திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நகைக்கடன் திட்டம் |TDCC Bank Gold Loan.

நகைக்கடன் என்பது ஒரு பாதுகாப்பான கடன் திட்டங்களில் ஒன்று. திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில்  உங்களது நகைகளை அடமானமாக வைத்து, அதற்கேற்ப உள்ள சந்தை மதிப்பை வைத்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம். நகைகளை மீட்பதற்கான காலக்கெடு ஓராண்டாக இருக்கும் நிலையில், அதற்குள்ளாக வட்டியுடன் பணத்தை செலுத்தி நகைகளை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

நீங்கள் தங்க நகையை திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு  கடன் வாங்குவதற்காக எடுத்துச் சென்றால், அங்குள்ள நகை மதிப்பீட்டாளர், உங்களுடைய நகையின் தரத்தினை மதிப்பிடுவார்கள், மேலும் நீங்கள் கடன் வாங்கக்கூடிய கடன் தொகையை உங்களுக்கு தெரியப்படுத்துவார்கள்.

co-operative bank gold loan

நகையின் மதிப்பில் 75% கடன்:

ரிசர்வ் வங்கி வகுத்துள்ள நெறிமுறைகளின்படி, தங்க நகையின் மதிப்பில் 75% வரை கடனாகக் கொடுக்கலாம். இந்தக் கடன், நகை மதிப்பு சதவிகிதத்துக்கு ஏற்றபடி வட்டி விகிதமும் தீர்மானிக்கப்படும்.

நகை கடன் வட்டி கணக்கிடுவது எப்படி:

நகை கடனுக்கு எவ்வளவு வட்டி வரும் என்பதும் எத்தனை மாதம் தங்களது நகையை வைத்திருக்க வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

Tdcc bank jewel loan

திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்ற வங்கி அல்லது தனியார் நிறுவனங்களை போன்று கூட்டு வட்டி அல்லது மாத வட்டிகளுக்கு அடகு வைப்பது கிடையாதுகூட்டுறவு வங்கிகளில் தனிவட்டி முறையில் மட்டுமே கடன்கள் வழங்கப்படுகின்றன.

(நாள்X வட்டிவிகிதம் %Xஅசல்/வருடம்) 

31X 9.25% X 1,00,000/365 நாட்கள்

உதாரணம்: ஒரு மாதத்திற்கான நாள் என்பதை 31 என்று வைத்து கொள்ளுங்கள் வட்டிவிகிதத்தை 9.5% என்று வைத்து கொள்ளுங்கள். அசல் 1,00,000 என்று வைத்து கொள்ளுங்கள். ஒரு வருடம் என்பதை 365 நாட்கள் என்றும் வைத்து கொள்ளுங்கள்.

31 X 9.25% X (1,00,000/365) = 786

1,00,000 ரூபாய்க்கு ஒரு மாதத்திற்கான வட்டி 807 ரூபாய் என்று கணக்கிட்டால் ஒரு ஆண்டிற்கே 9428 ரூபாய் மட்டுமே வட்டி வசூல் செய்யப்படுகிறது. இந்த தனிவட்டி முறையில் தான் கூட்டுறவு நகை கடன் வட்டி கணக்கிடப்படுகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் திட்டங்கள்.

நகை கடன் அளவு: 

ஒருவர் அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய் வரை நகைக் கடன் பெற முடியும். தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப கடன் தொகையும் மாறுபடும். தற்போது கிராமுக்கு சுமார் 3000 முதல் 3300 ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.

பத்திரங்களையும் ஆவணங்களையும் போல் அல்லாமல் சில நிமிடத்தில் தங்க நகையின் தரத்தையும் மதிப்பையும் சோதித்து அறிந்து கொள்ள முடியும். இந்த கையில் நகையைக் கொடுத்து அந்த கையில் பணத்தை எளிதாக வாங்கி கொள்ளளாம்.

வட்டி செலுத்தவில்லை என்றால் என்னவாகும்:

ஒரு வருட காலம் வரை தங்களது நகை வங்கியில் இருக்கும். நகையை திருப்ப முடியாதவர்கள் தங்களது நகைக்கு வட்டி செலுத்தி Renewal செய்து கொள்ளலாம். ஒரு வருடத்திற்குள் வட்டியை செலுத்தவில்லை என்றால் கூடுதல் வட்டி செலுத்த வேண்டி வரும்.

 நகை அடகு வைக்க – தேவைப்படும் ஆவணங்கள்:

திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் நகையை அடகு வைத்து கடன்கள் பெற வங்கி கணக்கு இருந்தால் மட்டும் போதுமானது வேறு எந்த கூடுதல் ஆவணங்களும் தேவைபடுவது கிடையாது.