ELSS Mutal Fund என்றால் என்ன? ELSS Mutual Funds Detail In Tamil.

ELSS Fund-களில் முதலீடு செய்வதற்கு முக்கியக் காரணம், வரிச் சேமிப்பு. நீங்கள் 30% வரி வரம்பில் இருந்தால், ரூ.1.50 லட்சம் முதலீடு செய்யும் போதே 45,000 ரூபாயைச் சேமித்துவிட்டீர்கள். ஆக முதலீட்டிலிருந்து உங்களுக்கு வருமானம் வருகிறதோ இல்லையோ, வரிச் சேமிப்பே முதல் சேமிப்பாகிவிடுகிறது. ஆகவே, நிறைய முதலீட்டாளர்கள் ELSS Fund-களில் முதலீட்டை விருப்பத்துடன் முதலீடு செய்வார்கள்.

ELSS Mutual Fund-களில் மொத்த நிதியில் 80 சதவிகிதம் Equity சார்ந்த முதலீடுகளாக இருக்க வேண்டும். நிதி அமைச்சகத்தின் அனுமதி உடன் தங்கள் Fund-களை ELSS  திட்டத்தின் கீழ் காட்டுவார்கள். இந்த ELSS Fund-ல் போடும் பணத்தை போட்ட தேதியில் இருந்து 3 ஆண்டுகளுக்கு Lock In Period உள்ளதால் பணத்தினை எடுக்க முடியாது.

Tax Benefit பெற வேண்டும், அதோடு நல்ல வருமானமும் கிடைக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு சரியான முதலீட்டு திட்டம் இந்த ELSS தான். இந்த ELSS திட்டத்தின் கீழ் இப்போதைக்கு 29 Funds இருக்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில், மேலே சொன்ன 29 Fund-களில் 6 ஃபண்டுகள் தவிர மற்ற அனைத்து ஃபண்டுகளும் 8.5 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் ஈட்டித் தருகின்றன. அதிகபட்சமாக 14.82 சதவிகித வருமானத்தைக் கொடுத்திருக்கிறது.

                          
இந்த ELSS மியூச்சுவல் ஃபண்டுகள் வழியாக திரட்டப்படும் பணத்தின் 80% பணம் Equity சார்ந்த திட்டங்களில் தான் முதலீடு செய்வார்கள். இந்த ELSS ரக மியூச்சுவல் ஃபண்டில், ஒரு நிதி ஆண்டில் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து வருமான வரிக் கழிவு பெறலாம். இது 80C பிரிவின் கீழ் வருவதால், மற்ற எல்லா கழிவுகளுடன் சேர்த்து தான் ELSS திட்டத்தில் முதலீடு செய்து இருக்கும் பணமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

பங்குச் சந்தை சார்ந்த சேமிப்பு திட்டமான ELSS – Equity Linked Savings Scheme Fund-ல் முதலீடு செய்தால் வருமான வரியை மிச்சப்படுத்த முடியும். இந்த ஃபண்டில் போட்ட முதலீட்டை மூன்று ஆண்டுகள் வெளியில் எடுக்கமுடியாது. மாதம் குறைந்தபட்சமாக 500 ரூபாயிலிருந்து முதலீடு செய்யலாம்.

ELSS யாருக்கு ஏற்றது: 

இந்த ELSS ஃபண்டில் முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் நிதியானது பங்குச் சந்தையில் முதலீடு செய்யப் படுவதால் வருமானம் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தைச் சார்ந்திருக்கும். அந்த வகையில், முதலீட்டின் மீது ரிஸ்க் எடுக்க கூடியவர்களுக்கு ஏற்றதாக இந்த ஃபண்ட்  இருக்கிறது. ஆனால், நீண்ட காலத்தில் இந்த ரிஸ்க் என்பது பரவலாக்கப்பட்டுவிடுகிறது.

ELSS செய்யப்பட்ட முதலீட்டை அதன் Lock in Period மூன்றாண்டுகள் முடிந்ததும் பெரும்பாலோர்  எடுத்துவிடுகிறார்கள்.  அது தேவை இல்லை. பணத்தை எடுக்கும்போது முதலீடு எவ்வளவு வளர்ந்திருக்கிறது, எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதையறிந்து எடுப்பது அவசியம். நீங்கள் எடுக்க நினைக்கும்போது, முதலீட்டு மீதான வருமானம் குறைவாக இருந்தால் சந்தை ஏறும் வரை காத்திருந்து எடுப்பது லாபகரமாக இருக்கும். 

இந்த ஃபண்டில் செய்த முதலீட்டைக் குறைந்தபட்சம் 5 முதல் 8 ஆண்டுகளுக்காவது தொடர்ந்தால் நல்ல லாபம் பார்க்க முடியும். ELSS வகை   Mutual Fund- களில் எவ்வாறு முதலீடுகள் செய்யலாம் என்பதை அறிய.

கவனத்தில் கொள்ளவேண்டிய 5 விஷயங்கள்: 

இந்த ஃபண்டில் ரிஸ்க்கைக் குறைக்க கீழ்க்கண்ட ஐந்து விஷயங்களை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்வது அவசியமாக உள்ளது.

1. தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டுவரக்கூடிய பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் ELSS ஃபண்டைத் தேர்வுசெய்து முதலீடு செய்யுங்கள்.

2. நீங்கள் தேர்வு செய்திருக்கும் ELSS ஃபண்ட் குறைந்த பட்சம் ஐந்து வருடங்களுக்கு மேல் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.

3. முதலீட்டுக்குத் தேர்வு செய்யும் ஃபண்ட் மூலம் நிர்வகிக்கப்படும் தொகை குறைந்தது 1,000 கோடி ரூபாய்க்கு மேலாக இருக்க வேண்டும்.

4. கடந்த காலங்களில், தொடர்ந்து பல்வேறு கால கட்டங்களில் நல்ல வருமானம் தந்திருக்கவேண்டும்.

5. முதலீட்டை இரண்டு அல்லது மூன்று ELSS  ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்வது நல்லது. 



ELSS Fund ஏன் சிறந்தது: 

குறைவான லாக்கின் பிரீயட்: 

• PPF திட்டத்தின்‌ Lock in Period 15 வருடங்கள்.

• Bank Tax Free Fixed Deposit Lock in Period- 5 வருடங்கள்.

• தேசிய சேமிப்புப் பத்திரத்தின் Lock in Period- 5  வருடங்களாக உள்ளது. 

• ELSS ஃபண்டில் மட்டும் குறைவான Lock in Period 3 ஆண்டுகளாக இருக்கிறது.

வருமானத்தை இடையில் குறைவான வரியுடன் பெறும் வாய்ப்பு:

இந்தத் திட்டத்தில் டிவிடெண்ட் ஆப்ஷனைத் தேர்வு செய்திருக்கும்பட்சத்தில் இடையிடையே தரப்படும் Dividend 10 சதவிகித விநியோக வரி பிடிக்கப்படும்.

இதர வரிச் சேமிப்புத் திட்டங்களில் (PPF தவிர்த்து) அந்தந்த நிதி ஆண்டில் சேரும் வருமானத்துக்கு அடிப்படை வருமான வரி வரம்புக்கு ஏற்ப அதிகபட்சம் 30% வரை வரி கட்ட வேண்டி வரும்.

அதிக வருமானத்துக்கு வாய்ப்பு:

• PPF திட்டத்தில் முதலீடு செய்தால் ஆண்டிற்கு  8% வட்டி கிடைக்கும். PPF திட்டத்தில் முதலீடு செய்யும் வழிமுறைகளை அறிய.

• Bank Tax Savings Fixed Deposit -ல் ஆண்டிற்கு 6.5% 

• தேசிய சேமிப்பு பத்திரம் ஆண்டிற்கு 8% என தற்போதைய நிலையில் ஆண்டுக்கு வட்டி வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், கடந்த மூன்றாண்டு  காலத்தில் டாப் 10 ELSS ஃபண்டுகள் ஆண்டுக்கு 16% முதல் 23% வருமானம் கொடுத்திருக்கின்றன. இதுவே ஐந்தாண்டு காலத்தில் 17% முதல் 21% வருமானம் கொடுத்திருகின்றன. ஆரம்பம் முதல் 17% முதல் 25% வரை இந்த ஃபண்ட் மூலம் வருமானம் கிடைத்திருக்கிறது. மேலே கண்ட வருமானங்களின்படி,  கிட்டத்தட்ட அனைத்துக் காலங்களிலும் ELSS Mutual Fund இரட்டை இலக்கத்தில் நல்ல வருமானத்தை கொடுத்திருக்கின்றன.

சந்தை இறங்கிய காலத்தில் நல்ல வருமானம்:

அண்மைக் காலத்தில் சந்தை மிக அதிகமாக இறங்கியிருக்கும் நிலையிலும், இந்த ஃபண்ட் மூலமான வருமானம் மூன்றாண்டு காலத்திலும் இரட்டை இலக்க வருமானத்தைத் தந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

How To Buy A Good Stock Instruction For Beginners - சிறந்த பங்கை தேர்வு செய்வது எப்படி?



ELSS  – டைவர்சிஃபைட் ஃபண்ட்:

இந்த ELSS Fund-களில் Risk இருந்தாலும், அது நீண்ட காலத்தில் குறைக்கப்பட்டு விடுகிறது. காரணம், இந்த ஃபண்டின் முதலீட்டு கலவை ஆகும். அடிப்படையில் ELSS ஃபண்ட் ஒரு டைவர்சிஃபைட் ஃபண்ட் ஆகும். இந்த ஃபண்டில் திரட்டப்படும் நிதி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல்வேறு நிறுவனப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்யப்படுகிறது.
மேலும், இந்த ஃபண்டில் போட்ட பணத்தை முதலீட்டாளர்கள் மூன்றாண்டுகளுக்கு எடுக்க முடியாது என்பது இந்த ELSS Fund நிர்வகிக்கும் நிதி மேலாளர்களுக்கு சாதகமான விஷயமாக இருக்கிறது. அதாவது, முதலீடு மூன்றாண்டுகளுக்கு வெளியேறாது என்பதால், முதலீடு வளர காலம் கிடைக்கிறது. 

அந்த வகையில்தான் இந்த ELSS Fund சிறப்பான வருமானத்தைக் கடந்த  காலங்களில் தந்திருக்கிறது எனலாம். வருமான வரி விவரங்கள்
இந்த ELSS Fund மூலம் கிடைக்கும் Dividend, வருமானம் மற்றும் நீண்ட கால ஆதாயத்துக்கு கடந்த 2018 ஏப்ரல் மாதத்துக்கு முன்புவரை வருமான வரி எதுவும் இல்லாமல் இருந்தது. அதன்பிறகு இந்த ELSS Fund கொடுக்கப்படும் Dividend -க்கு விநியோக வரி 10% கொண்டு வரப்பட்டுள்ளது.

நீண்ட கால மூலதன ஆதாயம், நிதி ஆண்டில் ரூ.1 லட்சத்துக்கு மேற்படும்போது நிபந்தனைக்கு உட்பட்டு 10% வருமான வரிக் கட்ட வேண்டிவரும்.
ஒருவர் செய்திருக்கும் Equity Mutual Fund -கள் மூலமான ஆதாயம் ஒரு நிதியாண்டில் ரூ.1 லட்சத்தைத் தாண்டும்போது, இந்த 10% வரி கட்ட வேண்டும். எப்போது யூனிட்களை விற்று பணமாக்குகிறீர்களோ, அப்போதுதான் இந்த வரியைக் கட்ட வேண்டும் என்பது முதலீட்டாளர்களுக்குச் சாதகமான அம்சம்.

பொதுவாக இந்த வகை Mutual Fund-களில்  பெரும்பாலும் மாதச் சம்பளம் வாங்கும் நபர்கள்தான் அதிகமாக முதலீடு செய்து வருகிறார்கள். 

சிறந்த ELSS fund's:

• Axis Long Term Equity Fund,
• Invesco India Tax Plan, 
• DSP Tax Saver Fund, 
• BNP Paribas Long Term Equity Fund, 
• IDFC Tax Advantage Fund ஆகியவை 10 ஆண்டுகளுக்கு நல்ல வருமானத்தை ஈட்டிக்கொடுத்த சில ELSS திட்டங்கள் ஆகும்.