முதலீடுகள் பற்றிய முக்கிய தகவல்கள் | Important Information about Investments.

எப்போது நீங்கள் நிதி ரீதியான சுதந்திரத்தை அடைகிறீர்களோ, அப்போது முதல், நீங்கள் நிம்மதியை உணரலாம். உங்களது கடைசி காலம் வரையிலான தொகையை நீங்கள் அடையும் பட்சத்தில், வேலையில் உங்கள் மேலதிகாரி கொடுக்கும் அச்சுறுத்தல்களுக்கு பயப்பட வேண்டியதில்லை. இன்னும் சொல்லப் போனால், உங்களுக்கு பிடித்த தொழிலுக்கு கூட நீங்கள் மாறலாம். 

தொடரவுள்ள வாழ்க்கையை வாழ முடியும், எந்த ஒரு பிரச்சனையையும் சமாளிக்க கூடிய நிதியை நீங்கள் ஏற்கனவே அடைந்துவிட்டீர்கள். இதை ஆங்கிலத்தில், Early Retirement, விருப்ப ஓய்வு என்று கூறுவார்கள். சமுதாய பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ளலாம். அல்லது, வேலையை பழு இன்றி அதன் மகிழ்ச்சிக்காக மட்டுமே செய்யலாம். இதுவே, தனி மனித நிதியின் உச்சகட்ட இலக்கு.

சேமிப்பு: 

சேமிக்கும் பழக்கம் இல்லாதவர்களால் முதலீடு செய்ய முடியாது. முதலில் சேமிக்கும் பழக்கத்தைக் கொண்டு வாருங்கள். தங்கள் வருமானத்துக்கு ஏற்றாற்போல் ஒரு தொகையை சேமிப்புக்கு என்று ஒதுக்குங்கள்.

வருமான வரி விலக்கு : 

Income Tax கட்டுபவர்கள், ஒரு குறிப்பிட்ட தொகைக்கு விலக்கு பெறமுடியும். உதாரணத்திற்கு நீங்கள் செய்யும் சில முதலீடுகளுக்கு, நன்கொடைக்கு நீங்கள் வரிவிலக்கு பெறமுடியும். இவற்றைப் பற்றி இணையத்தில் படித்து அறிந்து பயன் பெறுங்கள். இந்தியாவில் வரி சேமிப்பு திட்டங்கள் என்ன Tax Savings Plan In India.

அவசர கால நிதி (Emergency Fund) என்பது மிக மிக முக்கியம்: 

அவசர கால நிதி என்பது, உங்களுடைய அவசரத் தேவைகளுக்கு, பிறரிடம் கையேந்தாமல், கடன் வாங்காமல், நீங்களே சமாளிப்பதற்கு உதவுவது. இது உங்களுடைய எதிர் கால முதலீடுகளுக்கு பங்கம் விளைவிக்காமல், அவசரத் தேவைகளை பார்த்துக் கொள்ள உதவுவது.திடீரென்று வீட்டின் அவசர மராமத்து வேலைகள், வீட்டு உறுப்பினரின் உடல் நலக் குறைவு, திடீரென்று வேலை இழத்தல் போன்றவை யாருக்கும் நிகழலாம். 

உங்களிடம் அவசர கால நிதி இல்லையென்றால், இப்போதே தொடங்குங்கள். குறைந்தபட்சம் ரூபாய் 10,000 ல் ஆரம்பித்து, உங்களுடை மாத செலவின் 3 மடங்கு முதல் 6 மடங்கு வரை சேமித்து வைத்திருப்பது நலம். இதனை முதலீடு செய்ய வேண்டாம். அவசர காலத்தில், உடனே வங்கியை பயன்படுத்தி, எடுக்குமாறு வைத்திருக்கப்படவேண்டும்.

EMI கலாச்சாரம் வேண்டாம்:

EMI கலாச்சாரம் உங்களை அதிகம் செலவு செய்யவைக்கும் கலாச்சாரம். EMI உங்களை சேமிக்க விடாது. ஏற்கனவே குறிப்பிட்டது போல், சேமிக்காதவர்களால் முதலீடு செய்ய முடியாது.

அவசியம் இருப்பின், கடன் வாங்குவது தவறல்ல: 

வீடு வாங்குதல், தொழில் தொடங்குதல் போன்ற மிக முக்கியமான செலவுகளுக்கு கடன் வாங்குவது தவறல்ல. கடன் இன்றி வீடு வாங்குதல்/கட்டுதல், தொழில் தொடங்குதல் பலருக்கும் சாத்தியப்படாது. சொகுசுப் பொருட்களுக்காக கடன் பெறுவதைத் தவிர்ப்பது நல்லது.

முதலீடுகளுக்கு வரி உண்டு:

 நீங்கள் செய்யும் பெரும்பாலான முதலீடுகளின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு நீங்கள் வரி கட்ட வேண்டும். வரி இல்லாத சில முதலீடுகளும் உள்ளன. வருமான வரியைச் சேமிக்க சிறந்த வழிகள் | Ways To save Income Tax Details In Tamil.

பிறருக்கு பண உதவி செய்யுங்கள்:
உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பண உதவி தேவைப்பட்டால் தாராளமாக செய்யுங்கள். அதுவும் கல்வி, மருத்துவம் போன்ற முக்கியத் தேவைகளுக்கு உதவி கேட்டால் உதவி செய்யத் தயங்க வேண்டாம். பணம் சேர்ப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் நல்ல மனிதர்களைச் சேர்ப்பதும். அது உங்களுக்கு நீங்கள் எதிர்பாராத வகையில் பயன்கொடுக்கும். கடனாகக் கொடுக்கிறீர்கள் என்றால் யாரிடம் கொடுக்கிறோம் என்பதை பார்த்துக் கொடுங்கள். யார் திருப்பிக் கொடுப்பார்கள், யார் கொடுக்கமாட்டார்கள் என்று உங்களுக்கே தெரியும். சில உதவி, எந்த எதிர்பார்ப்பும் இன்றி செய்யுங்கள்.

கௌரவம் என்ற பெயரில் பொருட்கள் வாங்காதீர்கள்:

 பலரும் மகிழுந்து போன்றவற்றைப் பெருமைக்காக வாங்குகிறார்கள். எனக்குக்கீழ் வேலை பார்ப்பவர் கூட Car வைத்து இருக்கிறார். என் உறவினர்கள் எல்லாம் Car வைத்து உள்ளனர். நான் மட்டும் எப்படி வாங்காமல் இருப்பது என்று எண்ணி சக அழுத்தம் (peer pressure) காரணமாக பலர் செலவு செய்கின்றனர். Car போன்ற பெரிய செலவுகளை அவசியம் இருந்தால் மட்டுமே செய்யுங்கள். கௌரவத்திற்காக செய்யாதீர்கள்.

காப்பீடு: 

காப்பீட்டுத் திட்டத்தை(Insurance) முதலீட்டுடன் குழப்பிக்கொள்ளாதீர்கள். காப்பீட்டுத் திட்டமென்பது, குடும்பத்தின் சம்பாதிக்கும் நபர், திடீரென்று இறக்க நேரிட்டால், குடும்பம் அவர்களை சமாளித்துக் கொள்வதற்கு உதவ பணம் கொடுப்பது. இதற்கு, கால வரையான காப்பீட்டுத் திட்டம் (Term Insurance Plans) சிறந்தது.  சிறந்த காப்பீட்டு திட்டங்கள் எது அதன் நன்மைகள். Best Life Insurance Policy Details In Tamil.

குடும்பத்தின் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப, காப்பீட்டுத் திட்டத்தை தேர்ந்தெடுங்கள். உதாரணமாக, குடும்பத்தலைவர் 60 வயது வரை உயிர்வாழ்ந்தால் எவ்வளவு பணம் மாதம் செலவுக்கு அவர் கொடுத்திருப்பாரோ, ஏறக்குறைய அவ்வளவு பணத்திற்கான காப்பீட்டுத் திட்டத்தை தேர்ந்தெடுப்பது நல்லது. காலவரையான காப்பீட்டுத் திட்டத்தை தவிர மற்ற பங்குச் சந்தை சார்ந்த காப்பீட்டுத் திட்டங்களோடு, அல்லது முதலீடு சார்ந்த காப்பீட்டுத் திட்டங்களோடு இதை குழப்பிக் கொள்ளாதீர்கள்.

செலவைக் குறைக்கும் உத்தி: 

சிறிய சிறிய செலவுகள் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டாம். பெரிய செலவுகளை எப்படி குறைப்பது என்று பாருங்கள். பலர் தான் செய்யும் சின்ன சின்ன செலவுகளை எண்ணி வருத்தம் கொள்வர். அதைக் குறைக்க முயற்சி செய்வார்கள். ஆனால், அவர்கள் செய்த 10 சின்ன செலவுகளைச் சேர்த்து பார்த்தல் கூட அவர் செய்த ஒரு அவசியமற்ற பெரிய செலவைக்க காட்டிலும் குரைவாகவே இருக்கும்.

புரியாதவற்றில் முதலீடு செய்ய வேண்டாம்: 

பலரும் பங்குச் சந்தைகளிலும், பரஸ்பர நிதிகளிலும் (share market) அவற்றைப் பற்றி முழுமையாக புரிந்து கொள்ளாமல் முதலீடு செய்கிறார்கள். இது சற்றே அபாயகரமானது. உங்களுக்கு புரியாத எதிலும் மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக முதலீடு செய்யாதீர்கள்.

உங்களில் முதலீடு செய்யுங்கள்: 

உங்களின் திறன்களை மேம்படுத்த சற்றே செலவு ஆகும் என்றாலும் பரவாயில்லை. செய்யத் தயங்காதீர்கள். தாராளமாக செய்யுங்கள். அவை உங்கள் தொழில்முறை வாழ்க்கையில் முன்னேற உதவும். என்னதான் நீங்கள் சேமித்தாலும், முதலீடு செய்தாலும் உங்கள் வருமானத்தை இருமடங்கு உயர்த்தும் ஆற்றல் கொண்டது நீங்கள் உங்களில் செய்யும் முதலீடு மட்டுமே.