் துணியை நீங்களே இஸ்திரி செய்வதன் மூலம், வெளியே இஸ்திரி செய்வதற்கான செலவைத் தவிர்க்கலாம்.

• எந்த ஒரு பொருளினையும், முதலாவது இடத்தில் உள்ள நிறுவனத்தில் அதிக பணம் கொடுத்து வாங்குவதை விட, தரமான பொருளை அளிக்கும் இரண்டாவது, மூன்றாவது இடத்தில் உள்ள நிறுவனத்தில் வாங்குங்கள். 

• பணம் சேமிப்பது மட்டுமல்ல, ஏகபோகம் அல்லாது, சந்தையில் பல்வேறு நிறுவனங்கள் பங்கு பெரும் ஆரோக்கிய சந்தையினை உருவாக்க உங்களது பங்கினை அளிக்கிறீர்கள்.

• மிகப் பெரிய மருத்துவமனை என்று செல்லாமல், உங்களது வீட்டின் அருகிலுள்ள நல்ல ஒரு மருத்துமனைக்கு செல்ல, மிக அதிக பணச் செலவு தவிர்க்கப்படும்.

• எங்கு சென்றாலும், ஒரு தண்ணீர் பாட்டிலை கொண்டு செல்லுங்கள். வெளியே தண்ணீர், பானங்கள் வாங்குவதை அது தவிர்க்கும்.
சுற்றுலா செல்லும்போது, வேலை நாட்களில், விடுப்பு எடுத்து பிராயணம் செய்யுங்கள். வார இறுதி நாட்களில் பிராயணத்தொகைகள் அதிகம்.

• இவை மட்டுமல்ல, வரவு செலவு கணக்கு வைத்திருங்கள். உங்களுடைய ஒவ்வொரு செலவையும் ஆராய்ந்து, எவ்வாறு குறைக்க முடியும் என்று ஆராய்ச்சி செய்து, குறையுங்கள்.

ஒரு ரூபாய் சேமிப்பது என்பது ஒரு ரூபாய் சம்பாதிப்பதற்கு சமம் - இதில் எனக்கு மாற்றுக்கருத்து உள்ளது. எனது சம்பளத்தில் சராசரியாக 25% வரியாக பிடித்தம் செய்யப்படுகிறது. ஆதலால் நான் ஒரு ரூபாய் சம்பாதிப்பது என்பது 0.75 ரூபாய் சேமிப்பதற்கு சமம் என்று முடிக்கலாம் என்றால் வீட்டு கடன் தவணை, பயன்பாட்டு பில்கள் 
நீங்கள் சொல்வது மிகவும் சரி. உங்களுடைய கணக்கின் படி நீங்கள் ஒரு ரூபாய் சேமிப்பது என்பது ஏழு ரூபாய் சம்பாதிப்பதற்கு சமம். அப்போது ஒரு ரூபாயை நாம் வீணாக செலவழிக்கும் நேரம் வந்தால்,  இதனை மறுபடி சேமிக்க நாம் ஏழு ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.