NAV என்றால் என்ன? What Is Net Asset Value & Definition.

குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் செயல்திறன் நிகர சொத்து மதிப்பு (NAV) என்று குறிப்பிடப்படுகிறது. சுருக்கமாக, NAV என்பது திட்டம் உடைமையாகக் கொண்டுள்ள செக்யூரிட்டிகளின் சந்தை மதிப்பு ஆகும். முதலீட்டாளர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட பணத்தை, மியூச்சுவல் ஃபண்ட்ஸ், செக்யூரிட்டி சந்தைகளில் முதலீடு செய்திடும். சந்தையின் மதிப்பு நாளுக்கு நாள் மாறுபடும் என்பதால், NAV -யின் மதிப்பும் தினசரி மாறுபடும். ஒரு யூனிட்டுக்கான NAV மதிப்பானது, குறிப்பிட்ட நாளிலான திட்டத்தின் செக்யூரிட்டிகளின் சந்தை மதிப்பை, திட்டத்தின் மொத்த யூனிட்களின் எண்ணிக்கையால் வகுக்கக் கிடைக்கும் மதிப்புக்குச் சமமாக இருக்கும்.

                    
Net Asset Value என்பது சொத்தின் நிகர மதிப்பு. இது பரஸ்பர நிதியின் சொத்தின் ஒரு Unit -இன் மதிப்பு.

எவ்வாறு கணக்கிடப்படுகிறது: 

புதிதாக தொடங்கப்படும் பரஸ்பர நிதியில்(New Fund Offer) சொத்தின் நிகர மதிப்பு;

பரஸ்பர நிதியானது, ஒரு நிதி மேலாண்மை நிறுவனத்தினால், பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தை பெற்று, நடத்தப்படுகிறது. உதாரணமாக, புதிதாக தொடங்கப்படும் ஒரு பரஸ்பர நிதி, ரூபாய். 1 லட்சம் பணம் பல முதலீட்டாளர்களிடமிருந்து, திரட்ட விரும்பினால், 

ஒரு அலகு ரூபாய். 100 என்று நிர்ணயித்தால்,

மொத்த அலகுகளின் எண்ணிக்கை: 

மொத்த சொத்து மதிப்பு = ரூபாய். 1,00,000

ஒரு அலகின் விலை நிர்ணயம் = ரூபாய். 100

மொத்த அலகுகளின் எண்ணிக்கை = 1,00,000 / 100 = 1,000 அலகுகள்

புது பரஸ்பர நிதியின், சொத்தின் நிகர மதிப்பு = மொத்த சொத்தின் மதிப்பு / அலகுகள் எண்ணிக்கை
புது பரஸ்பர நிதியின் சொத்தின் நிகர மதிப்பு = 1,00,000 / 1000 = ரூபாய். 100

எனவே, 1,000 அலகுகள், ஒவ்வொன்றும் ரூபாய். 100 என்ற வீதம், பரஸ்பர நிதியினால் விற்கப்படுகிறது. அதாவது, ஒரு லட்ச ரூபாய் சொத்தின், 1000 பங்குகளில், ஒரு பங்கின் விலை ரூபாய். 100. இதுவே, சொத்தின் நிகர மதிப்பு எனப்படுகிறது. Mutual Funds என்றால் என்ன? /How To Choose The Right Mutual Fund In Tamil

ஏற்கனவே உள்ள பரஸ்பர நிதியில் சொத்தின் நிகர மதிப்பு: 

முன்பு குறிப்பிட்ட பரஸ்பர நிதியின் 1 லட்ச ரூபாய், சொத்தானது, ஒரு வருடத்திற்கு பின்னர், 10% வளர்ச்சி பெற்று, ரூபாய். 1,10,000 ஆகிறது என்று கணக்கில் கொள்வோம். இப்போது, சொத்தின் நிகர மதிப்பு எவ்வளவு என்று பார்ப்போம்.

மொத்த சொத்து மதிப்பு = ரூபாய். 1,10,000

மொத்த அலகுகள் = 1,000

சொத்தின் நிகர மதிப்பு = மொத்த சொத்தின் மதிப்பு / அலகுகள் எண்ணிக்கை

ஒரு அலகின் விலை = 1,10,000 / 1000 = ரூபாய். 110

இவ்வாறு, சொத்தின் மதிப்பு கூடிய காரணத்தினால், அலகின் விலையும் கூடி விட்டது. தினம் தினம் சொத்தின் நிகர மதிப்பு அறிவிக்கப்பட வேண்டும்.

சொத்தின் நிகர மதிப்பானது, தினமும் பங்கு சந்தையின் முடிவில், பரஸ்பர நிதி நிறுவனத்தால் கணக்கிடப்பட்டு அறிவிக்கப்படுகிறது. அடுத்த நாள் பங்கு சந்தை முடிவு வரை இது மாறாது.

மொத்த சொத்தின் மதிப்பு = பரஸ்பர நிதியின் சொத்து - பரஸ்பர நிதியின் கடன்கள்

பரஸ்பர நிதியின் சொத்தின் நிகர மதிப்பு = மொத்த சொத்தின் மதிப்பு / மொத்த பங்குகள்(அலகுகள்)
சொத்தின் நிகர மதிப்பு (ஒரு அலகு விலை) = 1,10,000 / 1000 = ரூபாய். 110 என்று முடிவாகும்.

முதலீட்டாளர் அலகுகளை வாங்குவது: 

உதாரணமாக, ஒரு முதலீட்டாளர், இந்த பரஸ்பர நிதியில், 10 அலகுகள் வாங்க எண்ணினால், பரஸ்பர நிதி நிறுவனமானது, அவரிடமிருந்து, 10 x 110 = 1100 ரூபாய் பெற்றுக் கொண்டு, பரஸ்பர நிதியின் சொத்துடன் இணைத்து விடும். இப்போது, அவரும் பரஸ்பர நிதியின் மற்றுமொரு பங்குதாரராக மாறிவிட்டார். இப்போது, பரஸ்பர நிதியின் மொத்த அலகுகளின் எண்ணிக்கை 100 + 10 = 110 என்று ஆகிவிடும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்குக் கவனிக்க வேண்டிய அம்சங்கள் | Mutual Fund Details.

முதலீட்டாளர் அலகுகளை விற்பது: 

உதாரணமாக, பரஸ்பர நிதியின் பங்குதாரர், தனது 5 பங்குகளை விற்க எண்ணினால், அதனை பரஸ்பர நிதி நிறுவனமே, திரும்ப பெற்றுக் கொண்டு, அதற்கான தொகையை முதலீட்டாளரிடம் கொடுத்து விடும். 5 x 110 = 550 ரூபாய். முதலீட்டாளரிடம் திரும்ப கொடுத்துவிட்டு, பங்கின் மொத்த அலகுகளின் எண்ணிக்கையில், 5 ஐ கழித்து விடும். இப்போது, பரஸ்பர நிதியின் மொத்த அலகுகளின் எண்ணிக்கை 100 - 5 = 95 அலகுகள்
இவ்வாறு, சொத்தின் நிகர மதிப்பானது, அலகுகளுக்கு ஏற்றவாறு, தினம் தினம் கணக்கிடப்படுகிறது.

SEBI ஆனது Mutual Fund -இன் ஒழுங்குமுறைகளுக்கு ஏற்ப, அனைத்து மியூச்சுவல் ஃபண்ட்ஸ் திட்டங்களின் NAV களும், வர்த்தக நாளின் முடிவில் அறிவிக்கப்படும்.