80C மூலம் வரி சேமிப்புக்கான சிறந்த வழிகள் | Best Tax deduction Section 80C tax Benefits.

ஒரு சிறிய திட்டமிடல் மூலம், வரியின் பெரும்பகுதியை நீங்கள் சேமிக்க முடியும், அரசாங்கமே இதற்கு பல வழிகளை வகுத்துள்ளது,  80C கீழ்  வருமான வரிக்கு விலக்கு பெறும் வழிகளைப் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம், இதன் மூலம் நீங்கள் ஆண்டுக்கு ரூ .1.5 லட்சம் அளவிற்கு வரி சேமிக்க முடியும்.

பொது வருங்கால வைப்பு நிதி (PPF)

பொது வருங்கால வைப்பு நிதி என்பது அரசாங்க சேமிப்பு திட்டமாகும். நீங்கள் அனைத்து வங்கிகளிலும் தபால் நிலையங்களிலும் முதலீடு செய்யலாம். 15 வருட காலம் Lockin உடையது. அதன் வட்டி விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டிலும் மாறுகின்றன. இது 8 சதவீதத்திற்கும் அதிகமான வட்டி கிடைத்து வந்தது, ஆனால் இப்போது அது 7.1 சதவீத வட்டி கிடைக்கிறது. PPF மூலம் கிடைக்கும் வட்டிக்கும் வரி விலக்கு உண்டு. PPF Account என்றால் என்ன? How To Open PPF Account In Tamil


ஈக்விட்டியுடன் இணைந்த சேமிப்பு திட்டம் (ELSS)

ஈக்விட்டி இணைந்த சேமிப்பு திட்டங்கள் அதாவது ELSS முதலீட்டின் சிறந்த வரி சேமிப்பு முதலீடாக கருதப்படுகிறது. அதன் லாக் இன் காலம் 3 ஆண்டுகள். அதன் மூலதன வருமானத்தில் 10% நீண்ட கால மூலதன வருமான வரி விதிக்கப்படுகிறது. LTCG ஒரு நிதியாண்டில் ரூ .1 லட்சம் வரை ரிடம்ஷனுக்கு வரி விலக்கு உண்டு. இதற்கு மேல் செல்லும் போது 10 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதில் 80 சதவீத தொகை பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது. ELSS Mutal Fund என்றால் என்ன? ELSS Mutual Funds Detail In Tamil.

80c-section-income-tax-saving-ppf-fd- small-savings-schems-tamil-money-tamil-share-market-penny-stocks-sbi-bank-tamil-nanayam-vikadan-

சுகன்யா சம்ருத்தி யோஜனா (SSA)

பெண்களை பெற்ற பெற்றோருக்கு அரசின் திட்டம் மிகவும் பயன் அளிக்கும். இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் 10 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணுக்கு சுகன்யா சம்ருத்தி யோஜனா கணக்கைத் திறக்கலாம். இந்த திட்டத்தின் காலம் 21 ஆண்டுகள் அல்லது 18 ஆண்டுகளுக்குப் பிறகு அவள் திருமணம் செய்து கொள்ளும் வரை. இது EEE என்ற பிரிவின் கீழ் வருகிறது, அதாவது முதலீடு, வட்டி மற்றும் முதிர்ச்சி காலத்தில் பெரும் தொகை என எதற்கும் வரி விதிக்கப்படுவதில்லை. PPF போன்ற திட்டமாகும். ஆண்டுக்கு ரூ .250 முதல் ரூ .1.5 லட்சம் முதலீடு செய்து இந்தத் திட்டத்தைத் தொடங்கலாம். தற்போது, ​​இதற்கு 7.6% வட்டி கிடைக்கிறது.

தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC)

 NSC யில் செய்யப்படும் முதலீட்டிற்கு  ஆண்டுதோறும் 6.8% வட்டி கிடைக்கிறது. இது மிகவும் பாதுகாப்பான முதலீடு ஆகும். நீங்கள் NSC-யில் முதலீடு செய்யக்கூடிய தொகைக்கு வரம்பு ஏதும் இல்லை. ஆனால் ஒரு நிதியாண்டில் ஒருவர் ரூ .1.5 லட்சம் வரை மட்டுமே வரி விலக்கு கோர முடியும்.

ஆயுள் காப்பீட்டு திட்டம்

ஆயுள் காப்பீட்டுக் திட்டங்களில் பல வகைகள் உள்ளன. குறிப்பிட்ட காலத்திற்கான காப்பீடு, ULIP மற்றும் எண்டோவ்மென்ட் பாலிஸி ஆகிய காப்பீட்டு திட்டங்களின் மூலம் நீங்கள் ஆண்டுக்கு ரூ .1.5 லட்சம் வரி வரை சேமிக்க முடியும். இதற்காக, காப்பீட்டுத் தொகை ஆண்டு பிரீமியத்தின் 10 மடங்கு என்ற அளவில் இருக்க வேண்டும். Term Insurance என்றால் என்ன? Term Insurance Benefits In Tamil

பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF)

ஆர்கனைஸ்ட் செக்டாரில் பணிபுரியும் ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் வருவாயில் 8.5% EPF செலுத்துகிறார்கள். 80 C இன் கீழ்,  ஆண்டுக்கு 1.5 லட்சம் வரை வரியை சேமிக்கலாம்.

தேசிய ஓய்வூதிய திட்டம் ( NPS )

இது ஒரு தன்னார்வ அடிப்படையிலான ஓய்வூதிய திட்டம். அதில் முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் ஓய்வுக்கு பிறகு பணம் பெறுவதோடு,  ஓய்வு பெற்ற பிறகு மாத ஓய்வூதியமும் பெறலாம். இதில், நீங்கள் 2 லட்சம் ரூபாய் வரை வரியை சேமிக்க முடியும். 80C -யின் கீழ் நீங்கள் ரூ .1.5 லட்சம் வரை வரியை சேமிக்க முடியும், ஆனால் 80CCD (1B) -இன் கீழ் ரூ.50,000 கூடுதல் வரியையும் சேமிக்க முடியும். தேசிய ஓய்வூதியத் திட்டம் - NPS Scheme Details Tamil | Open NPS Account Online.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் 5  ஆண்டுகளுக்கானது. இந்த திட்டம் 60 வயதைத் தாண்டியவர்களுக்கான திட்டம். பொதுவாக, அதன் வட்டி விகிதங்கள் FD ஐ விட அதிகமாக இருக்கும். ஏப்ரல்-ஜூன் காலாண்டில் அதன் வட்டி விகிதம் 6.5% ஆகும்.

நிலையான வைப்பு நிதி  (FD)

5 வருட காலத்திற்கான நிலையான வைப்புத்தொகையில் முதலீடு செய்தால், ரூ .1.5 லட்சம் வரை வரியாக சேமிக்க முடியும். தற்போது, ​​அத்தகைய FD களில் 6-7%  வரை வரி கிடைக்கிறது. வரி சேமிப்பிற்கான FDகளுக்கு பிரிவு 80C கீழ் மட்டுமே விலக்கு அளிக்கப்படுகிறது.

வீட்டுக் கடன் திருப்பிச் செலுத்துதல் 

வீட்டுக் கடனின் கடன் தவணையை நீங்கள் செலுத்தும் போது, அதில் இரண்டு பாகங்கள் உள்ளன.  முதல் அசல் தொகை மற்றும் இரண்டாவது வட்டி. பிரிண்சிபல் அதாவது அசல் தொகையில், 80C கீழ் ஆண்டுக்கு ரூ .1.5 லட்சம் வரை சேமிக்க முடியும். வட்டிக்கு தனி வரி ஆதாயமும் கிடைக்கும். வீட்டுக் கடன் ‌என்னும் ‌நீண்ட கால சேமிப்பு திட்டம் | Home loan Is A Investment Plan.

கல்வி கட்டணம்

குழந்தைகளின் கல்விக்கான கல்விக் கட்டணத்திற்கு நீங்கள் , 80C கீழ் ரூ .1.5 லட்சம் வரை வரி விலக்கு கோரலாம்.